எழுத்தாளர் சத்தியபானு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“வாசலோரம் கிடக்கும் செருப்பிற்கு இருக்கும் மரியாதையைக் கூட நமக்கில்லை”, என நினைத்து கொண்டே விழிகளின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீருடன் தயிர்சோற்றுடன் உப்பு நீர் கலந்து உவகையுடன் வாயில் அள்ளி வைக்கும் போது
“நீயெல்லாம் எனக்கு தகுதியான பெண்ணா? அம்மா சொன்னாங்க வேற வழியில்லாம நான் உன்ன கட்டிக்கிட்டேன்”
தொண்டையில் தயிர் சோறு சிக்கி விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஒரு போராட்டமே நடைப்பெற்றது. பிறகு வேறுவழியில்லாமல் சோற்றை விழுங்கி விம்மி… விம்மி… அழுகா தொடங்கினாள் கமலா.
வெளியில் இருந்து காலிங்பெல்லை யாரோ அழுத்த கமலாவோ சோற்றோடு கையை கழுவி இன்றைக்காக விரதத்தை முடித்துக் கொண்டு கதவை மெதுவாக திறந்தாள்.
ஏம்மா, கதவை திறக்க இவ்வளவு நேரமா?
அது வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் அத்தா
அப்படியாம்மா?
கிருஷ்ணா வீட்டுல இல்லையா வேலைக்கு போயிட்டனா கமலா.
ஆமா, அத்தை
இன்னைக்கு கோவிலா ஒரே கூட்டம் நின்னுன்னு கால் இரண்டு புடுங்கி எடுக்குதும்மா
அப்படியா அத்தா….. இருங்க, நான் தைலம் தேய்ச்சு விட்டுறேன் அத்தா….
அலமாரியில் இருந்து தைலத்தை எடுத்து தேய்த்து விட்டாள்…
வலியை மறந்து இதமாக தூக்கினான் ராஜம்… பிறகு கமலா வழக்கம் போல அடுப்பங்கரையில் உள்ள பாத்திரங்களை கழுவிப் போட்டுக் கொண்டிருந்தாள்.
இரவு மணி 10 ஆனது இருந்து கமலா உறங்காது உறக்கத்தை தொலைத்துக் கொண்டிருந்தாள்
“ஏதோ புரியாத விடயம் ஏதோ இறுக்கமான மெளனம் இவற்றிற்கு இடையே பல்லின் சத்தங்கள் அதற்கிடையில் மனமுடையாத இதழின் ஓரம் புரிப்பு”.
அந்த ஷோபாவிலேயே படுத்து உறங்கினாள்… தெருக்களில் அங்கங்கே பால் விற்பவர் சத்தம், காய்கறிகாரரின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலிக்க தொடங்கியது.
கமலாவின் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழமான கனவுகளாய் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பால்காரர் பால் அம்மா பால் அம்மா என் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவளின் செவிகளுக்கு எதுவும் எட்டப்படவில்லை உள்ளே படுத்திருந்த ராஜம் மெதுவாக எழுந்து இதோ வாரேன் கணேசா என் தளர்ந்த குரலில் கூப்பிட்டாள்….
கதவை மெதுவாக பிடித்து வெளியே வந்து பாலை வாங்கிக்கொண்டு காசை கணேசனிடம் கொடுத்தாள்.
வாசலில் வந்து நின்ற கோழிகளுக்கு பக்கத்து ஜன்னலில் வைத்திருந்த அரிசியை எடுத்து தூவினாள் அதுகளும் கொக் கொக் என்று மெதுவாக கொத்த தின்ன தொடங்கியது.
கதவின் தப்பாள் போட்டு விட்டு வாசலில் கிடந்த குப்பைகளை மெதுவாக கூட்ட தொடங்கினாள். அதில் தண்ணீரையும் தெளிந்தாள். பக்கத்து வீட்டு பத்மா வாசலில் வந்து உட்கார்ந்தாள்
ராஜம் காலையில் கோவிலுக்கு போனாயா
ஆமா பத்மா போனேன்…
உன் மருமகள் எங்க அவளா இந்த வேலையெல்லாம் பார்க்க சொல்ல வேண்டியது தானா நீ உடம்பு சரியில்லாத எதுக்கு இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிறா ராஜம்…
எப்பவுமே அவ தான் எல்லா வேலையும் பார்ப்ப இன்னைக்கு தான் அவளுக்கு ஏதோ உடம்புக்கு முடியாலா போல அசந்து தூங்கிறா அவளா எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டு நானே பார்க்கிறேன் பத்மா.
ம்ம் ம்ம் சரி சரி வேலை முடிச்சா கொஞ்சம் உட்காரு ராஜம்
என்ன பத்மா?
அது ஒன்னுமில்லா இன்னைக்கு காலையில் ஒரே சண்டை ராஜம் உங்க வீட்டுலயா..
பத்மா இல்ல உங்க வீட்டுலா தான் உன் மகன் வாசல் வரை நின்னு உன் மருமகளா திட்டிடு போனான் பாவம் கமலா தேம்பி தேம்பி அழுதுக்கிட்டே வீட்டுக்குலா போன ராஜம்.
அப்படியா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல பத்மா அவ வரட்டும் எப்பா பார்த்தாலும் அவள்கிட்ட சண்டை தான் போடுகிறேன்
பத்மா நீ ஜாதகம் எல்லாம் பார்த்து தானா கட்டி வச்சா
ஆமா பத்மா
எப்ப பார்த்தாலும் கீரியும் பாம்புமா சண்டா வந்துக்கிட்டே இருக்குதே அதா கேட்டேன் ராஜம்.
கமலா ஏதும் பேச மாட்டீங்களா அதான் அவ ரொம்ப ஆடுறான்.. இந்த உலகத்திலேயே மருமகளுக்கு சப்போட்டா பேசுற ஒரு மாமியா நீ தான்….
அதுக்கு செல்லல பத்மா வீட்டுலா இருக்கேலா என் மகன் தான் தேவையில்லாம அந்த பிள்ளைகிட்ட சண்ட போடுவான் பத்மா.
ஒரு குழந்தை குட்டி பிறந்துருச்சுனா இது எல்லாம் சரியாகிடும் ராஜம். அது வரைக்கும் இப்படி தான் ராஜம் விடு இதா நினைச்ச கவலபடாதே நான் வரேன்…
ஒரு வம்ச விருத்தியாகிச்சுன்னா போதும் தெய்வமே என் மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு குழந்தையா கூடுப்பா முருகா….. என்று மனத்திற்குள்ளே வேண்டினாள் பத்மா.
கமலா அத்தா உங்களுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்கவா அத்தா.
போடு கமலா தலை கொஞ்சம் பாரமா இருக்கு கமலா நீ டீ போட்டு கொடுத்தால் சற்று இதமாக இருக்கும்.
சமையற்கட்டில் நுழைந்து அங்குள்ள பாத்திரங்களை துவக்கி வைத்தாள் பிறகு அடுப்பை பத்த வைத்து பாலை பாத்திரத்தில் ஊற்றி காய வைத்தாள்.
டீயை போட்டு வெளியில் கொண்டு வந்து ராஜாத்துக்கு கொடுத்தாள்.
நீ டீயா எடுத்து வா கமலா வெளியிலா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கிட்டே குடிப்போம் என்றாள் ராஜம்.
இருவரும் வாசலில் உட்கார்ந்து டீயை குடிக்க ஆரம்பித்தனர்.
அப்போது ராஜம் நான் கோவிலுக்கு போனலா கமலா எங்க ஒரு சாமியார் நீ குழந்தையில்லாத உன் மகனுக்கு தானா வரம் கேட்டு வந்தா நான் கண்டிப்பாக கொடுக்கிறேன் சொன்னாரும்மா கமலா.
கமலா சலிப்பு தட்டாது அமைதியாக அப்படியா நடந்தால் நல்லயிருக்கும் அத்தை,
அதெல்லாம் கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் கமலா கவலப்படாத என்றாள் ராஜம்.
கமலா ஒரு மடிக்கு டீயை உள்ளே இறக்குவதற்குள் தொண்டை ஆயிரம் போராட்டங்களை நடத்தி இறக்கினாள்…. “
மனம் முழுக்க வேதனை தாய் தந்தை குறை சொல்வது இல்லை அந்த ஜோசியக்காரனை குறை சொல்வது இல்லை இல்லை என்ன விதியை நினைத்து அழுவதா! இல்லை, எனக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்த இறைவனை திட்டி தீர்ப்பதாக…. ஒரு வாய் டீயை தொடையில் இடும் போதெல்லாம் ஏதோ விஷயத்தை விழுங்குவது போல தொடையில் ஒரு பலமான அழுத்த ஓடிக் கொண்டிருந்தது.
அவளும் பார்க்காத வைத்தியமில்லா அவளும் வேண்டாத கோவில் இல்லை…. அவளும் நினைக்காத நாளில்லை.
திருமணத்தின் போது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தா கிருஷ்ணா கமலாவின் மீது தீராத வெறுப்பை காட்டுகிறேன்… கமலா பாவம் எதை நினைத்து கவலைப்படுவாள்.
அவள் அம்மாவுக்கும் உடம்பு சரியில்லா…. குழந்தைக்கான வைத்தியா செலவு ஒவ்வொரு மாதமும் கூடிக்கொண்டே வருகிறது….. ஆனால் நின்ற பாடில்லை.
அதையும் தாண்டி இந்த உறவுக்காரவாங்க தொல்லை வேற தாங்க முடியலா?
அனைத்தையும் சமாளித்து வீட்டில் ஒரு மெல்லிய புன்னகையை அள்ளி தெளிப்பாள்.
அதற்கும் கிருஷ்ணா சிடுசிடுவென பொரிந்து தள்ளி விடுவான்…. அவனை சொல்லியும் குற்றமில்லை அவனுடைய வேலை அந்த மாதிரி, அவன் வாங்குற சம்பளம், குழந்தையில்லாத வைத்திய செலவுக்கு மட்டும் முழுவதும் செலவாகி விடுகிறது….
எனக்கு மாத்திரை அதுபோக வீட்டுச்செலவு தாங்க பாரமாய் என் மகன் தலையை ஆட்டிப் பார்க்கிறது. இந்த வைத்தியச் செலவுகள், இருந்தாலும் அதையும் சமாளித்து கடக்கிறது இந்த இனிய நாட்கள்.
இரவு வெகு நேரமாகியும் கிருஷ்ணா வரவில்லை….. கமலாவும் சாப்பிடமாலே தூங்கி விட்டாள். இப்படி எத்தனை இரவுகள் அவள் வயிற்றிற்கு இரையாகி போயினா என்பது தெய்வத்திற்கு தெரிந்ததோ இல்லையோ அவளின் அத்தை நன்றாகவே தெரிந்தது.
இருந்தாலும் அதை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கமலாவின் மனநிலை புரிந்து நடக்கும் நல்ல குணம் அவர்களிடம் நிறையாவே இருக்கிறது.
தன் மகன் மீது தான் குறை இருக்கிறதென யார் வந்து கேட்டாலும் மருமகளை விட்டு கொடுக்காமல் பேசுவார் ராஜம்.
அதிகாலையில் சேவல் கூவியது அடுத்த நிமிடமே கதவை தட்டும் சத்தமும் கேட்டது ராஜம் மெதுவாக எழுந்து கதவை திறந்தார்.
கிருஷ்ணா பதில் பேசாது அம்மா நீங்க எப்ப வந்தீங்க அம்மா கமலா என்ன செய்கிறாள் அவளா கதவா திறக்க சொல்லமுலா அம்மா என்றான்.
சரி சரி அதை விடு நீ என்னை நேத்து காலையிலா வேலைக்கு போன இன்னைக்கு காலையில் தான் வர என்ன நடக்குது ஒன்னுமே புரியலா…. நீ எதற்கு நேத்து கமலாவோடு சண்டா போட்ட….
நீ வந்த உடனே உன்கிட்ட இல்லாது பொல்லாது சொல்லிருப்பா போல
டேய் அவா பக்கத்து வீட்டு பத்மா சொன்னா. தெருவிலா நின்னு கத்தித்து சத்தம் போட்டியா?
அம்மா அது வந்து ஒன்னுமில்லா சும்மா சத்தம் போட்டேன் அம்மா வேற ஒன்னு இல்லா அம்மா. நான் என்னைக்காச்சும் சண்டா போட்டுகேனா அம்மா. வேலையிலா கொஞ்சம் டென்ஷன் அதாம்மா.
அப்படி எந்த டென்ஷனா இருந்தாலும் அதா அவகிட்ட தான் காட்டுவியா கிருஷ்ணா…. அவளே பாவம் மனசுக்குள்ள அவ்வளவு வலியா சுமந்துக்கிட்டு இருக்கா நீயும் இப்படி பண்ண அவா எங்க போவா கிருஷ்ணா.
அம்மா இறுக்க கட்டிப் பிடித்து கொண்ட கிருஷ்ணா எனக்கும் வலியிருக்கும்மா ஆனா அதா வெளியிலா காட்ட முடியலா? நான் வேலை செய்கிறா இடத்திலா இதை சொல்லி சொல்லி என்னையா கிண்டல் பண்ணுறாங்கம்மா. சரி அது அப்படினா…. என் கூட படிச்சா நண்பனா பார்த்தேன் அம்மா அவே மகள் ஐந்தாவது வகுப்பு படிக்கிறா போல அம்மா பெரிய பெண்ணா இருக்கா அவன் என்னை பார்த்து உனக்கு எத்தனா குழந்தைகள் கிருஷ்ணா கேட்டாம்மா…. நான் பதில் பேசாமல் ஓடி வந்துட்டேம்மா.
குழந்தை இல்லாத வலி ஒருபுறமாக மனதில் நெருடிக் கொண்டிருக்க நாளுக்கு நாள் மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முதலில் ஒரு முகாம் அமைத்து பரிசோதனை அனைத்து இலவசம் சொல்லி அடுத்தடுத்து பணத்தை பறித்துக் கொள்கிறார்கள்.
இது மட்டுமா கல்யாணமாகி ஏழு ஆண்டு ஆகிறது தலை தீபாவளி தலை பொங்கலை தவிர்த்து இது நாள் வரை நாங்கள் கொண்டாடியதே இல்லை உங்களுக்கு நன்றாக தெரியும்மா?
மருத்துவமனைக்கு போகும் போதெல்லாம் எப்படியாவது குழந்தை நின்று விட வேண்டும் என்று தவிப்பு.
இந்த முறையாவது ”நல்ல சேதி உங்களிடம் சொல்லி விட வேண்டும் என்ற பதட்டம் எனது மனதில் ஆறாத வலியாய், வடுவாய் இருந்து கொண்டே தான் இருக்கிறது”.
இது போக எத்தனை கோவில்கள், எத்தனை எத்தனையோ பரிகாரங்கள் ஒன்றும் நடக்கவில்லை…தெய்வங்களுக்கு நாம் செய்ய பரிகாரங்கள் இன்னும் போய் சேரவில்லை என்ற தவிப்பு என் இன்னும் உள்ளுக்குள் என்னை வதைத்து கொண்டிருக்கிறது.
எந்த குற்றமும் செய்யாத போதும் அடிக்கடி வீட்டு சிறை வாசத்தில் அகப்பட்டு கொண்டாள் கமலா.
மருத்துவரிடம் செல்லும் போதெல்லாம்” எனக்கு ஏதும் குறைன்னு சொல்லிருவாங்களோ, அவளுக்கு ஏதும் குறைன்னு சொல்லிருவாங்களோ அவளும்”, எந்த ஒரு தவறும் செய்யமாலே அடிக்கடி நீதிமன்ற வழக்குகளாய் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போதும் ஆழ்மனதில் ஏதோ விஷயத்தை விழுங்கு போது “உமிழ் நீரை விழுங்குகிறேன் அம்மா”..
ஏழு ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பை வழங்க முடியவில்லை நீதிபதியால் முயற்சி செய்து செய்து முடிவில் மனவலிமையும், வலியையும் அதிகமாக சேர்த்துக் கொண்டே போகிறோம் நானும் கலமாவும்….
ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் கமலா ஒவ்வொரு முறையும் என்னை குற்றாவளியாகவே பார்க்கிறாள்….
கமலா அவள் அம்மாவிடம் ஜோசியர் சற்று மாற்றி கூறி இருக்கலாம்…. அவருடைய வாழ்க்கையாவது நல்லயிருந்திருக்கும்…
இப்படி போகுது வாழ்க்கை என்று புலம்பினான்….
அதற்கு ராஜம் அழுகாத கிருஷ்ணா விதியோ சதியோ கிடையாது வாழ்க்கை நிர்ணயம் செய்ய முடியாது…. அவரவர் வாழ்க்கையை அவரவர் கையில் சொல்வாங்க ஆனா முயற்சி ஒன்று இருந்தா உங்களுக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும்…. எல்லாத்துக்கும் சீக்கிரமா கிடைக்கிற குழந்தைப்பாக்கியம் உங்களுக்கு சற்று தமாதம் ஆகிறது…. ஆனால் “நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்”. அதற்கு ‘தெய்வமே துணையிருக்கும் ‘கிருஷ்ணா…
எழுத்தாளர் சத்தியபானு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings