இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
டீயை வேலைக்காரன் கொண்டு வைத்து விட்டுப் போக, எடுத்து ராஜனுக்கும் மதனுக்கும் பரிமாறிய ஷில்பா, “அடுத்தத் திட்டம் என்ன?” என்று கேட்டாள்.
“மதன் லால், முதலில் நாம் அவனை மாடலிங்குக்குத் தான் அழைத்திருக்கிறோம் என்று நம்ப வைக்க வேண்டும். அந்தேரியிலுள்ள நமது ஸ்டுடியோவில் ஏதாவது ஒரு துணிக்கு விளம்பரமாக நிற்க விட்டு ஷூட்டிங் எடுக்க வேண்டும்” என்றார் ராஜன் லால்.
“அப்புறம்”?
“நாளை மறுநாள் மாஜிஸ்திரேட் முன்னால் இவனை நிறுத்தி சுரேஷ்தேவைப் போல கையெழுத்திட சொல்ல வேண்டும்.”
“அதையும் ஷூட்டிங்கிற்கு ஒத்துகை என்றே சொல்லி விடலாம்”
“அது கூட சரிதான். இவன் சுரேஷ்தேவ் மாதிரி கையெழுத்திட்ட மறுநிமிடமே அவனுடைய சமஸ்தான கஜானாவின் பொருட்கள் ஏலம் விட்டத் தொகை வரி போக பதினோரு கோடி ரூபாயை மாஜிஸ்திரேட் இவனிடம் கொடுப்பார்.”
“அதை நாம் வாங்கிக் கொண்டு உன் மாடலிங் நடிப்பிற்கு கூலி என்று சொல்லி ரூபாய் பத்தாயிரத்தை இவனுக்கு தூக்கியடித்து விட்டு மீதியை அப்படியே அபகரித்துக் கொள்ள வேண்டும்” என்று சிரித்தான் மாதன் லால்.
“சிரிப்பெல்லாம் இருக்கட்டும். இவனுக்கு இந்தி தெரியாது. மாஜிஸ்திரேட் ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டால் இவன் பேய் முழி முழுக்கப் போகிறான். அப்புறம் நம்முடைய பிளான் முழுக்க அம்பேல்” என்றாள் ஷில்பா.
“அதெல்லாம் நம்ம வக்கில் பாத்துக் கொள்வார் கவலைப்படாதே”
“அவசரப்பட்டு சுரேஷ் தேவைக் கொன்றிருக்க வேண்டாம் மதன் லால்”
“ராஜன் நடந்ததைப் பற்றி பேசி பிரயோஜனமில்லல். அவனை புதைக்கவோ எரிக்கவோ செய்திருந்தால் நமக்கு கால் காசு கூட கிடைக்காமல் போயிடும் என்று தான் எங்கள் வீட்டு ஃப்ரிஸரிலேயே இன்னும் போட்டு வைத்திருக்கிறேன்”
“டோண்ட் ஒரி, பணம் கைக்கு வந்ததும் அவனை நம்முடைய பாக்டரி பர்னரிலே தூக்கி எறிந்து விடலாம்”
“சரி. அப்படியென்றால் நாளைக்கு ஏதாவது சிறிய விளம்பர படத்துக்கு ஏற்பாடு செய்து ஷூட்டிங் ஆரம்பிக்கச் சொல்லு” என்றார் மதன்லால்.
“நம்முடைய மபத்லால் சர்ட்டிங் ஷூட்டிங் விளம்பரத்திற்கு வர வேண்டிய ஜாக்கி கானும் பாபியும் சிங்கப்பூர் போய் விட்டார்கள்.”
“அதற்கென்ன. இந்த தினேஷையும் நம்முடைய ஷில்பாவையும் நடிக்க வைத்து முடித்து விடேன். என்ன ஷில்பா உனக்கு விருப்பம் தானே”?
“கரும்பு தின்ன கூலியா ராஜன்” ?
“அது சரி”!?
மறுநாள் அந்தேரியிலிருந்து அந்த ஸ்டுடியோவில் மபத்லால் சூட்டிங் ஷர்ட்டிங் விளம்பரப் படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பித்தது.
தினேஷ் மற்றும் ஷில்பா இருவரும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன வசனம் பேச வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் இந்தியை மாற்றிக் கொடுத்து படிக்கச் சொன்னான் ஒரு அரைகுறை டைரக்டர்.
ஷூட்டிங் எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்த ராஜன்லாலைக் கவனித்த தினேஷ் மேக்கப் மேனை விலக்கி விட்டு வந்து “சார் உங்களிடம் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும்” என்றான் ஆங்கிலத்தில்.
“நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசலாமே”?
“கொஞ்சம் சீரியஸான விஷயம் சார்”
“சரி சொல்லு”
“இங்கே வேண்டாம் என்று நினைக்கிறேன.” திரும்பிப் பார்த்து ஷில்பாவின் பார்வையைத் தவிர்த்துக் கொண்டு சொன்னான்.
“சரி வா”….
இருவரும் ஒதுங்கியிருந்த காண்டினில் ஆளுக்கொரு பெப்ஸி வாங்கிக் கொண்டதும் “இப்போ சொல்” என்றார்ராஜன்லால்.
“நீங்களும் மதன்லாலும் சேர்ந்து சுரேஷ்தேவ் என்கிற பழைய சமஸ்தான இளவரசனை கொன்று புதைக்காமல் குளிர் பெட்டியில் வைத்திருப்பது உண்மையா?”
முதலில் பயம் ஏற்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு “என்ன நான்சென்ஸ். யார் சொன்னது உனக்கு இதெல்லாம்…” என்றார் கோபத்தோடு.
“சுரேஷ்தேவ் முகச் சாடையில் இருக்கின்ற என்னை அழைத்து ஜட்ஜ் முன்னால் நிறுத்தி அவனைப் போல கையெழுத்தைப் போடச் சொல்லி அவன் பணம் பதினோரு கோடி ரூபாயையும் அபகரித்துக் கொள்ளப் போகிறீர்களா?”
“தினேஷ், நீ நிறைய கற்பனை பண்ணியிருக்கிறாய் என்று நினைக்கிறேன்”
“நான் கேள்விப் பட்டதை நீங்கள் கனவு என்கிறீர்கள். நான் கற்பனை செய்ய வில்லை. மிஸ்டர் ராஜன். அப்படியென்றால் ஷில்பா சொன்னது அவள் சொந்த கற்பனையா?”
“ஷில்பா சொன்னதா?…. என்று கடகடவென்று சிரித்தார் ராஜன் லால் .
“ஏன் சிரிக்கிறீர்கள்”
“உங்களை வைத்து இரட்டை வேடத்தில் ஒரு படம் தயாரிப்பதற்கு கதை டிஸ்கஸன் பண்ணிக் கொண்டிருந்தேன். அதிலே முதல் நாள் ஷூட்டிங் ஜட்ஜ் முன்னால் நீங்கள் இன்னொரு சுரேஷ்தேவ் போல கையெழுத்து போட்டு போலி நோட்டுகளை வாங்குவது போல காட்சியமைத்திருக்கிறோம்”
“நீங்கள் இருவரும் என்னை வைத்து ஏமாற்றி பணம் சம்பாதிக்க போவதாக ஷில்பா சொன்னது…”
“அவள் அரை குறையாகக் கேட்பதன் விளைவு தான் இது. டோன்ட் டேக் இன் ராங் வே”
“நாளைக்கு ஷூட்டிங்கில் நடிப்பதற்கு இரவு வந்து டைரக்டர் விவரமாக விளக்கிச் சொல்லி விட்டுப் போவான். தயாராக இருந்து கொள்ளுங்கள்”
“ஓ.கே.சார்”
“ஷில்பா கதை டிஸ்கஸனில் முழுவதும் கலந்து கொள்ளாததுதான் காரணம். அவள் கற்பனையைக் கலந்து உங்களைப் பயமுறுத்தியிருக்கிறாள். டோன்ட் ஒரி”
“சரி சார்”
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings