எழுத்தாளர் மனோஜ்குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பஸ்ஸில் நடு இருக்கையில், எனக்கு இடம் கிடைத்தது. இடப்பக்கம், வலப்பக்கம் ஆட்கள் நெருக்கி இருக்க, நடுவில் நான் ஒடுங்கி இருந்தேன்.
எனது இடது பக்கம் இருந்தவருடன் பேசியதில், இருவரும் பழகிய நண்பர்கள் போல் பல கதைகள் பேசினோம். தாம்பரம் வந்ததும் இருவரும் இறங்கினோம்.
“வாங்க ஒரு டீ சாப்பிடலாம்” இருவரும் டீக்கடைக்குச் சென்று டீ குடித்தோம். நான் பர்ஸ் திறந்து பார்த்தபோது, எல்லாம் 500 ரூபாய் நோட்டாக இருந்தது.
நான் 500 ரூபாய் நோட்டை எடுத்து, டீக்கடைக்காரிடம் கொடுக்க, அவர் சில்லறை இல்லை என்று திருப்பித் தந்தார்.
“உங்ககிட்ட 20 ரூபாய் இருந்தா குடுங்க ” என்றேன் நான்.
“மன்னிச்சுக்கங்க! என்கிட்ட சுத்தமா காசு கிடையாது. எனக்கு வீடு பக்கம் தான் நடந்தே போயிடுவேன். அதுவும் இல்லாம, நான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன்” அவன் சொன்னபோது, அதிர்ந்து சிலையாகி, பஸ்ஸில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தேன்.
எனது பர்சை முன்பக்க பேன்ட் பாக்கெட்டில், பத்திரமாக வைத்திருந்தேன். இருவரும், நெருக்கிய காரணத்தினாலோ என்னமோ, எனது பர்ஸ் பாக்கெட்டை விட்டு, வெளியேறி இருக்கையில் விழுந்தது. என் வலப்பக்கம் இருந்த இவர் அதை கவனித்து எடுத்தார்.
“சார் உங்க பர்ஸ் சீட்ல கிடந்தது” என்று என்னிடம் நீட்டினார். நான் மகிழ்ச்சி பெருக்கோடு வாங்கிக் கொண்ட நினைவு வந்து போனது.
வேறு யாராக இருந்தாலும், கையில் காசு இல்லாத நேரத்தில் கிடைத்த பர்சை எடுத்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இருப்பான்
இவனது நேர்மை கண்டு வியந்து, அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டேன். எனக்குத் தெரிந்த நண்பரிடம் சொல்லி வேலை வாங்கி கொடுப்பதற்கு.
எழுத்தாளர் மனோஜ்குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings