வானம் பார்த்த பூமியில் வளமையில்லா தெய்வங்கள் நாங்கள் வானம்பாடி வாத்தியமுண்டு நீலவான கூரையுமுண்டு மழைமகள் நீராட்டுமுண்டு வானளக்கும் பறவை கூட்டம் எச்சமிட்டே எமை வணங்கும் வஞ்சிக்க எந்நாளும் எங்களுக்கு எண்ணமில்லை தென்றல் அவள் எங்கள் சொந்தம் சூரிய சந்திரர் சுடர்விளக்கு எமக்கு ஆடைகள் எங்களுக்கு அந்நியமே என்றும் வருடத்தில் சிலமாதம் தவிர ஊா்ந்திடும் பூச்சிகளையும் உச்சி முகர்ந்தே வரவேற்போம் காவலர்கள் தேவையில்லை களவுகொள்ள ஏதுமில்லை காக்கும் தெய்வங்களாய் காவலுக்கு என்றுமிருப்போம் பூசையுண்டு எங்களுக்கு வருடத்தில் ஒருமுறை வணங்கி செல்லவும் தான் மக்கள்செல்வம் எமக்குண்டு ஊர்கூடி மகிழ உறவும் கூடி நின்று பொங்கல் பல வைப்பர் பொங்கும் உவகையுடன் உண்டியல் எனும் புதைகுழி என்றுமில்லை என்னிடத்தில் வணிகம் செய்ய ஆசையுமில்லை வசதி பெருக்க யோசனையில்லை ஒற்றைமர நிழலுக்குள்ள ஒற்றுமையாய் எம் மக்கள் உள்ளத்தில் கள்ளமில்லை உற்ற துணை என்றுமுண்டு ஆடு மாடுகளெல்லாம் அடைக்கலம் தேடும் என்னிடம் பேரன்பு கொண்ட என்மனதில் பாகுபாடு என்றுமில்லை பொதுவுடைமை மட்டுமே பொதுவாய் எமக்குண்டு
#ad
#ad
யோசிக்க வைக்கும் நல்ல்தொரு கவிதை . கவிஞருக்கு பாராட்டுகள்
கவிதை மழை அற்புதம்..மழையில் நனைந்தது போல் ஈரமாகியது மனம்
வாழ்த்துக்கள்…
இரண்டு வருடம் முன்பு நான் எழுதியது …1500 நபர்கள் வாசித்திருக்கிறார்கள்…
மகிழ்ச்சி..
லெட்சுமணன் செல்வராசு
அரியலூர்