வணக்கம்,
முதலில் “ரெசிபி போட்டி” மற்றும் “தீபாவளி நினைவுகள் போட்டி”க்கு ரூபாய் 5000 மதிப்புள்ள பரிசுகள் தர முன்வந்துள்ள Madhura Boutique நிறுவனத்தாருக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்
படம் வரையும் போட்டிக்கான பரிசுகள், “சஹானா இணைய இதழ்” வழங்கும்.
அதோடு, அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்றவர்களுக்கு eCertificates, மற்றும் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு, சஹானா இணைய இதழின் Shieldம் அனுப்பி வைக்கப்படும்
போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதுவும் சிறு பிள்ளைகள் பலர் ஆர்வமாய் அனுப்பியிருந்தது மிக்க மகிழ்ச்சி. வெற்றி தோல்வி விஷயமில்லை, பங்கேற்பதே பெரிது. அதற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு குழந்தைகள் அனைவருக்கும்
போட்டிக்கு வந்த பதிவுகளில், சிறந்தவற்றை (Shortlisted entries) தேர்ந்தெடுத்து பதிவிடும் வேலை, நேற்று மாலையோடு முடிந்தது. நாளையோ நாளை மறுநாளோ முடிவுகளை அறிவிக்கும் எண்ணத்தில் இருந்தேன்.
ஆனால் இரு நாள் முன்பு, போட்டியில் பங்கு பெற்ற ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் அந்த எண்ணத்தை மாற்றி விட்டது. அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம் இது தான்
“Views என்பதையும் ஒரு அளவீடாக வைத்திருக்கிறீர்கள். அப்படியெனில், முதலில் பதிவிட்டவர்களுக்கு தானே அதிக views கிடைத்திருக்கும். கடைசியில் பதிவிடும் பதிவுகளுக்கு, மறுநாளே கணக்கிட்டால், views குறைவாகத் தானே இருக்கும். அது எப்படி சரியாகும்?” என கேட்டிருந்தார்
எனக்கு பதிவுகள் மின்னஞ்சலில் வந்த வரிசையில் தான் Publish செய்தேன் என்ற போதும், அவர் சொல்லும் Point சரி தான், It is not fairனு எனக்கும் தோணிடுச்சு
அதனால், இன்னும் ஒரு வாரம், அதாவது நவம்பர் 29,2020 வரை Views அதிகரிக்க அவகாசம் நீடிக்கப்பட்டிருக்கிறது
நவம்பர் 29, இரவு 12 வரை (IST) கிடைக்கும் Views கணக்கெடுக்கப்பட்டு, அதற்கேற்ப புள்ளிகள் சேர்த்து, நவம்பர் 30, 2020 மாலைக்குள், போட்டி முடிவுகள் வெளியிடப்படும்
எனவே, உங்கள் பதிவு உள்ள Linkஐ, உறவு மற்றும் நட்பு வட்டத்தில் அனுப்பி, Views அதிகரிக்கச் செய்யுங்கள்
மறுபடியும் சொல்கிறேன், Views என்பது ஒரு அளவீடு மட்டுமே. அது அதிகமானால், அதற்கான points சேரும். மற்றபடி, Content, Expression, Formatting, Presentation, Spelling Errors, Punctuation errors, Context என இது போல் பல அளவீடுகள் கொண்டே இறுதி முடிவு இருக்கும். தெளிவாக புள்ளிகள் எல்லாமும் அறிவிக்கப்படும்.
I assure 100% Transparency and Genuineness in Assessment
சில பதிவுகள், பதிவிடும் முன் நிறைய எடிட்டிங் வேலைகள் திருத்தங்கள் எல்லாமும் செய்ய வேண்டியிருந்தது. Content நன்றாக இருந்ததால் அதை நிராகரிக்க மனம் வரவில்லை. நான் திருத்தம் செய்ததற்கு தகுந்தாற் போல் புள்ளிகள் குறையும்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால், “சஹானா இதழில் பதிவிட்டது சரியாய்த் தானே இருக்கிறது, ஏன் இவங்களுக்கு பரிசு கிடைக்கிலை” என உங்களுக்கு சந்தேகம் வரலாம், அதற்கே இந்த விளக்கம்.
புள்ளிகள் Original Content கொண்டே வழங்கப்படுகிறது, not for edited version
ஆரம்ப காலத்தில், எல்லாரும் இது போல் தவறுகள் செய்வது இயல்பு தான். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்” என சொல்வது போல், எழுத எழுதவே எழுத்து கைவரும்.
நான் பத்து வருடங்கள் முன்பு எழுதியதை இப்போது படித்தால், எனக்கே அதில் நிறைய திருத்தங்கள் செய்யத் தோன்றுகிறது. எனவே, எழுத எழுதவே தவறின்றி சரியாய் எழுத இயலும். நன்றி
இப்போது ஒரு முன்னோட்டமாய், எந்த எந்த பதிவுகளுக்கு எத்தனை Views பதிவாகி இருக்கிறது என்பதை இங்கு கொடுத்துள்ளேன். தற்போதய நிலவரம் என்ன என்பதை அறிய, இது உங்களுக்கு உதவும். இது தான் நான் தலைப்பில் சொன்ன Preview 😊👇
பங்கு பெற்ற அனைவருக்கும், வெற்றி பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
பரிசுகள் வழங்கும் Madhura Boutique நிறுவனத்தாருக்கு, மீண்டும் ஒரு முறை எனது நன்றியை பதிவு செய்கிறேன்
https://www.instagram.com/madhura_boutique1/?hl=en
மேலே குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்திலோ, அல்லது அவர்களின் இணைய தளத்தின் மூலமோ, Madhura Boutiqueன் அழகான மற்றும் தரமான Collections பார்த்து, அதில் உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்யலாம்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் டெலிவரி உண்டு. (Charges Applicable for International shipping). நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஹாஹாஹா, பார்த்துட்டேன் ஏடிஎம். மத்தியானம் இதை நீங்க போட்டதுமே இன்னிக்குப் பார்த்துட்டேன். மனசைத் தேத்திக்கிறேன். :)))))
ஆஹா, that’s sent default to all participants maami. I know you dont mind at all 😜🙏