எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இரு ஆண் சிங்கங்களைப் பெத்து வைச்சிருக்கீங்க… உங்களுக்கு என்ன கவலை?” என்று ஊரார் சொல்லும் போதெல்லாம் சற்று பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கும் ‘தங்கராசு’ க்கும் அவர் மனைவி ‘ராசாத்தி’ க்கும்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் உழைத்து இருமகன்களையும் படிக்கவைத்து வேலை வாங்கி …கல்யாணமும் பண்ணி வச்சாச்சு …இருவரும் வேறுவேறு ஊரில் அரசாங்க பணியால் தனிக்குடித்தனமும் போயாச்சு…
காலம் உருண்டோட…பெயரன் பெயர்த்திகளும் பிறந்தாச்சு …தங்கராசு ராசாத்திக்கும் வயசு ஆகிக்கொண்டே போகிறது .முன்பு போல இருவரும் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை …ஏதோ தோட்டத்தில் சிறு சிறு வேலைகளைக் கவனித்துக் கொண்டு இறுதி காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர் .
தீடிரென்று ஒரு நாள் ராசாதிக்குப் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார் …அவரவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகன்கள் இருவரும் செய்தி தெரிந்து வந்து விட்டனர்
ராசாத்தியைப் பார்த்த பின்னர் அனைவரும் ஒன்று கூடி என்ன செய்யலாம் என்று விவாதித்தனர் .
அண்ணன் …தம்பியிடம்….”தம்பி ..எனக்கு மாசதத்துக்கு ஒருமுறை மாற்றல் ஆயிட்டே இருக்கும் …அதனால அம்மாவை எங்க கூட வச்சிட்டு இங்க அங்க மாத்திட்டது அலைய முடியாது …உங்க கூடவே வச்சுக்குங்க ..மாச மாசம் பணம் அனுப்பிடுறேன் ..”
தம்பியின் மனைவி தான் கணவனை அழைத்துக் காதைக் கடித்தாள் ….பின்னர் வந்த தம்பி .
“அண்ணா …நானும் என் மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போறது தெரியும் தானே …நாங்க எப்படிக் கொண்டு போய் வச்சிக்க முடியும் ?” நீயே சொல்லு ?
“அப்ப என்னதான் செய்யறது…?”
“எனக்கு ஒரு வழி தெரியுது ” என்று மூத்தவன் மனைவி முன்வந்தாள்
“என்ன ?” என்று எல்லோரும் கேட்க
“பேசாம இரண்டுபேரையும் முதியோர் காப்பகத்தில் சேர்த்துப் பாத்துக்கலாம்… எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல” என்றாள்
வேர்களை வெறுக்கும் விழுதுகளை எண்ணி கண்ணீர் வழிந்தது கட்டிலில் கிடக்கும் ராசாத்தியின் கன்னத்தில்
“அப்பா… நீங்க என்ன சொல்லறீங்க ” என்று இருமகன்களும் கேட்க…
“இளநீர் வெட்டி தருகிறேன் …வெய்யிலுக்குக் குளிர்ச்சியா இருக்கும் குடித்துவிட்டு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்தை நோக்கி நடந்தார் ‘தங்கராசு’ தான் தோள்துண்டை உதறிப் போட்டுக்கொண்டு .
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings