2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
நமக்குள் இன்னொரு உயிர் வளர்வது எத்தனை பெரிய மகிழ்ச்சி. அதுவும் வளரும் அந்த உயிரின் இதயத் துடிப்பை கேட்பதென்பது எத்தனை பெரிய வரம்.
மருத்துவர் ஸ்கேனிங் கருவியை என் வயிற்றில் வைத்து இயந்திரத்தை இயக்கியதும் என் குழந்தையின் இதய துடிப்பை கேட்கத் துடித்தேன்.
‘எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது கடவுளே.. நல்லபடியா இருக்கணும்.. ஆரோக்கியமா இருக்கணும்’ மனதாரப் பிரார்த்தித்தேன்.
கருவியை வயிற்றில் வைத்து மேலும் கீழும் நகர்த்தினார் மருத்துவர். சிறுநீரை அடக்கி இருந்ததில் வயிற்றில் ஸ்கேனிங் கருவி அழுத்த அழுத்த அசௌகரியமும் வலியும் ஏற்பட்டது.
முதலில் இரைச்சல் சத்தம் கேட்டது நொடியில் அதை மீறி வெளிவந்தது என் உயிரின் துடிப்பு.
“குழந்தையோட ஹார்ட் பீட் நல்லாருக்கு” என்றார் மருத்துவர்.
கடவுளுக்கு நன்றி கூறினேன். எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ எனக்குள் இருக்கும் உயிரை என்னை உணர வைத்திருக்கிறது. இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே ஸ்கேனிங் திரையைப் பார்த்தேன். ஓவியமாய் ஓடியது கோடுகள். மேல் ஏறி கீழ் இறங்கி கொண்டிருந்தது.
“இவங்க கூட யார் வந்துருக்காங்க” மருத்துவர் உதவிப் பெண்ணிடம் கேட்டார்.
“என் ஹஸ்பண்ட்டும் மாமியாரும் வந்துருக்காங்க” நானே பதில் கூறினேன்.
“அவங்கள உள்ள வரச் சொல்லுங்க” மருத்துவர் சொன்னதும் அந்த பெண் அவர்களை அழைத்து வர வெளியே சென்றார்.
ஒவ்வொரு மருத்துவமனையும் ஒவ்வொரும் விதம். சில இடங்களில் யாரையும் ஸ்கேன் பார்க்கும் பொழுது உள்ளே விடுவதில்லையாம். சில இடங்களில் அனுமதிக்கிறார்கள். சில இடங்களில் நாம் வேண்டிக்கொண்டால் உள்ளே அனுமதிக்கிறார்கள். நல்லவேளையாக இங்கே மருத்துவரே அழைத்தார்.
என் குழந்தையின் இதயத் துடிப்பை கேட்டு மகிழ்ச்சியில் மயங்கியிருந்த எனக்கு என் கணவரும் அதைக் கேட்கப் போகிறார் என்றதும் சந்தோசம் தாங்கவில்லை.
இருவரும் உள்ளே வந்தனர். வயிறு தெரிய நான் படுத்திருந்ததை என் அத்தை பார்த்தது எனக்கு சங்கோஜமாக இருந்தது.
மூவரும் திரையைப் பார்த்தோம்.
“கரு உண்டாயிருக்கு.. ஒரு கரு இருக்கு.. கர்ப்பபை உள்ள தான் குழந்தை இருக்கு.. இவங்க சொன்ன பீரியட் டேட் படி ஏழு வாரம் ஆச்சு.. குழந்தை வளர்ச்சியும் ஏழு வாரம் கரெக்ட்டா இருக்கு.. பேபி ஹார்ட் பீட் நல்லாருக்கு” விளக்கினார் மருத்துவர்.
“இதான் கரு.. இதான் ஹார்ட் பீட்” ஸ்கேனிங் மெஷினை காண்பித்துக் கூறினார்.
மீண்டும் கேட்டு லயித்தேன் இதயத் துடிப்பை. அதை கேட்டுக்கொண்டே என் கணவர் என்னைப் பார்த்தார். நான் அடைந்த பூரிப்பை ஆதியின் கண்களிலும் பார்த்தேன்.
சில நொடிகள் எங்கள் உலகத்தில் நானும் ஆதியும் எங்கள் குழந்தையும் மட்டும் இருந்தோம்.
“சரி நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க.. இவங்ககிட்ட டீடெயில்ஸ் சொல்லி விட்றேன்”
இருவரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு என்னையும் எழுப்பி விட்டனர். வயிரெல்லாம் பிசு பிசுவென இருந்தது.
வேகமாக எழுந்து சென்று உள்ளே இருந்த கழிவறையில் சிறுநீர் கழித்துவிட்டு வயிற்றை லேசாக துடைத்துக் கொண்டு வந்தேன். அதற்குள் மருத்துவர் இன்னொருவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மருத்துவர் இருக்கைக்கு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தேன். அவரைப் பார்த்து முடித்துவிட்டு என்னிடம் வந்தார்.
“பேர் சொல்லுங்க..” ஒரு பைலை எடுத்துக் கொண்டு பேனாவால் எழுத ஆரம்பித்தார் மருத்துவர்.
“எஸ். கவியினியாள்”
“ஹஸ்பண்ட் பேரு”
“ஆதி” என்றதும் என்னை நிமிர்ந்து பார்த்தார். ஒருவேளை இனிஷியல் மாறியிருக்கிறது என்று பார்த்தாரோ என்னவோ. நான் தான் என் தந்தை பெயரையே இனிஷியலாக வைத்துள்ளனே. திருமணத்திற்குப் பின் மாற்றிக் கொள்ளவில்லை.
“வயசு” அடுத்த கேள்வியைக் கேட்டார்
“இருபத்தி ஏழு”
“சொந்தத்துல கல்யாணம் பண்ணிங்களா”
“இல்லை”
“பர்ஸ்ட் பேபியா”
“ஆமா”
“இயற்கையா அமஞ்சது தான”
“ஆமா”
“கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு”
“ஒரு வருஷம்”
“இதுக்கு முன்னாடி எதாவது அபார்ஷன்”
“இல்லை.. முதல் குழந்தை இதான்”
“ஹார்ட் ப்ரோப்லம்.. அல்ர்ஜி.. ஆஸ்துமா அப்படி எதாவது இருக்கா”
“இல்லை.. அப்படி எதும் இல்லை” எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்று வியந்து கொண்டே பதில் கூறினேன். தேவை தான் இந்த கேள்விகளின் மூலம் முழுவதுமாக அவர்களை அறிந்து கொள்ள முடியும். பின்னாளின் அவர்களுக்கு ஏற்ற வைத்தியம் செய்ய முடியும்.
“பிளட் லெவல்.. சுகர் லாம் பாக்கணும். பதினஞ்சு நாள் அப்புறம் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க..”
சரி என்பதாய் தலையசைத்தேன்.
“ஸ்வீட்ஸ், பிஸ்கட்ஸ், சாக்லேட் சாப்பிடாதீங்க.. சமோசா பஜ்ஜி எண்ணெய் பலகாரம் சாப்பிடாதீங்க.. பழம் காய்கறிகள் சாப்பிடுங்க… சாப்பாடு அதிகம் சாப்பிட்டு வெயிட் ரொம்ப போடக் கூடாது.. மாசம் ஒரு கிலோல இருந்து ரெண்டு கிலோ ஏறுனா போதும்”
“ஓகே மேம்”
“டீ, காபி ஸ்டாப் பண்ணிடுங்க.. பால் குடிங்க.. ஒரு ப்ரோட்டீன் பவுடர் தரேன்.. அதை ஒருவேளை கலந்து குடிங்க”
“எஸ் மேம்”
“ட்ராவல் பண்ணாதீங்க.. போலிக் ஆசிட் சத்து மாத்திரை எழுதி தரேன்.. பதினஞ்சு நாள் கழிச்சி வாங்க ரிப்போர்ட் எடுத்துட்டு”
“நான் ஈரோடுல ஒர்க் பண்றேன்.. நாளைக்கு கிளம்பனும் மேம்.. ட்ராவெல் பண்ணக் கூடாதா”
“அவசியம்னா பண்ணிக்கலாம்.. ட்ராவெல் பண்றதுக்கு முன்னாடி ஒரு மாத்திரை குடுக்குறேன் அது போட்டுக்கோங்க.. ட்ரெயின்ல போக பாருங்க முடிஞ்சா.. ரொம்ப பாதுகாப்பா இருக்கணும்” என்று கூறிவிட்டு எழுந்து அடுத்தவரை பார்க்கச் சென்றார்.
ஏன் உள்ளே ஒவ்வொருவரை பார்ப்பதற்கும் இவ்வளவு நேரம் ஆகிறது என்று நினைத்தேன். ஸ்கேனிங்கும் இவரே பார்க்கிறார். எல்லாவற்றையும் விசாரித்து மருந்தும் எழுதுகிறார். நேரம் ஆகத்தானே செய்யும்.
அங்கிருந்த செவிலியிர் என்னை வெளியே அழைத்து வந்து என் கணவரையும் அத்தையும் அழைத்து மருத்துவர் சொன்னதையே மீண்டும் சொல்லிவிட்டு ஸ்கேன் மற்றும் செக் அப் பீஸ்ஸை வாங்கிக்கொண்டார்.
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கிவிட்டேன்.
மாலை ஆறு மணி இருக்கும். ஆதியிடம் ஊருக்குக் கிளம்புவதைப் பற்றி பேசத் தொடங்கினேன்.
“கவி நீ ஆபீஸ் போயே ஆகணுமா.. எனக்கும் இந்த வாரம் சென்னைல வேலை இருக்கு.. நீ எப்படி சமாளிப்ப.. ட்ராவலும் பாதுகாப்பா இருக்காது.. பேசாம கொஞ்ச நாள் நீ லீவு போட்டுகிறியா.. ஈரோடுலாம் வேண்டாம்”
ஆதி பேசப் பேச நான் அதிர்ந்து போய் நின்றேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings