சிறகிழந்த பறவை சிறகதை விரித்து சிட்டாய் பறக்கும் பறவை அதற்கு இன்பமும் இருக்கும் இளவலியும் இருக்கும் லட்சங்கள் செலவிட்டு மணமுடிக்கும் பலருக்கும் அந்நிலை தான் இன்று வாழ்வும் வளமும் லட்சங்களில் அல்ல கைகோர்க்கும் துணையே கச்சிதமாய் தீர்மானிக்கும் சீதையை மணக்க - அன்று வில்லை ஒடித்தான் ராமன் இன்றைய ராமன்களும் ஒடிக்கத்தான் செய்கிறார்கள் பெண்ணைப் பெற்றவரின் மனதை புரியாத புதிராக முதிர்கன்னிகள் பலர் சிறகிழந்த பறவையாய் ஒரு ராமனும் வந்த பாடில்லை ரட்சிக்க ராவணன் ரதத்தில் ஏறி வருவானோ மனிதம் மலைகள் தோறும் மரங்கள் நட்டால் பூமியில் மழையை பூவாய் தூவும் பூமித்தாய் குளிர்ந்து புதுச்செல்வம் தந்திடுவாள் அது போலே மனிதனும் ஆகாத குணத்தை விட்டால் புதுவாழ்வு பெறுவர் உயிர்களிடத்து அன்பை உற்ற நேரத்தில் காட்டிட மனிதம் உண்டென மாருதம் காட்டிடும்
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings