எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நானும் என் நண்பனும் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் பார்த்து பிரியாணி சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று முடிவு செய்து எங்கள் ஊர் திருச்சியில் இருந்து தஞ்சாவூர்க்கு கிளப்பினோம்.
இதை அறிந்த எங்கள் பெற்றோர் “இது ஒரு பொழப்பா” என்று எங்களை பாராட்டி விட்டு அந்த பிரியாணி விலை எவ்வளவு என்று கேட்டனர்.
நாங்களும் 120 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ் வறுவல் என்று சொன்னோம். அடப்பாவிகளா 120 ரூபாய் பிரியாணி சாப்பிட ஏன்டா 500 ரூபாய் செலவழிச்சு பெட்ரோல் போட்டுட்டு போறீங்களேடா, வேற வேலையே இல்லையடா என்று மறுபடியும் அறிவார்ந்த கேள்வி கேட்டனர்.
எப்போதும் போல நாங்களும் இந்த மாறி நல்ல கேள்விகளுக்கு எப்போதும் ஒரு சமாளிப்பு பதில் சொல்லுவோம். அதை சொல்லி இந்த முறையும் தப்பிக்க ரெடி ஆனோம். இந்த முறை நான் ஆரம்பித்தேன்.
“அம்மா அதெல்லாம் உனக்கு புரியாது. வெளில போன நெறய கத்துக்கலாம். ஒரு experience கிடைக்கும். travel வீடியோ நாங்க இன்ஸ்டா-இல் upload செய்வோம். அதுனால லைக் வரும் என்று எதற்கும் பயன் படாத விசயத்தை சொல்லி வீட்டில் இருந்து கிளப்பினோம்.
பைக் எடுத்து கிளப்பிட்டோம் அதையும் இன்ஸ்டா-வில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு கிளப்பினோம். போகும் வழியில் அரசியல், சினிமா, குடும்பம், வாழ்கை, இந்த உலகத்தை எப்படி நாம் மாற்ற போகிறோம் என்றெல்லாம் ஒரே பேச்சு.
என்னுடைய நண்பனும் நிறைய motivation வீடியோ பார்க்கும் பழக்கம் உடையவன். அதனால் அன்று அவனது பேச்சு கொஞ்சம் உச்சத்தில் இருந்தது.
இப்படியே எங்களுடைய பயணம் சென்று கொண்டே இருக்க, எங்களுக்கு எப்போதும் போல ஒரு டீ தேவைப்பட்டது. ஒரு டீ கடையில் இறங்கி, ஒரு ரெண்டு டீ குடித்து கொண்டே மறுபடியும் பேச ஆரம்பிச்சோம். மச்சி நாம ஏன் ஒரு டீ கடை வைக்கக் கூடாதுனு நூறாவது முறை பேசி முடித்தோம் அந்த டீ தீரும் வரை.
இதற்கு முன்னாடியும், நாங்கள் இதே டீ பிசுன்ஸ் பற்றி பேசி பேசி, அந்த டீ-க்கு மட்டும் செருப்பு இருந்தால் எங்களை எடுத்து அதுவே அடிக்கும் வரை நாங்கள் பேசியிருக்கிறோம்.
மறுபடியும் எங்களது பயணம் தஞ்சாவூர் கிளப்பியது. போகும் வழியில் அந்த பிரியாணி வீடியோ பற்றி பேசி கொண்டே போனோம். நாங்கள் தஞ்சாவூர் சேர்ந்தவுடன் ஒரே மழை. அப்போதுதான் அங்கு ஒரு இலக்கிய கூட்டம் ஒன்று எங்கள் கண்ணில் பட்டது.
மச்சி நாம உள்ள போய்டலாம். மழை நின்னதும் கிளப்பிடலாம் என்றேன்.
வேணாம்ட எதோ ஒரு கூட்டம் மாறி தெரியுது. நமக்கு எதுக்கு வம்பு என்று அவன் சொன்னான்.
உடனே இலக்கியம் என்று மொபைல் சர்ச் செய்து அது என்னது என்று என் நண்பன் கற்று கொள்ள ஆரம்பமானான். அப்போதுதான் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட முடியும் என்று.
மச்சி என்ன இது கூட்டம் என்று கேட்டதும் அவன் அதுக்கு எதோ தமிழ் பத்தி பேசுவாங்கனு சொன்னான்.
உள்ளே போனதும் கொஞ்சம் நிறையவே இடம் காலியாக இருந்தது. நிறைய வயதானவர்கள் இருந்தார்கள். இலக்கியம், கல்வி, வாழ்கை, சமூகம், அறம், மனிதம், நட்பு, இயற்கை என்று பேசி கொண்டே இருந்தனர்,
மழையும் விடவே இல்லை. இவர்களும் பேசிக்கொண்டே இருந்தனர். அதை நிறைய பேர் கேட்டு கொண்டே இருந்தனர். நானும் நண்பனும் வேற வழியே இல்லாமல் கேக்க வேண்டிய நிலையில் இருந்தோம்.
அப்போது வயதான இருவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது கொடுக்கப்பட்டது.
நான் நண்பனிடம், மச்சி யாரு இவங்கனு தெரியுமான்னு கேட்டேன்.
உடனே சர்ச் செய்து பார்த்து, மச்சி இவர்களும் தமிழ் பற்றி எதோ எழுதிருக்காங்கனு சொன்னான். நாங்கள் ஒரு போட்டோ மட்டும் எடுத்து கொண்டு, இன்ஸ்டாவில் “தமிழுடன் நாங்கள்” என்று ஸ்டேட்டஸ் போட்டு விட்டு கிளப்பினோம் பிரியாணி கடையை நோக்கி.
கடைசியில் அந்த கடையை தேடி கண்டுபிடித்து நன்றாக சாப்பிட்டு விட்டு அந்த கடையில் உள்ள வேலை செய்பவரை கேட்டோம் “அண்ணா நாங்க வீடியோ பாக்குறப்ப, ஒருத்தர் இங்க பிரியாணி மாஸ்டர்னு வீடியோவுல சொல்லுவாரு. அவரு எங்க காணோம்.
அவரு இங்க இலக்கிய கூட்டம் நடக்குதுன்னு பாக்க போயிருக்காரு என்று அந்த அண்ணனிடம் இருந்து பதில் வந்தது.
நாங்கள் வரும் போது என் நண்பன் சொன்னது “மச்சி அந்த இலக்கிய கூட்டத்தில் பேசுனது பாக்கும் போது அரசியல், சினிமா, குடும்பம், வாழ்கை, இந்த உலகத்தை பற்றி நம்மளோட புரிதல் ரொம்ப தப்புடா என்று.
அடுத்தமுறை பிரியாணி சாப்பிட போகும் போது இது மாறி எதாவது கூட்டம் நடந்தால் நாமளும் கலந்துக்கலாம் என்று.
இறுதியில் வீடு வந்து சேர்த்தோம். எடுத்த புகைப்படங்களை ஸ்டேட்டஸ் போட்டோம். மனசு கேக்காமல் போனை எடுத்து “what is mean by இலக்கியம் ” என்று தேடினோம்.
எழுத்தாளர் பஷீர் அஹமது எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings