in ,

பெண்ணியம் (சிறுகதை) – ச. பூங்குழலி, தஞ்சாவூர் மாவட்டம்.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

டாக்டர் வடிவு கடற்கரையில் சில்லென்ற தண்ணீரில் தன் கால்களை நினைத்து விளையாடிக் கொண்டிருந்த அவளுக்கு 40 வயது இருக்கும். அவளின் தோற்றம் இளமையாக இருந்தது ஏனென்றால் எதையுமே இயற்கையோடு உடன்பட்டு எடுத்துக் கொள்ளக் கூடியவள் 

வடிவின் கணவர் ஆசிரியர் அழகான இரண்டு பெண் குழந்தைகளோடு இன்பமாக ஞாயிற்றுக்கிழமையை கழித்திட கடற்கரைக்கு வந்திருந்தனர்.

வடிவு அந்தக் கடற்கரையின் இயற்கை அழகை ரசித்தவள் தூரத்தில் ஒரு பெண் கடல் அலைக்குள் செல்வதை கண்டு அதிர்ந்து போனாள். ஓடி சென்று அந்த பெண்ணின் கைகளை பற்றி கொண்டாள்.

கடல் அலைக்குள் சென்ற பெண்ணிற்கு 20 வயது நிரம்பி இருக்கும் . ஏய் நீ யார் என்று கேட்டுக் கொண்டே வடிவு அவளின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணோ நான் யாராக இருந்தால் உங்களுக்கு என்ன என்னை விட்டு விடுங்கள் என்று கதறினாள்.

வடிவுக்கு சற்று கோபம் வரவே ஓங்கி அறைந்து அவளின் கைகளை மீண்டும் இறுக பிடித்துக் கொண்டாள்.

என்ன உனக்கு பிரச்சனை ? உன் பெயர் என்ன? நீ ஏன் கடல் அலைக்குள் செல்கிறாய்? என சரமாரியாக கேள்விகளை தொடுக்க அந்தப் பெண் அழுது கொண்டே என் பெயர் வசந்தா என் ஊர் மன்னார்குடி நான் நன்கு படித்து வக்கீல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தேன். என் வீட்டிலும் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை ஆனால் இந்த பாலாய் போன செல் போனால் வந்த விளைவு என சொல்லிக் கொண்டு அழுதாள் வசந்தா

என்ன செல் போனால் பிரச்சனையா? அது என்ன வடிவின் கேள்விக்கு அழுது கொண்டே instagram மூலமாக சென்னையை சேர்ந்த ஒரு வாலிபன் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது ஆனால் அவனை நான் நேரில் பார்த்ததில்லை அன்பு வார்த்தைகளாலும் ஆசை வார்த்தைகளாலும் என்னை காதலிப்பதாக சொல்லி ஆறு மாத காலமாக செல் போனிலேயே பேசி வந்தோம் இரண்டு தினங்களுக்கு முன்பு உன் வீட்டில் உனக்காக செய்து வைத்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வா நான் உன்னை படிக்க வைத்து கல்யாணம் செய்து கொள்கிறேன் இனியும் உன்னை பார்க்காமல் இருக்க முடியாது என்று கூறினான் மாதவன்.

நானும் அவனை நம்பி வீட்டை விட்டு வந்து விட்டேன் இங்கே பேருந்து நிலையத்தில் வந்தவுடன் அவனுக்கு போன் செய்தேன். நேற்று இரவு அவன் அக்காவின் வீடு என்று சொல்லி அவன் அக்கா தனித்து அந்த வீட்டில் இருப்பதாக அதனால் நீ பயப்படாமல் தங்கிக் கொள் என்று கூறினான் என்னை அக்கா வீட்டில் விட்டு விட்டு அவன் சென்று விட்டான் நானும் பயணம் செய்த அசதியில் தூங்கி விட்டேன் கண்விழித்து பார்க்கும் போது தான் தெரிந்தது இவனும் அந்தப் பெண்ணும் சேர்ந்து என் நகை பணத்திற்காக என்னை ஏமாற்றி விட்டனர் என்று.

வீட்டிற்கு திரும்பி செல்லவும் மனம் இல்லை ஊரில் உள்ளவர்கள் என்னை கற்பு இழந்தவள் என்று தூற்றுவார்களே ஆனால் அவனை நான் போனில் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் அவனை நேற்று மட்டும்தான் ஒரு மணி நேரம் பார்த்து பேசினேன் அவன் விரல் கூட என் மீது படவில்லை என் ஊரில் யாரும் நம்ப மாட்டார்கள் என் படிப்பும் பாழாகிவிட்டது இனி நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று கூறிய வண்ணம் கதறி அழுத வசந்தாவை உற்று நோக்கினால் வடிவு.

சரி உன் கதையை கூறி விட்டாய் நீ சாவதற்கு முன் என் கதையும் கேட்டு விட்டு சாவேன் என்று கூறிய வடிவை வியந்து பார்த்தால் வசந்தா சாகப்போகும் எனக்கு உங்கள் கதை எதற்கு என்று கூறி மீண்டும் அழுதாள்

எல்லாம் ஒரு என்டர்டைன்மென்ட் தான் என்று கூறிக் கொண்டே கயலின் கைகளை இருக்க பிடித்துக் கொண்டாள். வசந்தாவால் அசைய கூட முடியவில்லை.

வடிவு கடலின் அலைகள் மிதப்பது போல தன் எண்ணங்களை மிதக்க விட்டாள்.

 நான் இப்பொழுது டாக்டராக பணிபுரிகிறேன். என்ற வடிவு கூற ஆரம்பித்தவுடன்  வசந்தா தன்னையும் அறியாமல் அவளை கவனிக்க ஆரம்பித்தாள்.

நான் 16 வயது சிறுமியாக இருந்த போது தாய் தந்தையரை ஒரு விபத்தில் இழந்தேன். தூரத்து சொந்தமான என் மாமா என்னை எடுத்து வளர்ப்பதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அவருக்கு குழந்தை கிடையாது. எனவே என்னை குழந்தை போல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சென்றேன்

ஒரு நாள் மாலை 6:00 மணி அளவில் என் மாமி கோயிலுக்கு செல்ல படித்துக் கொண்டிருந்த எனக்கு வலுக்கட்டாயமாக என் மாமா பால் அருந்த கொடுத்தார். அத்தோடு என் நினைவு திரும்பிய போது மாமி கதறி அழுது கொண்டிருந்தாள் என்னால் உடனே எழுந்து கொள்ளவோ விளங்கிக் கொள்ளவோ இயலவில்லை உடனும் மனமும் ஒத்து வரவில்லை சிறிது நேரத்தில் என்ன நடந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

மாமி இவள் என் வீட்டில் இனி இருக்கக் கூடாது என்று சொன்னாரே ஒழிய தன் கணவரின் இழிவான செயலை ஒரு ஆம்பள எப்படி வேணாலும் இருக்கலாம் அப்படின்னு சொல்லி என்னை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

நான் ஒருபோதும் தைரியத்தை இழக்கவில்லை ஏனெனில் என் தாய் தந்தையர் இருந்தபோது எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியதோடு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் என்னிடம் ஏற்படுத்தி இருந்தனர். எனவே அந்த நிகழ்ச்சியை நான் ஒரு விபத்தாக நினைத்து விட்டு ஓரம் கட்டி விட்டு படிக்க ஆரம்பித்தேன் இன்றோ நான் மருத்துவராக இருக்கிறேன் சரி உன்னிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லிவிட்டு நீ செல்.

வசந்தா அதிர்ச்சியோடு வடிவை நோக்கினால்.

கற்பு என்றால் என்ன வசந்தா அது உடல் சார்ந்த்தா அல்லது மனது சார்ந்ததா? உடல் சார்ந்தது என்றால் நான் என்ன தவறு செய்தேன்? எனக்குத் தெரிந்தால் அது நடந்தது? மனம் சார்ந்தது என்றால் நீ என்ன தவறு செய்தாய்? ஆணுக்கு இணையாக பெண் காதலிப்பது தவறா?

பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா? ஆண்களுக்கு கற்பு தேவை இல்லையா? எந்த விலங்காவது கற்பு இழந்து விட்டோம் என்று இறந்து விடுகிறதா? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிப்பார் இந்த ஆண் ஆதித்த சமுதாயம் உன்னை ஏமாற்றுவது உனக்கு புரியும்

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமா இல்லை சாபமா ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டால் என்று சொல்கிறார்களே அவளை கொன்று விடலாமா?

என் உடலைத் தொட்ட மாமா மனதுயரத்தில் உயிரை விட்டானா? இல்லை உன் மனதை தொட்ட மாதவன் உயிரை விட்டானா? இல்லை தானே தவறு செய்தவர்களே தண்டனையை அனுபவிக்க கூட யோசிக்காத போது தவறே செய்யாத நீயும் நானும் ஏன் உயிரை இழக்க தயாராக வேண்டும் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்ளும்படி இந்த சமுதாயத்தின் அமைப்பு அவ்வளவு சீர்கெட்டு உள்ளது பெண்கள் மனது வைத்து தானே உடன்கட்டை ஏறுதலை உடைத்து எறிந்தார்கள் அதைப்போல நாளைய சமுதாயமான நீயும் நிமிர்ந்து நில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்கு இந்த சமுதாயத்திற்கு பயந்து சமுத்திரத்திற்கு ஓடாதே சரித்திரம் படை.

இப்படி பெண்கள் அணிந்து கொண்டே சென்றாள். பெண்ணினம் என்பதே உலகில் இல்லாமல் போகுமே… என்னிடம் அழிந்து போகட்டுமா? உன் ஊருக்கு ஏன் செல்ல முடியாது யார் என்ன சொன்னாலும் நீ நீயாக இரு இயற்கை இயற்கையோடு உடன்படு 

வடிவு சிறிது நேரம் அமைதிக்கு பின் வசந்தாவின் கைகளை விட்டு விட்டால் கை கழுவி அல்ல வடிவு வசந்தாவின் புத்தியை தொட்டு விட்டால் அதனால் கைகளை விட்டு விட்டாள். வசந்தா தன் வசந்தமான எதிர்கால வாழ்க்கையை வடிவின் கண்களில் கண்டாள்.

வடிவின் இரண்டு பெண் குழந்தைகளும் ஓடி வந்து தாயைக் கட்டியணைத்து கொண்டன, மூன்றாவது மகளாக வசந்தாவும் வடிவை கட்டியணைத்து கொண்டாள்

இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கத்தான் ஆசை, இதை வாசிக்கும் நீங்களும் வசந்தா வடிவு போல் மாறினால்…

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிக்கனம் (சிறுகதை) – சுஶ்ரீ

    நினைவுகள் ஓய்வதில்லை (சிறுகதை) – தி .வள்ளி, திருநெல்வேலி