எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவள்…அவள்…
அவளை எங்கோ எப்பொழுதோ பார்த்த ஞாபகம். மனதிற்குள் ஏதோ ஒன்று படபடத்தது.
அவளும் என்னை பார்த்தாள். அவளுக்கும் என்னைப் போலவே என்னை பார்த்த ஞாபகம் வந்திருக்குமா தெரியவில்லை.
நான் சிறிது நடந்து பின் நிதானமாக நின்று தயக்கத்துடன் மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்தேகமே இல்லை அவளுக்கும் என்னை பிடித்து இருக்கிறது போல. என்ன ஒரு வசீகரமான முகம் அந்தக் கண்களில் தான் என்ன ஒரு ஈர்ப்பு. காந்தப் பார்வை என்பார்களே அது இதுதானா நெற்றியில் அந்த இரண்டு முடிகள் காற்றிலே தவழ்ந்து அவளின் முகத்தை இன்னும் அழகாக்கி கொண்டிருக்கிறது.
என்னைப் போலவே நிறைய பேர் அவளைப் பார்த்தார்கள்.
அதில் பெண்கள் தான் பலர். பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகி தான் அவள். அதில் சந்தேகமே இல்லை. அவள் என்னையே பார்ப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எங்களின் ஆரம்பம் முடிவுக்கு வந்தது. நான் செல்ல வேண்டிய ரயில்தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.
அவளை மறக்க என்னால் இயலாது. அவளின் அனுமதி இல்லாமல் அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ரயில் ஏறுவதற்குள் இன்னும் அவளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று மனம் ஆசை கொண்டது.
மனதை தைரியப்படுத்திக் கொண்டே அருகில் சென்றேன். அனைவரின் கண்களையும் கவரும், இமைக்காத அவள் சித்திர காந்தக் கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்த ஓவியனின் கை பிடித்து குலுக்கி மிகவும் அற்புதம் என்று பாராட்டிவிட்டு நகர்ந்தேன்.
எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings