in

புதுப்பொலிவில் சஹானா, போட்டி அறிவிப்பு & மூன்றாம் ஆண்டு நிறைவு

போட்டிகள்

வணக்கம்,

இன்று சஹானா இணைய இதழின் மூன்றாம் ஆண்டு நிறைவு. இந்நன்னாளில், சஹானா இணைய இதழின் புதுப்பொலிவையும், 2023-24 ஆண்டின் போட்டி அறிவிப்பு விவரம் பற்றியும் பகிர்வதில் மகிழ்ச்சி. 

அதற்கு முன்,  இதுவரை நமது போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்த வணிக நிறுவனங்கள், நிகழ்வுகளில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், “எங்கள் சஹானா இணைய இதழ்” என உரிமையுடனும் பெருமையுடனும் கொண்டாடும் எழுத்தாளர்களாகிய  நீங்கள், அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எழுத்தாளர்களான உங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த பயணம் சத்தியம் இல்லை, எனவே உங்களுக்கு எங்களின் மற்றுமொரு சிறப்பான நன்றி. 

2020ல் இதே நாளில் சஹானா இணைய இதழ் தொடங்கி 100க்கும் மேல் எழுத்தாளர்களின் ஆயிரம் தாண்டிய படைப்புகள் பதியப்பட்டுள்ளது. 2021ல் இதே நாளில் ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் துவங்கி நூறுக்கும் மேல் அச்சு புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். 

இதோ, இந்த வருடம் இதே நாளில்… சஹானா புதுப்பொலிவுடன் உங்களை காண வந்திருக்கிறாள். நிறைய எழுத்தாளர்கள் “நாங்களே நேரடியாய் தளத்தில் பதிவிடும் படி செய்ய இயலுமா?” என கேட்டதற்கு இணங்க, இப்போது சஹானா தளத்தில் நீங்களே நேரடியாய் படைப்புகளை சமர்ப்பிக்கும் வண்ணம் வழிவகை செய்துள்ளோம். சஹானா இணைய இதழின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாளான இன்று இந்த நற்செய்தியை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. 

நீங்கள் தொடர்ந்து சஹானாவில் எழுதி வரும் எழுத்தாளர் எனில், உங்களுக்கான User ID & Password இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். அதன் பின் நீங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம். இனி நீங்கள் தளத்தில் சமர்ப்பிக்கும் படைப்புகள், 2023-24ஆம் வருட சிறுகதை மற்றும் தொடர்கதை (நாவல்) போட்டிக்கு தானாகவே சேர்த்துக் கொள்ளப்படும். அதிக எண்ணிக்கையிலான சிறந்த படைப்புகளை சமர்ப்பிக்கும் எழுத்தாளர்கள் வெற்றியாளர்களாய் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

முறையான போட்டி அறிவிப்பு / விதிமுறைகள் தனிப்பதிவாக வெளிவரும். மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 10000. அதோடு, சிறந்த படைப்புகள் புத்தகமாகவும் வெளியிடப்படும்.

புது எழுத்தாளர்கள் எனில், “சஹானா”வில் எழுத விருப்பம் தெரிவித்து editor@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி பகிர்ந்தால், User ID & Password அனுப்பி வைக்கப்படும். உங்கள் Profile இல் புகைப்படம் சேர்க்க விரும்பினால் அனுப்பலாம், ஆனால் இது கட்டாயம் இல்லை. 

தரமான நல்ல படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி  

என்றும் நட்புடன், 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

editor@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 3) – ✍ சியாமளா கோபு

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி (சின்னுசாமி சந்திரசேகரன்)