in ,

நினைச்சது ரெண்டு (சிறுகதை) – Writer Susri, Chennai

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ன்னிக்கு வீட்ல ஒரே அமக்களம், ஷாமளிக்கு கல்யாணம் நாளை மறுநாள். ஏகக் கூட்டம். எங்க ரெண்டு ரூம் பிளாட் திணறியது. இப்படி மொட்டையா ஆரம்பிச்சா என்ன புரியும்னு கேக்கறவங்களுக்கு, என்னன்னா எங்க வீட்ல முத முத ஃபங்ஷன் ஒரே எக்சைட்மென்ட். அதான் டக்னு மனசுல வந்ததை சொல்லிட்டேன். சொல்றேன் முதல்ல இருந்து.

நான் பங்கஜா, க்வீன் மேரீஸ்ல ஃபைனல் இயர் பி.எஸ்.சி. என் அக்கா ஷ்யாமளசுந்தரி டிகிரி முடிச்சிட்டு பிராட்வேல ஒரு குட்டியூண்டு எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை பாக்கறா. அப்பாக்கு மவுண்ட் ரோட்ல ஒரு பேமஸ் புக்‌ஷாப்ல மேனேஜர் வேலை. அம்மா இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல ஹெட் கிளார்க்கோ என்னவோ. நுங்கம்பாக்கம் கவர்ன்மெனட் ஸ்டாஃப் காலனில ஒரு 2 ரூம் பிளாட்.

பிரேக் ஃபாஸ்ட் ரொம்ப நாளைக்கு அப்பறம் சேந்து சாப்பிடறோம். அம்மாதான் ஆரம்பிச்சா, “எங்க ஆபீஸ்ல சுந்தர்னு ஒரு பையன் புதுசா சேந்திருக்கான், களையா இருக்கான், நம்மளவாதான், விருதுநகர் பக்கம். நம்ம ஷாமளிக்கு பொருத்தமா இருப்பான்.”

அப்பா : ”பாக்கலாமே, ஒரு நாள் ஈவ்னிங் காபிக்கு கூப்பிடேன்  பேசிப் பாப்போம்.”

ஷாமளி : “அது அது வந்து அவசரப்படாதீங்க நானே சொல்றேன்”

அம்மா : “என்னடி சொல்லப் போறே, ஐய்யோ வயத்துல புளியை கரைக்கறதே”

“ஒண்ணுமில்லை ‘சமீர்’ நம்ம ஏரியா சப்-இன்ஸ்பெக்டர். என்னை தினம் பாத்திருக்கார் ஸ்டேஷன் தாண்டி போறப்ப. ரெண்டு மாசத்துக்கு முன்னால புரபோஸ் பண்ணினார், நான் சரின்னு சொல்லிட்டேன்”

“தலைல கல்லை தூக்கி போடறயேடி, எப்படியெல்லாம் செல்லம் கொடுத்து வளத்தோம்”

அப்பா : “ஏய் என்ன நடந்து போச்சுனு அழுது புலம்பறே. ஷாமளிக் குட்டி… அந்த சமீரை நாளைக்கே வீட்டுக்கு கூப்பிடு முதல்ல பேசிப் பாப்போம்”

ஷாமளி அப்பா கழுத்தை கட்டிண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். நான் ஷாமளி கன்னத்தில். அம்மாதான் அன்னிக்கு பூரா மூஞ்சியை தூக்கி வச்சிண்டு உக்காந்திருந்தா.

அதுக்கப்பறம் எல்லாம் மளமளனு நடந்தது. சமீர் கம்பீரமாதான் இருந்தார். அக்காவுக்கு கனப்பொருத்தம். அவருக்கு பேரண்ட்ஸ் இல்லை, சித்தப்பா மட்டும் மேட்டூர்ல. அவர் பெரிசா ஒண்ணும் அலட்டிக்கலை.

இதோ இப்ப பந்தக்கால் கூட நட்டாச்சு. நாளனைக்கு கல்யாணம். சமீர்தான் சொன்னார், இப்பல்லாம் புதுசா ஏதோ பிரி மெரிடல் ஃபோட்டோ ஷூட்னு இருக்காம். போகணும் கண்டிப்பானு. மகாபலிபுரம் பக்கத்துல முட்டுக்காடுனு பேக் வாட்டர், போட் கிளப் பக்கத்துல அழகான ரிசார்ட்ல ரூம் போட்டாச்சாம்.

அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் வச்சிக்கங்களேனு சொல்லிப் பாத்தார். சமீர் பிடிவாதம், அக்காவுக்கும் இஷ்டம். ஆமாம் இதுல நான் எதுக்கு. வரணும்னு கேட்டேன், கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போயிட்டாங்க.

வாடகை கார் புக் பண்ணி போனோம். அழகான ரிசார்ட்தான். ஆனா எனக்கு அவங்க கூட போறது கஷ்டமா இருந்தது. கார்லயே சமீர் அக்காகிட்ட அவ்வளவு இன்டிமேட்டா நடக்க முயற்சித்தது எனக்கு சங்கடம். அக்கா ஜாடையா எவ்வளவோ சொல்றா “ரெண்டு நாள்ல கல்யாணம் ஆயிடும், அதுவும் இந்த சின்னப் பொண்ணுக்கு முன்னால வேண்டாம்”னு. யாரு கேக்கறா.

ரிசார்ட்ல எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ரெண்டு பெட்ரூம் வில்லா. எனக்கு ஒரு ரூம், அக்காவுக்கு ஒண்ணு சமீர் ஹால்ல எக்ஸ்ட்ரா பெட்லனு பேச்சு.

அக்கா குளிக்கறா போல இருக்கு அவ ரூம்ல, நானும் குளிக்க ஏற்பாடு பண்ணிட்டிருக்கறப்ப கதவு தட்டல். தயக்கத்தோட கொஞ்சமா திறந்து பாத்தேன், சமீர்தான் கதவை திறந்துண்டு உள்ளே வந்து கதவை மூடினார்.

“என்ன அத்தான், நான் குளிக்கப் போறேன், ஒரு மணி நேரத்துல நாம போட்டிங் போகணுமே”

“சரி போகலாம் கொஞ்சம் இங்கே வா”

அவர் பேச்சு என் மேல மேஞ்ச பார்வை பிடிக்கலை. ”இல்லை நான் குளிக்கணும் நீங்க அப்பறம் வாங்க”

“சர்தான் வாடா பங்கு… ஒண்ணும் தெரியாத மாதிரி ஆக்ட் கொடுக்கறயே, உனக்காகதான் இந்த டிரிப்பே ஏற்பாடு பண்ணினேன்”

சட்னு பக்கத்துல வந்து இறுக அணைத்துக் கொண்டான். முகத்தை திருப்பி இதழ்களை கவ்வினான். கைக்கு கிடைத்தது பக்கத்திலிருந்த தண்ணி பாட்டில்தான் அதை எடுத்து அவன் தலையில் போட்டேன். பிளாஸ்டிக் பெட் பாட்டில் அடி சரியா விழலை ஆனா கண்டிப்பா ஷாக் ஆயிட்டான்.

“பரவாயில்லை அப்பறம் வச்சிக்கறேன் உன்னை, உன் அக்காகிட்ட ஏதும் உளறாம இருந்தா உனக்கு நல்லது”. கதவை திறந்து வெளியே போயிட்டான்.

எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியலை. பாத்ரூம் ஷவருக்கு கீழே நின்னேன். அவன் தொட்ட இடமெல்லாம் எட்டுக்கால் பூச்சி ஊர்ந்த மாதிரி அறுவருப்பா இருந்தது. எவ்வளவு சோப் போட்டாலும் துக்கம்தான் வந்தது, சின்ன காம்ப்ளிமென்ட்டரி டூத் பேஸ்டால் என் இதழ்களை அழுத்தி அழுத்தி தேச்சேன்.

ஒரு வழியா மனசை தேத்திண்டு அக்கா ரூமுக்குப் போனேன். நல்லவேளை அந்த சண்டாளன் எங்கேயும் காணலை. அக்காவை பாத்ததும் கட்டிப் பிடிச்சு அழுது எல்லாத்தையும் கொட்டிட்டேன்.

அக்கா வழக்கத்துக்கு மாறான இறுக்கமான முகத்துடன் அமைதி காத்தாள்.

“சரி வா போட்டிங் போலாம், நம்ம டைம் ஸ்லாட் 10 நிமிஷத்துல”னு புறப்பட்டது ஆச்சரியமா இருந்தது. ஒருவேளை நான் சொன்னதை நம்பலையோ.

சமீர் மிடுக்கான தன் போலீஸ் உடையில் காத்திருந்தான். எங்களை பாத்தவுடன் எதுவுமே நடக்காத மாதிரி, “ஹை கேர்ல்ஸ் கம்ஆன், அவர் போட் இஸ் வெயிட்டிங்”

ஷாமளியும், “ஹை ஸ்வீட்ஹார்ட், வி ஆர் ரெடி” னு அவனைப் பாத்து சிரித்தாள்.

அவன், ”ஒய் பங்கு இஸ் லுக்கிங் அப்செட், எனிதிங் ராங்” னு கேக்கறான் தைரியமா.

அக்கா கேட்டா, ”ஏன் யூனிபார்ம்ல பிக்னிக்?”.

“அப்பதான் எல்லாருக்கும் பயம் இருக்கும், பணமும் ஜாஸ்தி கேக்க மாட்டான்”

போட்டில் ஏறினோம், கூட போட்டை செலுத்த வந்த போட்மேனை சமீர் , “நீ வேண்டாம் நான் பாத்துப்பேன்”னான்.

போட்மேனுக்கு தயக்கம் . யாரும் ஒண்ணும் பேசாம போட் ரைட் பண்ணினோம். ஒரு 15 நிமிஷம் நல்ல ஆளமான இடம்.ஷாமளி சட்னு கேட்டா, “இன்ஸ்பெக்டர் சாருக்கு நான் சலிச்சிட்டேனோ, இள ரத்தம் கேக்குதோ, இல்லை ரெண்டும் வேணுமா”

முதலில்  உறைஞ்சு போன சமீர், “இல்லை ஆமாம் நான் உன்னை, பங்கஜாவை ரெண்டு பேரையும் வச்சிக்க தயார். உன்னை பேச்சுப்படி கல்யாணம் பண்ணிக்கறேன், பங்கஜாவை கொஞ்ச நாள் வச்சிருந்துட்டு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம்”

அவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே அந்த துடுப்புக்கட்டை பலமாக அவன் தலையில் இறங்கியது. தடுமாறி ரத்தம் வழிய தண்ணீரில் விழுந்தான் சமீர். இந்த அடியில் அவன் இறக்க வாய்ப்பு இல்லை, ஆனால் செம அடி. மோட்டார் போட் இறைச்சலோடு கரைக்கு திரும்பியது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 5) – முகில் தினகரன்

    நதியோர நாணல்கள் ❤ (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன் மும்பை