in ,

மெய் போலத் தோன்றும் (சிறுகதை) – பீஷ்மா

2023-24 நாவல்-சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

வெயிலடித்துக் கொண்டிருக்கும் போதே, மழையும் பெய்து மனதை மயக்கியதொரு மத்யான வேளையில்., வாசலில் நீலக்கலர் ஃபியட் கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய இரண்டு பேரையும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கவே., எழுந்து போய் வாசல் கதவைத் திறந்து பார்த்தேன்.

அவ்விருவரும் இரண்டாம் மடியிலிருந்த லிஃப்ட் கீழே வருவதற்கு லிஃப்ட் பட்டனை அமுக்கிக் காத்திருந்தனர்.

என்னைப் பார்த்ததும், அவர்களில் சீனியர் மெல்லப் புன்னகைக்க., ஜூனியர் சற்று அகலமாகச் சிரித்து., “ஹாய் ஸார் !., உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்!., நீங்க எங்க இங்க?”

“இது என்னோட ஃபிளாட் தான்., நீங்க!”

சட்டென்று நினைவுக்கு வந்து ஆச்சர்யமாய் அவர்களைப் பிரமிப்புடன் பார்த்தேன்.,

“பீஷ்மா, ஹவ் ஆர் யூ!?”

சீனியர் முன்னால் வந்து என் கைகள் பற்றிக் குலுக்க, பிரமிப்பு கொஞ்சமும் அகலாமல் அவர்களை உள்ளே வரச் சொல்லி வரவேற்றேன்.

ஜூனியர், “பாஸ், இவரைப் பார்க்கத்தான் இப்ப இங்க வந்தோமா !?”

“சும்மா இர்றா” என்னைப் பார்த்து, ” இவன் எப்பவுமே இப்படித்தான்”

“தெரியுமே., இங்க என்ன விஷயமா!?”

“உங்க ஃபிளாட் ல ரெண்டாவது மாடில சித்ரான்னு இருக்காங்களா !?”

யோசித்தேன்., ஒரு மாடலிங் யுவதி., அவ்வப்போது director, producer, codirectorனு நேரம் காலமில்லாமல் வந்து ட்ராப் பண்ணுவார்கள்.

தூக்கத்தில் கூட make-up போடு தான் இருப்பாளோ என்று நினைக்குமளவு, கொஞ்சமும் அழகு குறையாமல் காட்சி அளிக்கும் அழகி.

அவளுக்கென்ன இப்போது?

“ஆமாம்”

“அவங்க தான் இப்ப எங்க க்ளையன்ட் ., பாஸ், வாங்க போய் அங்க பார்த்துட்டு அப்புறம் இவரைப் பார்க்கலாம்”

“அவங்களைப் பத்தி எதுவும் உங்களுக்குத் தெரியுமா?.., தெரிஞ்சதக் கொஞ்சம் சொல்லுங்க “

“பாஸ் இவரைப்பார்த்தா  ஆளு அழுத்தமாத் தெரியராரு., ஒண்ணும் பிரயோஜனம்  இருக்காது”

“டேய், சும்மா இர்ரா ! நீங்க சொல்லுங்க”

வாசலில் ஒரு சுகந்த நறுமணம் வீச., உள்ளே நுழைந்தாள் சித்ரா வெகு அழகாக.,

“பாஸ், இதோ வந்துட்டாங்களே நம்ம க்ளையன்ட் !., ஹாய்., உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே ! ஒரு சோப் விளம்பரத்தில.,குளிக்கப் போற டிரஸ்ல “

“கட் த ஜோக் ., Sir, என்ன இங்க வந்து நிக்கறீங்க ? நான் உங்களுக்கோசரம் மேலே”

“பீஷ்மா எங்களுக்குத் தெரிஞ்சவர் மா!., இதோ வர்றோம் ., ஓகே நீங்க என்னோட அசிஸ்டன்ட்டை உங்க கூட”

சொல்லி முடிக்கு முன், ” வாங்க., வாங்க நாம முதல்ல போகலாம்”

அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாய் அவளை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றவுடன்.,

“ம்ம்., இப்பச் சொல்லுங்க., கட் அண்ட் ஷார்ட் டா இந்தப் பொண்ணப் பத்தி”

என்ன சொல்ல!? சொல்ல ஆரம்பிக்கும் போது..,

சட்டென்று முழிப்பு வந்து திரு திரு வென்று விழித்தேன்.,வெளியில் மழை ஜோராய்ப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

ஜூர மாத்திரையின் எஃபெக்ட்டும், ஜூரத்தின் வேகமும் மழையில் புரியாததொரு கனவைத் தெளித்துச் சென்றது மெல்ல, மெல்லப் புரிய ஆரம்பித்தது.

என் ஜுரக்கனவில் வந்த இருவரும் யாரென்று சர்வ நிச்சயமாய் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்பும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காது குத்து கல்யாணம் ❤ (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்

    மீட்சி (சிறுகதை) – மலர் மைந்தன்