in

தரணியை வெல்லும் மனிதநேயம் – ✍சௌமியா தட்சணாமூர்த்தி, விழுப்புரம்

தரணியை வெல்லும் மனிதநேயம்
ஏழுகடல் தாண்டி
ஏழாம் அறிவு போல
எம்மில் வாழ
ஆசை கொண்டாயோ?

பலரை மாய்த்தும் 
பசியாராத நீ 
எம் தாயகத்தை 
தஞ்சம் புகுந்தாயோ?

களப்பணியாளர்களும் 
கண்டு நடுங்கும்படி
கடோத் கஜானாய் 
களப்பணி செய்கிறாயே   

எச்சில் திவளைகளால்
எச்சமாய் எம்மை ஆக்க
நுரையீரல் அடைந்து 
நிமிஷமாய் கொல்கிறாயே 

எம் கையே எமக்கு 
எதிரியாய் ஆக
முகக்கவசம் முன்வந்து
மறைக்க செய்தாயே 

ஊற்றார் உறவினர்
மற்றோர் நண்பர்கள் 
அனைவரின் சிரிப்பையும் 
அஸ்தமிக்க செய்தாயே 

மருத்துவமனை படுக்கையின்றி
ஆம்புலன்ஸ் மரத்தடி என 
மனித உயிர் தன்னை 
முச்சந்தியில் நிறுத்தினாயே !

ஆட்டோக்களும் கூட 
ஆக்ஸிஜன் பூட்டிய
மினி மருத்துவமனையாய் 
மாறும் அவலம் செய்தாயே

இளம் பிஞ்சுகள் பல 
தொப்புள்கொடி அறுக்கும் முன்னே 
சுவாசத்தை இழந்து 
சவமாய் ஆனது உன்னாலே 

சிட்டுக்குருவி குடும்பத்தை
சிதறடித்த பாவமோ 
அவரவர் கூட்டுக்குள் அடைந்து 
குடும்பத்தை இழந்து
குமுறும் நிலை வந்ததோ 

ஆனா ஆவன்னா குழந்தை முதல்
ஆய்வியல் நிறைஞர் வரை
நிச்சயமற்ற எதிர்காலம் எண்ணி 
நித்தமும் கவலையில் மூழ்கினரே 

தினக்கூலி மக்களோ
ஒரு ஜான் வயிற்றுக்கு 
ஒட்டிய ஈரத்துணியுடன் 
ஓலமிடும் நிலையில் 

மருத்துவத்துறை காவல்துறை
செய்தித்துறை சுகாதாரம் 
அனைத்து துறை சார்ந்தோரும் 
அல்லலில் அவதியில் 

கோவில்கள் மூடப்பட்டாலும்
மனித தெய்வங்களாய் 
மக்கள் உயிர் காக்க
மருத்துவர்களின் போராட்டம் 

வாயில்லா ஜீவன்கள்
வற்றிய வயிற்றுடன் தெருவில்
வள்ளலாரும் கூட 
வடிக்கின்றார் கண்ணீர் இன்று 

பெற்றோரை இழந்த 
பிள்ளைகள் ஒரு புறம் 
புத்திர சோகத்தில் 
பெற்றோர் மறுபுறம் 

உறவுகளை பேணிட 
மனிதநேயத்தை உணர்ந்திட
அண்டை அயலார் அறிந்திட 
கருணை காட்டிட
காலம் வகுத்த 
வழியோ இது?

தடுப்பூசி போட்டு 
தக்க முறையில் பாதுகாத்து 
வீட்டின் உள்ளிருந்தே 
விடியக் காத்திருப்போம்

சுற்றத்தை சற்று 
தள்ளி நின்றே அரவணைப்போம்
அன்பை கொஞ்சம் 
ஆசுவாசமாய் வழங்குவோம் 

கொரோனாவை அழிப்போம்
மனிதம் போற்றுவோம்
ஒற்றுமையை கடைபிடிப்போம்
உயிரைக் காப்போம்

வாழ்க பாரதம்...!
#ad

      

        

#ad

       

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இருட்டுக்குள் வெளிச்சம் ❤ (சிறுகதை) – ✍ கிருஷ்ணவேணி

    ஆழியின் காதலி ❤ (பகுதி 11) -✍ விபா விஷா