in ,

பொறுமை (சிறுகதை) – பஷீர் அஹமது

எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நான் பெங்களூருல் உள்ள தனியார் நிறுவனத்தில் மாலை வேளையில் பணிபுரியும் சிறு வயது, இல்லை இல்லை கொஞ்சம் வயதான மனிதன் நான். எனக்கு 33 வயது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம். வெளிநாட்டு விடுமுறை நாட்கள் தான் எங்களுக்கு விடுமுறை என்று மிகவும் பெருமையாக சொல்லி கொண்டு உள்ளூர் பண்டிகை நாட்களை அனுபவிக்காமல், வேலை பார்க்கும் ஒரு  சராசரி மனிதன் நான்.

அன்று என்னுடைய வேலையை தொடங்க, என்னுடைய லேப்டாப் எடுத்து வைத்தேன். முகத்தை மட்டும் கழுவி கொண்டு அவசரமா வேலையை ஆரம்பிக்க ரெடி ஆனேன். அப்போது மெல்லமாக கதவை துறந்து, என்னுடைய அம்மம்மா, டீ போடவா என்று கேட்டார்.

நங்கள் எங்களது அம்மாவின் அம்மாவை, பாட்டி என்று கூப்பிடாமல் அம்மம்மா என்றுதான் அழைப்போம். நான் பிறந்த ஊர் முக்கணாமலைப்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை, அன்னவாசல் செல்லும் வழியில் இருக்கும்.  சின்ன கிராமம்.

நான்தான் முதல் பேரன். கொஞ்சம் பாசம் எனக்கு கூடுதலாக கிடைக்கும். ஏனென்றால் நான் பிறகும் போது மிகவும் சிரமபட்டு, அந்த ஊரில் மருத்துவமனை இல்லாமல் அந்த இரவில் புதுக்கோட்டை சென்று மிகவும் நெருக்கடியில் பிறந்தேன் என்று சொல்லுவாங்க. 

எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ நங்கள் பிறந்த அழகான ஊருக்கு வந்து அமைதியை ரசித்து விட்டு, அம்மம்மா வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு எங்கள் ஊரான திருச்சிக்கு போவோம்.

இந்த தடவை நமக்கு தான் வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியும் என்பதால் கூடுதலாக இரண்டு நாட்கள் இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். எப்போதும் நாம் நம்முடைய பாட்டி வீட்டுக்கு சென்றால் அங்கு கவனிப்பு எப்படி இருக்கும் என்று தெரியும்.

அந்த வீட்டு பட்டாவில் மட்டும் தான் நம் பெயர் இருக்காது. ஆனால், நாம் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொண்டு நன்றாக பாட்டி கையில் சாப்பிட்டு விட்டு, மூன்று அல்லது நான்கு கிலோ உடம்பு ஏற்றிக்கொண்டு வருவோம். இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாட்டி வீட்டுக்கே உண்டான பெருமை இது. 

எவ்வளவு தொப்பையோட போனாலும் என்னடா உடம்பு எளச்சுட்டன்னு கேக்குற ஒரு தேவதை தான் என்னோட அம்மம்மா. இந்த பாசமான வரிகளில் இருந்து ஆரம்பிக்கும் எல்லா விதமான சந்தோஷமும்  சாப்பாடும் . நமக்கு நமது வயிறு எவ்ளளவு பெருசா இருக்கு என்று தெரிந்தாலும், பரவாயில்லை ரெண்டு நாள் அம்மம்மா ஊருல நல்லா சாப்டுக்கலாம் என்று ஒரு முடிவு எடுத்துருவேன்.

தனக்கு ஏதும் செய்துகொள்ளாமல், தன்னுடைய பேரன் பேத்திகளுக்கு எல்லாம் செய்ய வேண்டும் , பண்ணவேண்டும், அதுவரை நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் சராசரி பாட்டி தான் எங்க அம்மம்மாவும். 

குள்ளமான உயரம், நரைத்த முடி, விடாத இருமல், கோழிகளை கவனிக்கும் முறை, கால் நீட்டி கொண்டு சாப்பிடும் அழகு. எதை பிரிட்ஜ்’ல் வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று தெரியாத குணம், 5 ரூபாய் 10 ரூபாய்க்கு  பேரம் பேசி உடம்பை கெடுத்து கொண்டு பேரன் பேத்திகளுக்கு பத்தாயிரம் சேர்த்து வைத்து செலவு செய்வது, 

இஞ்சி டீ கேட்டதால் இஞ்சி இல்லை என்று சொல்லாமல் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்டில் கொஞ்சம் எடுத்து போட்டு , பேரன் கேட்டு விட்டானே என்று தெரியாமல் இஞ்சி டீ போட்டு வந்து கொடுக்கும் ஒரு குட்டி வயசான தேவதைதான் எங்க அம்மம்மா.  

எங்க அம்மம்மாக்கு ஒரு பழக்கம் இருக்கு. அவங்க கொடுத்ததை கொஞ்சம் மறந்து விட்டு மாத்தி சொல்லி விட்டால் , அவ்வளவுதான், மிகுந்த கோவம் கொண்டு நான் செய்தேன் என்று நிரூபித்து விடுவார்.

அதனால், அவர் ,நான் உனக்கு முப்பது ஆயிரம் பைக் வாங்க குடுத்தேன் என்பார். நான் சரி என்று சொல்லி விடுவேன். இதில் , நான் மாற்றாக இல்ல அம்மம்மா நீ இருபது ஆயிரம் தான் கொடுத்தாய் என்று சொன்னால், நான் அவ்வளவுதான். முழு வரலாறும் சொல்லி விடுவார். இதில் என் அம்மம்மாவை எங்களால் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் எங்களுக்காக எல்லாத்தையும் செய்த ஒரு அப்பாவி.   

இதே அம்மம்மா வீட்டில் நான் மாலை நேர வேலைய ஆரம்பிக்கும் போது ஒரு டீ, அப்றம் கொஞ்சமா நொறுக்கு தீனி, நைட் நல்ல சாப்பாடு, பத்து மணிக்கு ஒரு டம்ளர் பால் இப்படி என்னோட வீட்டில் கிடைக்காத எல்லாம் என் அம்மம்மா வீட்டில் கிடைக்கும். வேண்டாம் என்று சொல்லவே முடியாது. சண்டைதான் வரும்.

அன்னைக்கு அதே போன்று டீ வந்தது. என்னோட வேலைய அரம்பிக்கலான்னு லேப்டாப் ஓபன் பண்ணுனேன். என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம் இன்று மெதுவாக ஓபன் பண்ணுனேன்.

மனதில் ஒன்று மட்டும் ஓடியது. என்னுடைய மேனேஜர் கேக்குற கேள்விக்கு மூன்று பதில் வைத்து சமாளிக்கலாம் என்று. அதே மூன்று பதிலுடன் வேலையையை தொடங்கினேன்.

அது என்ன பதில் என்றால் “முடித்துவிட்டேன், முடித்துவிட்டு சொல்கிறேன், முடித்து கொண்டிருக்கிறேன்” அவ்வளவுதான். இப்போது என்னுடைய மேனேஜர் கேக்கும் கேள்வி என்ன என்று நான் சொல்லி இங்கு தெரிய வேண்டியதில்லை.

அன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் வீடியோ கால் டீம் மீட்டிங்கில் இருக்கும் போது எப்போதும் போல என் அம்மம்மா கதவை தொறந்து வந்து விட்டார் எனக்கு நொறுக்கு தீனி கொடுக்க வேண்டும் என்று. அதுவும்  client டீம்  கால்.

என்னால் என்ன சொல்வது என்று தெரியாமல் கையை காட்டி சமாளித்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு மிகவும் கோவம் வந்து விட்டது . கோவத்தை அடக்க முடியாமல் ரூம் விட்டு வெளிய போய் நன்றாக எங்க அம்மம்மாவ திட்டிவிட்டேன்.

என் அம்மம்மா ஏதும் பேசவில்லை. ஒரே மௌனம். இரவு 10 மணி ஆனதும் இரவு உணவு, முட்டை தோசை, அப்புறம் பால், எல்லாம் முடிந்து அவரும் தூங்கி விட்டார். ஆனால் எனக்கு என்னவோ ஓடிக்கொண்டு இருந்தது.

பத்து மணிக்கு மேல நான் இதையே யோசித்து கொண்டு இருந்தேன். நாம் அவசரபட்டு விட்டோம். என்னுடைய வேலை எப்படி இருக்கும் என்றே தெரியாத ஒருவரிடம் கோவத்தை காட்டி விட்டோமே என்று.

நாம் ரூம் கதவை மூடி வைத்து கால் அட்டென்ட் பன்னிருக்கலாம். அதை நாம் பண்ணவில்லை. அதனால் என் அம்மம்மா உள்ளே வந்து விட்டார் என்று எண்ணி கொண்டே இருந்தேன்.

அன்று இரவு முழுவதும் இதே யோசனை . இரவு சாப்பிடும் போது கூட நான் சரியாக பேசவில்லை. இந்த இரவு தான் எனக்கு கடைசியா இருந்தால் என்ன பண்ணுவது. என் அம்மம்மாக்கு கடைசியாக இருந்தால் என்ன பண்ணுவது.

நாம் ரொம்ப திட்டிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி குத்தி கொண்டு இருந்தது. எப்போதும் நான் தண்ணீர் குடிக்க ரூம் விட்டு வெளிய போகும்போது அம்மம்மா கண் முழிப்பார். லைட் போட்டு போ என்பார்.

அன்று நான் வேண்டும் என்றே போனேன்

எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மச்சி படத்துக்கு போலாமா (சிறுகதை) – பஷீர் அஹமது