in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 6) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5

இதுவரை:

தன் கர்ப்பத்தை வீட்டிலேயே உறுதி செய்த கவியினியாள் மகிழ்ச்சியுடன் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டாள். பின் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் செல்கிறாள். அங்கே என்ன நிகழ்ந்தது என்பதை காண்போம்.

இனி:

இருபத்தி ஏழாவது டோக்கன்!

“பேசாமல் வீட்டுக்குப் போய்ட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வரலாமா” கணவரிடம் கேட்டேன். அவர் அங்கிருக்கும் செவிலியர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றார்.

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்”

“வெயிட் பண்ணித்தான் பாக்கணும் சார்”

“இல்லை லேட் ஆகும்னா வீடு பக்கத்துல தான் போய்ட்டு வந்தட்றோம்”

“நீங்க எதுக்கு வந்துருக்கீங்க”

“மனைவிக்கு ப்ரக்னென்சி செக் அப்”

“பர்ஸ்ட் செக் அப் பா”

“ஆமா மேம்”

“பர்ஸ்ட் ஸ்கேன்னா வயிறு நிறைய தண்ணி குடிக்கணும். யூரின் அர்சென்ட்னா சொல்லுங்க நான் அவங்கள உள்ள கூப்பட்றேன்”

“இல்லனா சாப்டுட்டு வந்தட்லாமா”

“சாப்டா ஒன் ஹவர் அப்புறம் தான் தண்ணி குடிக்கணும்.. உங்களுக்கு தான் லேட் ஆகும்”

“சரி வெயிட் பன்றோம்”

தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். தாகம் சுத்தமாக இல்லை. தண்ணீர் குடிக்க விருப்பமே இல்லாமல் கஷ்டப்பட்டுப் பருகினேன்.

“யூரின் வருதா” என் கணவர் ஆவலாக என்னிடம் கேட்டார்.

“இப்போதான தண்ணி குடிக்க ஆரம்பிக்கிறேன். அதுக்குள்ள எப்படி வரும். நான் வீட்டுல இருந்து கிளம்பிரப்ப போய்ட்டு தான் வந்தேன். இப்போ வந்தா நானே சொல்றேன்” சற்று கோவமாக அவரிடம் கூறினேன்.

ஒரு பாட்டில் நீரை குடித்தும் ஒரு உணர்வும் இல்லை. நெஞ்சு முட்டியது போல் தொண்டை வரை நீர் இருப்பதாய் உணர்ந்தேன். அதற்கு மேல் குடிக்க இஷ்டமில்லை. காத்திருந்தோம்.

பின்னாடி முன்னாடி அமர்ந்திருப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவர் வயிரையும் குறிப்பாக உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். வித்தியாசமான உணர்வாக இருந்தது.

பதிமூன்று, பதிநான்கு டோக்கன் வைத்திருந்த இருவரும் உள்ளே சென்றார்கள். ஏற்கனவே ஒருவர் உள்ளே இருக்கிறார். மூன்று பேரை ஒரே நேரத்தில் அழைத்து என்ன செய்வார்கள். உள்ளேயும் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த கணவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். என்ன வருகிறதா என்பது போல் இருந்தது அவர் பார்வை.

“லைட்டா வர மாதிரி தான் இருக்கு.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்” இந்த முறை சிரித்துக் கொண்டே கூறினேன்.

“ஏதாவது சாப்பட்றியாமா.. காலைல சாப்பிட்டது.. மணி 1 ஆகுது” அத்தை கேட்டார்.

“இல்லை அத்தை எதும் வேணாம்” தண்ணீர் தந்த திகட்டலில் எதுவும் சாப்பிட இஷ்டம் இல்லாமல் கூறினேன்.

“பழமாவது வாங்கிட்டு வர சொல்லட்டா.. இல்ல ஜூஸ் குடிக்கறியா”

“கொஞ்ச நேரம் ஆகட்டும் அத்தை”

காத்திருந்தோம். மீண்டும் ஒரு பாட்டில் நீரைப் பருகினேன். வயிறு கனமாகத் தொடங்கியது.

“என்னங்க வர மாதிரி இருக்கு”

“கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு வரும்போது சொல்லு”

சில நிமிடங்களிலேயே எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது.

“என்னங்க.. அந்த பொண்ணுங்கள கூப்டுங்க”

“அவங்கள என்னனு கூப்பட்றது கவி.. நர்ஸ்ஸா அவங்க..”

“அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க.. நர்ஸ்னும் சொல்லலாம்.. இப்போ அதா முக்கியம் கூப்டுங்க சீக்கிரம்”

ஆதியும் அவர்களை அழைத்து என் நிலையைக் கூறினார்.

“உள்ள மூணு பேர் இருக்காங்க.. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க”

கிட்டத்தட்ட நான் குடித்த மொத்த நீரும் கீழ் இறங்கி என்னை அவசரப்படுத்தியது. என்னால் அமர முடியவில்லை. எழுந்து நடந்தேன். இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ. நிற்கவும் சிரமமாய் இருந்தது.

வயிறு வலிக்க ஆரம்பித்தது. அடக்க முடியவில்லை.

“என்னால முடில ஆதி”

“அவ்ளோதான் கவி.. பாரு ஒருத்தர் வெளிய வந்துட்டாங்க.. உன்ன கூப்பிட்ருவாங்க”

“கவியினியாள்” என் கணவர் கூறுவருவதற்கும் உள்ளே என்னை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

நிம்மதியாக எழுந்த சமயத்தில் உள்ளிருந்து வேகமாக ஒரு பெண் வெளியேற அவரோடு சேர்ந்து அந்த மருத்துவரும் வெளியே ஓடினார்.

விசாரித்ததில் அவசர சிகிக்சைக்கு ஒரு கர்ப்பிணி பெண் வந்திருப்பகாகச் சொன்னார்கள்.

நான் என் கணவரின் முகத்தைப் பார்த்தேன்.

“என்னால முடில.. நான் ரெஸ்ட் ரூம் போறனே”

“இரு கவி.. எவ்ளோ நேரம் ஆகும்னு பார்க்கலாம்”

“இல்லை.. வயிறு வலிக்குது.. உக்கார முடில.. நிக்க முடில.. கால் கீழ நடுங்குது”

“சரி போய்ட்டு வந்துடு”

வேகமாக எழுந்து ஓடினேன். மொத்த பாரத்தையும் இறக்கி வைத்த திருப்தியோடு திரும்பி வந்து அமர்ந்தேன்.

“கவியினியாள்.. உள்ள வாங்க” அந்த மருத்துவர் மீண்டும் வந்துவிட என்னை உள்ளே அழைத்தனர்.

“இப்போதான் போய்ட்டு வந்தேன்” அசடு வழிய நான் கூற ஆதி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே முறைத்தார்.

சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தண்ணீர் குடித்துவிட்டு வரச் சொன்னார்கள்.

காலையில் டிபன் சாப்பிட்டதும் கிளம்பிவிட்டோம். மதிய உணவிற்கு எதுவும் தயார் செய்யவில்லை. பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்கு மூன்று பேரும் சென்றோம். உணவகத்தில் சாப்பிடக் கூடாது பிரசவம் முடியும் வரை வீட்டு உணவுகளை மட்டுமே கர்ப்ப காலத்தில் சாப்பிடவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருந்தேன். சரி அவசரத்திற்குத் தானே. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ள வேண்டியது தான்.

சுடச்சுட வரகரிசியில் சாம்பார் சாதம் கொண்டு வந்தனர். இலையின் மணத்தோடு ஒரு வாய் எடுத்து வைத்தேன். கரைந்து உள்ளே சென்றது. சிறிது வெல்லம் சேர்த்து இருக்கிறார்கள். தண்ணீரே குடித்து நிரம்பிய எனக்கு அமிர்தமாய் இருந்தது சாம்பார் சாதம்.

“இனிமே ஹாஸ்பிடல் வரணும்னா வீட்ல இருந்தே சாப்பாடு கட்டி கொண்டு வந்துருனும்.. ஒரு பொழுதே ஆகுது” என் அத்தை தக்காளி சாதத்தை வாயில் வைத்துக் கொண்டே கூறினார்.

“இவ இன்னொரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணியிருந்த பார்த்துட்டே கிளம்பிருக்கலாம்”

“நீங்க வயிறு முட்ட தண்ணி குடிச்சி அடக்கிப் பாருங்க என் கஷ்டம் தெரியும்”

“புரியுது கவி இப்போ நீ மறுபடியும் தண்ணி குடிக்கணுமே”

“மறுபடியுமா!!”

சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தண்ணீர் குடித்தேன். திணற திணற குடித்து வயிறு நிரம்பி உள்ளே சென்றேன்.

உள்ளே ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர். ஒருவர் மெத்தை மேல் படுத்திருந்தார் அவரைப் பார்த்து விட்டு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் மருத்துவர்.

மெத்தை மீது உள்ள பெண் இறங்கியதும் என்னைப் படுக்கச் சொன்னார்கள். உதவிக்கு உள்ள பெண்கள் என் வயிறு தெரியும்படி படுக்க வைத்தனர்.

நான் படுத்துக் கொண்டே இன்னொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட நாற்பது வயது இருக்கும். எனினும் தன்னை முப்பது போல் அழகுப் படுத்தியிருந்தார். நேர்த்தியான சுடிதார். கலையாத முடி. தெளிவான கண்கள். உதட்டில் சாயம். இனிமையான குரல். அதில் ஒரு அதட்டலும் இருந்தது.

எனக்கு முன் இருந்த பெண்ணிடம் பேசி முடித்து விட்டு என்னருகே வேகவேகமாக வந்தார். நல்ல சுறுசுறுப்பு தான்.

“அக்கா.. பர்ஸ்ட் செக் அப். வீட்ல கிட்ல பாத்துருக்காங்க.. பாசிட்டிவ்” என்னைப் பற்றிய சிறு அறிமுகம் தந்தார் உள்ளே அழைத்துச் சென்றப் பெண்.

“லாஸ்ட் பீரியட் டேட் என்ன மா”

“அக்டோபர் மூணு”

“7 வாரம் ஆச்சா.. சரி ஸ்கேன் பாக்கலாம்.. ஹார்ட் பீட் செக் பண்லாம்”

வயிற்றில் ஸ்கேனிங் கருவியை வைத்தார். என் குழந்தையின் துடிப்பைக் கேட்க ஆவலாக இருந்தேன்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலித்துப் பார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 14) – தி.வள்ளி, திருநெல்வேலி