in

ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 3 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை

ஸங்ஷேபம் (Part 3 of 4)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தான் யார்? என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்?, என்ன இதெல்லாம்? எதுவுமே தெரியாது உலகம், மனிதப் பிறப்பு, கார், சாலை, சீன வைரஸ், லாக் டவுன், பசி, தாகம், பாடல்கள், இசை எந்தவொரு உணர்வும் இல்லாது ஏதோ எங்கோ எதையோ என்று எப்படி சொல்லியும் விளக்க முடியாத நிலையில் இருந்து ஒவ்வொன்றாக நினைவுகளை வந்தடைந்து பிறழ்வில் கண்டவை, சுயநினைவு என சகலத்தையும் பகுத்துப் பார்க்க சில நிமிடங்கள் தேவையாய் இருந்தன.

ஐந்து லிட்டர் மினி பிஸ்லேரி கேனில் இருந்து தண்ணீரை பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிக்க குடிக்க, மூன்று டம்ளர் நீர் உள்ளேறி தாக சாந்தி செய்த பின் மனமும் சாந்தமாய் துளிர் விட்டது.

இப்படியொரு அனுபவத்தை வாழ்க்கையில் கண்டதில்லை. திருமணம் முடிந்து சரியாக ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் அந்த…

வீடு திரும்பும் வரை ரகு கார் ஆடியோவைத் தொடவில்லை.

மாலை ஆறு மணியைத் தாண்டிய நிலையில் கடையைப் பார்த்துக் கொண்டே அந்த சாலை வழியாக காரை செலுத்தினான் ரகு. இரவு உணவுக்கான ஆயத்த வேலைகளில் கடை தயாராகிக் கொண்டிருந்தது. மாஸ்டர், அம்மா, மஹா… மூவரும் துரித கதியில் இயங்கியபடி இருந்தனர்.

பக்கத்து வீட்டு சதாசிவம் சாரிடம் வீட்டுச் சாவி நிச்சயம். குளித்து முடித்து சற்று இளைப்பாறிய பின் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வர வேண்டும். இயல்பாய் தினசரி வாழ்க்கைக்குள் இருப்பது போல காட்டிக் கொள்ள நினைத்த ரகு, மிக மோசமான தோல்வியை “ரகு”விடமே பெற்றான்.

வீட்டுக்குள் நுழைந்து கை கால் கழுவியவன், வீடு முழுக்க டிஸ் இன்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே கொண்டு அடித்தான். டெட்டால் லிக்விட், சோப்புத்தூள், வேனிஷ் லிக்விட் சேர்த்து கழட்டிப் போட்ட உடுப்பை நனைத்தான்.

ஷவரைத் திறந்து பாத்ரூமில் குளிக்கத் துவங்கியவனுக்கு சிந்தனை மீண்டும் பாடல் தந்த அனுபவத்தை நோக்கி சென்றது. பாடல் இசை காரணமில்லை. ராஜமுந்திரி செல்லும் போது திணறத் திணறக் கேட்ட தெலுங்குப் பாடல்கள் எதையும் உருவாக்கவில்லை. தமிழ் திரை இசைப் பாடல்கள்?

மெட்ராஸ் நோக்கி வரும் போதும் நிறைய பாடல்கள் கேட்டோமே, எதுவும் நடக்கவில்லையே? ரகு அடுத்து பாடல்களைத் தரம் பிரிக்க ஆரம்பித்தான்.

இசை இல்லை…

புத்தம் புது காலை, முத்து மணி, கொலுசு கொஞ்சும் பாதம் என பல ராஜா இசைப் பாடல்களைக் கேட்டு எதுவும் ஆகவில்லையே?

வாலி? முத்து மணி… அதர்மம் பாடலை எழுதியது வாலி தானே?

அப்போது எது… எது… மனம் விசித்திரமானதொரு சூத்திரத்தைத் தேடி அலைந்தது?

மலேசியா வாசுதேவன்… அந்தக் குரல்? கேட்ட பாடல்களை வரிசைப்படுத்தினான். அது தவிர்த்து வேறு மலேசியா பாடிய பாடல்கள் எதுவும் கேட்கவில்லை, கேட்டதாக மனச்செவி சொல்லவே இல்லை. 

வேக வேகமாக குளித்து முடித்தவன், தலை துவட்டி, உடை மாற்றி, திருநீறு பூசி, இறைத்துதிகள் சொல்லி, வழிபாடு முடித்தவன், அலைபேசியில் இணைத்தொடர்பை உயிர்ப்பித்து யூ.டியூப் நுழைந்து பாடலை ஓடவிட்டான்.

பாடல் ஒலித்தது, துளி சலனம் இல்லை, தொடு திரையின் கீழே தெரிந்த கோட்டில் கர்ஸரை வலப்புறம்  இழுத்து கண்களை மூடி ஆழமாக பாடல் வரிகளைக் கேட்க ஆரம்பித்தான்.   

… ஏற்றிய பாரம் தாங்காது
இறக்கிட நீயும் வா…

 

ஏங்கிய உள்ளம் தூங்காது
அமைதியை மீண்டும் தா
வா… பூவே… வா…
 

சலனமின்றி மலேசியாவின் குரலும், ராஜாவின் இசையும், ஹெட் செட் உதவியில் வெளிப்பட்ட ஒலித்தரம் தந்த திருப்தி உணர்வு தவிர்த்து எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

மலேசியாவும் இல்லை என்றால்? ஒருவேளை கார் ஆடியோவில் மட்டும் மலேசியாவின் குரலா? இந்தக் கேள்விக்கு விடை தெரியாது இருந்ததால், யூகங்கள், சந்தேகங்கள் அதிகமாகி மனதை வாட்டியது.

எப்போதுமே மனம் இப்படித்தான் நடந்து கொள்கிறது. ஏதாவதொரு சங்கதியில் சந்தேகம், கேள்விகள் என்று பரத்திக் கொண்டால் தெளிவு கிட்டும் வரை மனம் நிலை கொள்ளாது. சிலசமயம் அது உள்ளுக்குள் அமைதியாக சமயம் பார்த்துக் காத்திருக்கும் அரக்கனைத் தட்டி எழுப்பி களத்தில் நிறுத்திவிடும்.

எதனால் இப்படி? இந்த வினா மட்டும் மனதில் நீக்கமற நிறைந்திருந்தது. இதன் திறவுகோலை கண்டெடுத்தே ஆக வேண்டும். கடைக்குப் போன போதும் இது பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது.

வெளியூர் அதுவும் வெளி மாநிலம்… பயணம் முடித்து வீடு திரும்பினால் அம்மாவிடமும், பெஸ்ட் ஹாஃபிடமும் சொல்ல நிறைய கதைகள் சேர்ந்துவிடும். சொல்லி முடிக்க ஓரிரு தினங்கள் ஆகும். இப்போது கதையல்ல திகில் அனுபவம் கிட்டியும் சொல்லவில்லை. உதட்டளவில் பயணம் தொடர்பாக பேசியதோடு சரி.

றுநாள் காலை கடைக்குப் போய் காலை போஜன வியாபாரத்தில் சலிப்பின்றி இருந்த போது ஒரு அலை அழைப்பு, தாம்பரம் ட்ராப் என்றது. காலை பதினோரு மணிக்கு சுதந்திரதினப் பூங்கா தாண்டி பழவந்தாங்கல் சப் வே நோக்கி செல்லும் சாலையில் உள்ள அந்த அபார்ட்மென்ட் வாசலுக்கு வரும்படி கோரிக்கை வைத்தது. மீண்டும் வோல்வோ தான்! ரகு திடமாக முடிவெடுத்து சவாரிக்கு ஒப்புக் கொண்டான்.

பத்தே முக்காலுக்கு சவாரிக்கு அழைத்தவருக்கு பேசியில் பேசி நினைவூட்டி வண்டியைக் கிளப்பியவன், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசலுக்கு சென்ற போது, அவர் மெயின் கேட் அருகே நின்றவாறு கையசைத்தார்.

இவர் இதற்கு முன்பு நான்கு முறை தன் வாகனத்தில் சவாரி செய்ததை ரகு நினைவுபடுத்திக் கொண்டான்.

“நல்லா இருக்கீங்களா சார்?” அவரைப் பார்த்து சிரித்தபடி இயல்பாகப் பேசத் துவங்கினான்.

“நல்லா இருக்கேன் ரகு, நீங்க எப்படி இருக்கீங்க? சவாரி சுத்தமா இருந்திருக்காதே?”

“ஆமா சார், இப்போ தான் வர ஆரம்பிச்சு இருக்கு, முதல் லாக் டவுன்ல இருந்து நீங்களே நம்ம கார்ல சவாரிக்கு வரல”

“என்ன செய்யறது நிலைமை அப்படி ஆகிப்போச்சு, எப்படி சமாளிக்கறீங்க”

“மூவரசம்பேட் குளத்துக்கு பக்கமா நம்ம ஆபீஸை சின்னதாக்கி, ஒரு சின்ன மெஸ் ஆரம்பிச்சுட்டேன் சார். காலை & நைட் டிஃபன், மதியம் வெரைட்டி ரைஸ்.னு போகுது”

“பிஸ்னஸ் பிக் அப் ஆகிடுச்சா?”

“பரவால்ல சார், அந்த குருவாயூரப்பன் அருள்”

கார், சாந்தி பெட்ரோல் பங்க் தாண்டிய நிலையில், “பாட்டு ஏதாவது வைங்களேன் ரகு” என்ற பேச்சு உலுக்கி எடுத்தது.

“அ… து… வந்… து… மியூஸ்… ஸிக் சிஸ்டம்ல சின்ன ஃபால்… ட் சார், ரெடி பண்ணனும்” திக்கித் திணறி உளறி சொன்னவன் இயல்பானான்.

“பரவால்ல அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன்?”

“வண்டி கிளம்பின உடனே பாட்டு போட்ருப்பேன் சார், ஃபால்ட் ஆனதால போடல, சாரி சார்”

“இட்ஸ் ஓகே”

அவரை தாம்பரத்தில் இறக்கி விட்டு “வெயிட் பண்ணவா சார்?” என்று விசாரிக்க

“வேணாம்பா லேட்டாகும்” என்று எதிர்பார்த்த திருப்திகரமான பதிலைப் பெற்றுக் கொண்டு வாகனத்தில் இல்லம் திரும்பும் போது, பரிசோதனை எண்ணம் ஸ்திரமாக உருவானது.

ஜெய்கோபால் கரோடியா ஸ்கூல் அருகே எதிர்புறம் இடதாக நங்கநல்லூர் 48வது தெருவுக்குள் நுழைந்து, வலதுபுறம் 48வது தெரு விரிவுக்குள் சென்று குளத்தருகே வாகனத்தை நிறுத்திவிட்டு… பரிசோதனைக் கூடத்தை ரகு தெளிவாக முடிவு செய்தான்.

நங்கநல்லூர் 48வது தெரு விரிவு:

பொதுவாக அந்தத் தெருவைப் பொறுத்தவரை இரைச்சல் வருமானம் என்பது குறைவு தான்! தற்போது லாக் டவுன், வேலை இழப்பு, வருமானம் இல்லாமை போன்றவை முழுமையாக அந்தத் தெருவில் காணப்பட்டது. சுத்தமாக ஆள் அரவம் இல்லை. எதிரே குளமும் ஆர்ப்பரிப்பின்றி அமைதியாக நீரோட்டத்துடன் தரிசனம் தந்தது.  

“Old Collection” பென் ட்ரைவை மீண்டும் மியூஸிக் சிஸ்டத்திற்குள் பொருத்தி மனதுக்கு நெருக்கமான பிடித்தமான மலேசியா பாடிய பாடலை ஓடவிட்டு கண்களை மூடினான் ரகு. பாடல் லாலா என்று இனிதே துவங்கியது.

…  அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை
தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள்

என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்
இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்து விடும்

என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே …

பாடலை முழுதாக கேட்டு முடித்தும் சலனமில்லை எந்தவொரு மாறுதலும் இல்லை. மனப் பிறழ்தல் வாய்க்கவில்லை. ரகு குழம்பிப் போனான். இந்த மியூஸிக் சிஸ்டம் சொல்வது என்ன? ஏதோ ஒரு முறை தான் அப்படியா?

பூவிழி வாசலிலே படப்பாடல்களுக்கு மட்டும் தான் அப்படியொரு அனுபவத்தைத் தரும் சக்தி கொண்டதாக இருக்குமோ? ரகு மீண்டும் குழப்பத்தை பருகத் துவங்கினான். இந்த தாகம் தீர்ந்து போக பரிசோதித்தே ஆக வேண்டும்.

பென் ட்ரைவை மீண்டும் அலசி ஜேசுதாஸ் பாடலை ரகு ஒலிக்கச் செய்தான்.

சின்ன சின்ன ரோஜா பூவே

செல்லக் கண்ணே நீ யாரு

 

தப்பி வந்த சிப்பி முத்தே

உன்னைப் பெற்ற தாய் யாரு

 

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை

அள்ளிக்கொள்ள தாயும் இல்லை

 

ஏனோ சோதனை

இளநெஞ்சில் வேதனை

 

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே

என்ன என்ன ஆசையுண்டோ

 

உள்ளம் தன்னை மூடிவைத்த

தெய்வம் வந்தா சொல்லும் இங்கே

 

ஊரும் இல்லை பேரும் இல்லை

உண்மை சொல்ல யாரும் இல்லை

 

நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா

சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா

 

இது பேசா ஓவியம்

இதில் சோகம் ஆயிரம்

 

கண்ணில் உன்னைக் காணும்போது

எண்ணம் எங்கோ போகுதைய்யா

 

என்னை விட்டுப் போன பிள்ளை

இங்கே உந்தன் கோலம் கொண்டு

 

வந்ததென்று எண்ணுகின்றேன்

வாழ்த்து சொல்லிப் பாடுகின்றேன்

 

கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா

வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா

 

என் வாழ்வில் நிம்மதி

அது உந்தன் சன்னதி!…

முழுமையாகக் கேட்டும் எந்தவொரு மாறுபட்ட அனுபவமும் கைகூடவில்லை. தேவையின்றி ஏதோ ஒரு அசாதாரண சாதாரண நிகழ்வை நாம் பெரிதுபடுத்தி கலவரமாக்குகின்றோமோ? ரகு மனதில் அலை அலையாய் எண்ணங்கள்.

பென் டிரைவை சிஸ்டத்திலிருந்து விடுவித்து ஹரிஹரன் ஹிட்ஸ் பென் டிரைவை மியூஸிக் சிஸ்டத்தில் சிறை பூட்டினான். 

பீமா படப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கின…

ரகசிய கனவுகள்…

குளத்தையே ஊடுருவி கண்கள் பார்க்க, செவிகள் ஹரிஹரனை உள்வாங்க, மனம் எதையாவது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து கொண்டே போனது. ஹரிஹரன் & மதுஸ்ரீ இருவரும் எதையும் விதைக்கவில்லை. காரைக் கிளப்பிக் கொண்டு கடைக்குப் போக முடிவெடுத்த போது அடுத்த பாடல், ரகுவின் மனதை கொள்ளை கொண்ட அந்த கீதம் படர ஆரம்பித்தது.

மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா


மெகோ மெகோ

மெகோ பாகி லாகி மா

ஹேய் ஹேய் ஹேய் லோ
மே ஹி ரோஹிரோனா
மே ஹி ரோஹிரோனா

முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே

முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
இதயமாய் மிதந்ததே!

மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா

மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா

ஹேய் ஹேய் ஹேய் லோ
மே ஹி ரோஹிரோனா
மே ஹி ரோஹிரோனா

கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்

எதுவும் புரியா
புதுக் கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான்

நானும் பறந்தேன்

முதல் மழை
என்னை நனைத்ததே
லாலாலாலா

முதல் முறை
ஜன்னல் திறந்ததே
லாலாலாலா

பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஓ
இதமாய் மிதந்ததே

ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை

ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும்

உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்

நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்!

ஹா ஹா என்ற சிரிப்பொலி தொடர்ந்து ஏதேதோ வண்ணக் கலவைகள் நிரம்பிய சுவர், அது சுவர் தானா என்று சொல்ல முடியவில்லை… காட்சியில் தெளிவே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பொலி விலகியது, வண்ணங்கள் சாயமிழக்க ஆரம்பித்து இயல்பாக நிலை பெற்றது.

வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையின் ஒரு ஓரத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டது. சற்றுத் தள்ளி ஒரு பெரிய சிவன் கோயில். ரகு அதற்குள்ளே நுழைந்து கோயிலின் பிரமிப்பும், சிவனை தரிசிக்கப் போகிறோம் என்ற பரவசமும் ஒரு சேர மிதந்தான். இதுவே இப்படியொரு நிலைக்கு செல்கிறதெனில் கைலாசம் சென்றால்… ரகுவின் பிறழ்ந்த நிலை நினைவுகளில் ரகுவின் பழைய நினைவுகள்…

(தொடரும் – தினமும் தொடர் எபிசோட்களாக வெளிவரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 2 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை

    ஸங்ஷேபம் – குறுநாவல் (இறுதிப் பகுதி) – ✍ சத்யா.G.P, சென்னை