in

வாட்டர் மெலன் அல்வா / குல்கந்த் – 👨‍🍳 மாயவரம் மூர்த்தி

வாட்டர் மெலன் அல்வா / குல்கந்த்

தேவையான பொருட்கள்

  1. வாட்டர் மெலன் பழம் – 1/2 துண்டு அல்லது 1.5 கிலோ
  2. நெய் – 50 கிராமிலிருந்து 75 கிராம் வரை
  3. சர்க்கரை – 2 கப்
  4. ஏலாக்காய் – 4 பொடித்தது
  5. முந்திரி / திராட்சை / பாதாம் – சிறிது நெய்யில் பொறித்தது + ரோஜா இதழ்

செய்முறை

  1. வாட்டர் மெலனின் சிவப்பு சதைப் பகுதியை துண்டுகளாக வெட்டி ஜுஸர் ஜாரில் இட்டு தண்ணீர் சேர்க்காமல் ஜூஸ் மாதிரி அரைத்து எடுக்க வேண்டும்
  2. அடி கனமுள்ள கடாயை ஸ்டவ்வில் வைத்து  2 ஸ்பூன் நெய் விட்டு சூடு பண்ணவும்
  3. ஸ்டவ்வை நடுத்தர ஜுவாலையில் வைத்து அரைத்த ஜூஸை கடாயில் விடவும்
  4. கடாயை மூடி கொண்டு பசை பதம் வரும் வரை மூடவும் (இல்லா விட்டால் கொதிக்கும் போது கொப்பளித்து டைல்ஸ்களில் தெறித்து ரத்தகறை போல் இருக்கும்)
  5. பிறகு நெய் பாதியை சேர்க்கவும்
  6. செயற்கை கலர் தேவையில்லை, பழத்தின் கலரே போறும்
  7. பிறகு சர்க்கரை 2 கப் சேர்க்கவும். தண்ணீரை சேர்க்கக் கூடாது, சர்க்கரை உருகி வர கலவையை நன்றாக கிளறவும்
  8. பொடித்து வைத்துள்ள ஏலக்காயை சேர்க்கவும்
  9. மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்றாக கிளறவும். கலவை கட்டி பதம் வரும் வரை தொடர்ந்து கிளறவும்
  10. இறுகி கட்டி பதம் வந்தவுடன் நெய் தடவிய பாத்திரம் அல்லது தட்டுக்கு மாற்றவும்
  11. வறுத்து வைத்துள்ள முந்திரி / திராட்சை / பாதாம், மற்றும் ரோஜா இதழும் தூவி அலங்காரம் செய்யவும்

இப்போது பறிமாறுவதற்கு அழகான வாட்டர் மெலன் அல்வா / குல்கந்து ரெடி.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிறந்த Recipe இது

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20  சிறுகதைகள்,  நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது. 

இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பளார் (சிறுகதை) – ✍ பத்மநாதன் பரசுராமன், மலேசியா

    எதை இழக்கலாம்? (சிறுகதை) – ✍ மைதிலி சம்பத், செகந்திராபாத்