2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கதவு திறந்தவுடன் எதிர் சுவரிலிருந்து கடிகாரத்துக்கு வெளியே வந்த குக்கு பறவை 6 முறை இனிமையாக கூவி விட்டு சட்டென மறைந்தது.
பாண்டியை பாத்தான் தினேஷ்.
உக்காருங்கோ அவரை வரச் சொல்றேன் சொல்லி விட்டு உள்ளே மறைந்தாள் மாமி.
பாண்டி, “ பாஸ் கவனிச்சீங்களா மாமியை”.
ஏய் என்னடா?
மாமி திரும்பி நடக்கறப்ப கவனிச்சீங்களா? இந்த வயசுலயும் சரியான கட்டை,ரவிக்கைல பின் பக்கம் ஓபனிங்,ஒரு பட்டன் இல்லை, ஊக்கு போட்டிருக்கு(சேப்டி பின்).பின் பக்கம் மூணு ஊக்கு , தனக்குத் தானே எப்படி போட்டுக்க முடியும்?
“டேய் பாண்டி இது இந்த கேசுக்கு முக்கியமா? வந்த வேலையை பாருடா , கழட்ட தெரிஞ்ச மாமாவுக்கு மாட்டத் தெரியாதா”
ஜோதிட சிரோன்மணி சுந்தரேச ஐய்யர் நாலு நாள் முள் தாடியும் மேகமாய் சூழ்ந்த சோக முகமுமாய் வெளியே வந்தார்.
உக்காருங்கோ, சக்ரபர்த்தி சார்தானே? இது அசிஸ்டன்டா பேரு என்னடா அம்பி நோக்கு? கமிஷனர் சார் சொன்னார் நீங்க வருவேள்னு.எப்படியும் அந்த கொலைகாரப் பாவியை தூக்குல ஏத்துங்கோ. குழந்தையை சித்ரவதை பண்ணிருக்கானே கண் கலங்கி நீர் சிந்தியது.
”கண்டிப்பா ஜோசியரே, சுருக்கமா பெண்ணை பத்தியும், இதுவரை நடந்ததை சுருக்கமா சொல்லுங்க.”
கண்களை மேல் துண்டால் துடைத்துக் கொண்ட சுந்தரேச ஜோசியர்,”எங்களுக்கு ஒரே பொண்ணு கண்ணுக்கு கண்ணா வளத்தோம்.ரொம்ப புத்திசாலிப் பொண்ணு. ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்பா இன்னிக்கு நைட் என்னை டின்னருக்கு ஹோட்டல் கூட்டிண்டு போகணும்னு சொல்லிட்டு போனவ திரும்பவே இல்லை
அவர் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர்.மாரச்சுவரில உடம்பைதான் பாத்தோம்.”
பாண்டி கேட்டது,“ஐயா இந்த குக்கு கடிகாரம் நல்லா இருக்கே, ஸ்விஸ்ல இருந்து வாங்கிட்டு வந்தீங்களா?”
ஜோசியர் இப்ப இந்த கேள்வி எதுக்குன்ற மாதிரி அவனை வினோதமா பாத்து,“இல்லை என் ஜோசியத்துல மகிழ்ந்து ஒரு கட்சி தலைவர் விருப்பப் பட்டு கொடுத்தது சுசீலாக்கு ரொம்ப பிடிக்கும்”; வாஞ்சையுடன் கடிகாரத்தை பார்த்தார்.
தினேஷ், “அவர் யாருனு தெரிஞ்சிக்கலாமா?” முதலில் சற்று தயங்கின ஜோசியர் பிரதம எதிர் கட்சி தலைவர் பெரியணன் பெயரை மரியாதையாய் உச்சரித்தார்.
பெரியணன் ஐயா உங்களுக்கு ரொம்பநாள் பழக்கமா?
இல்லை சமீப காலமாதான் தெரியும், வர எலக்ஷன் தனக்கு சாதகமா இருக்குமானு கேக்க கூப்பிட்டிருந்தார், நான் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன், சாந்தி பரிகாரம் ஏதாவது செய்யணுமானு கேட்டார்.நான் அது சில சீனியர் மாந்ரீகாளை கேக்கணும்னு சொல்லி சில ஜோசியக்காரா பேரை சொல்லிட்டு வந்தேன்.
தினேஷ் , இதுக்கா “இவ்வளவு காஸ்ட்லி கடிகாரம் பரிசு? “ ,
“இல்லை இல்லை அவர் நம்பற அளவு வேற ஜோஷியக்காராளை பத்தி சிபாரிசு செஞ்சதில, உமக்கு பேராசை இல்லை ஜோசியரே உம்ம பெண்ணுக்கு இந்த சின்ன பரிசுனு 10 நாள் முன்னதான் இதை மாட்டிட்டு போனா.சுசீக்கு ரொம்ப பிடிக்கும்” இதை சொல்ற போதே அவர் பேச்சு நடுங்கியது.
சரி நீங்க பெரிசா நினைக்கற, நீங்க பெரியணன் ஐயாவுக்கு சிபாரிசு பண்ணின அந்த ஜோசியக்காரர்கள் பேரை சொல்ல முடியுமா?
அது வந்து தயங்கின சுந்தரேச ஜோசியர் பிறகு மெதுவா சொன்னார். உலக அளவில் பெயர் பெற்ற கோவை குருநாத பட்டர்,இன்னொருத்தர் திருமழிசை உன்னி நாயர்.
பெரியவரே இதை கேக்க கஷ்டமா இருக்கு, உங்க பெண் ஏதாவது காதல், கீதல்னு தினேஷ் தயங்க பட்டென பதில் வந்தது.கண்டிப்பா இல்லை 15 வயசு இப்பதான் முடிஞ்ச குழந்தை ,9வது படிச்சிண்டிருந்தா அதுவும் எப்ப ஆனாலும் என் அக்கா பையனோடதான் கல்யாணம்னு அவளுக்கு தெரியும்.
அப்ப நாங்க புறப்படறோம் பெரியவரே, பாண்டி வா போலாம்.
பாண்டி, “ இல்லை மாமி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு புறப்………. “
தினேஷ் முறைப்பால் பாதில நிப்பாட்டி புறப்பட்டான், திரும்பி பார்த்துக் கொண்டே.
வெளில வந்தவுடனே , “பாண்டி பெரியணனை பாக்க நாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கு,பாஸ்கரை கோயமுத்தூர் அனுப்பலாம் குருநாதரை பத்தி கொஞ்சம் விவரம் சேகரிக்க.”,
“இல்லை பாஸ் கோவை அவசியமில்லை குருநாத ஆச்சாரியார் 3 மாசமா ஆஸ்திரேலியால இருக்கார்”
தினேஷ் ஆச்சரியமாய், “ டே எப்படிடா, எல்லாம் விரல் நுனிலே”.
“அதெல்லாம் இல்லை பாஸ் நீங்க ஜோசியர் கிட்ட பேசறப்ப கூகிளை நோண்டினதுல கிடைச்ச விவரம்.
“ஓகே அப்ப பாஸ்கர், திருமழிசை போகட்டும், நாம பெரியணன் சாரை பாப்போம்.”
இப்ப பெரியணன் பற்றி சின்ன அறிமுகம்.பிராதான எதிர் கட்சியின் முக்கிய தலைவர். போன ஆட்சியில் முதலமைச்சருக்கு அடுத்த படி. போக்கு வரத்து துறை அமைச்சரா ஆட்டி வச்சவர். மாநில அளவில் சக்தி வாய்நத தலைவர்.
அவர் குடும்பம், ஒரே பொண்டாட்டி, ஒரே பையன், தந்தை, அப்பறம் 4 அடி உயர கோம்பை நாய் ராஜு. மற்ற தொடுப்புகளை குடும்பத்தில் சேர்க்கா விட்டால் சின்ன குடும்பம்தான்., சேத்தா வம்பு வரும் அடி உதைக்கும், ராஜுவின் ஆங்காரப் பற்களுக்கும் தயார்னா அதுக்கு போகலாம்.
இப்ப பாஸ்கர் , பாண்டிராஜ் மாதிரி சின்ன பையன் இல்லை, புத்திசாலி வாட்டசாட்டமா அடியாள் உடம்பு (சும்மாவா, தினம் 4 மணி நேரம் சார்லி ஜிம்ல ஒர்க் அவுட்)இவனும் அப்படிதான் தினேஷ் எள் என்பதற்குள் எண்ணையா நிப்பான்.தன்ஃபோனில் குறுஞ் செய்தி பாஸ் கிட்ட இருந்து பாத்தவுடன் மறு நாள் உன்னி நாயரை பாக்க தயாரானான்.
ஹோண்டால போறதா? பிராட்வேல இருந்து பஸ்ல போலாமா?ஹோண்டா ஜெயித்தது. காலை 6 மணிக்கே பெரியமேட்ல இருந்த தன் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டான்.
இது வரை ஜெகநாதப் பெருமாள் கோவிலுக்குள்ளே போனதில்லை, பெருமாளும், கோவில் புளியோதரையும் ரொம்பவே விசேஷம்னு கேள்விப் பட்டிருக்கான்.சந்தோஷமாய் பைக்கில் புறப்பட்ட பாஸ்கருக்கு அங்கே காத்திருந்த <stron
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings