வானின்று பெய்யும் நீர்க்கோட்டின் மழையினால்... இவ்வுலகம் தானென்றும் தன்னையேச் சுற்றுதே தன்வழியில் கேளா இயற்கையும் தானுமே மேனி விரித்திடு மிங்கு பசுமையாய்... காடுகளின் பயன்களால் கானமது நீரனுப்புதே... காண்பதே உண்மைகளின் தாரக மந்திரமே... வானமது பூமியினை ஈரமாய் நனைக்குதே... கானமயில் தானுமே தோகை விரித்தாடுதே...
மழை இன்றி வளங்களோ பட்டினியால் அழியுமாமே…
தழைக்காதாம் தாவரங்கள் பூவுலகம் எங்கும்…
பசிப்பிணி நல்மழையால் பாரில் ஒழியுமாமே….
இசைந்தே மழையேவா அவனியில் பொங்கும்!
வான்மழை இல்லையெனில் வாழ்வில்லை எவ்வுயிர்க்குமே…
கான் கூட பாலையாய்க் காட்சியுறுமே…
தேன்சுமந்தே பூந்தென்றல் தேடி வராதே…
வான்முகிலைப் போற்றி வணங்கு தினமுமே…
நிலத்தின் நெடுந்தூர நீர்வளத் தேக்கம்
தலத்தின் உயிர்களைத் தானும் தாங்கிடும்
பண்பட்ட வாழ்வின் பழமையைக் காத்திட
விண்ணின் மழைதனை தினமும் மண்டியிடும….
வாழ்வை வளர்த்திடும் வானத்தின் நீர்தானும்
தாழ்வை அகற்றி தன்மை தனித்திடும்
விண்ணின் கருணை மிகுதியாய் ஓங்கினால்
மண்ணின் மணமே எங்கும் வனப்பு….
மழைதரா வானம் மலட்டை தழுவ
தழைக்காது பூமி தனித்துச் சருகாய்
பிழைக்க உயிரில் பிணைந்தே இயக்கும்
மழையே வானின் விண்ணக மதிப்பு…
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings