2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹலோ…” என்றான் கெளதம்.
“ம்… சொல்லுங்க” என்றாள் மானஸா.
“சாப்டியா?”
“ம்ம்ம்… நீங்க?”
“ம்ம்ம்…”
“என்ன பண்ற?”
“ம்… உங்ககிட்ட பேசிட்டிருக்கேன்…இஹுஹு”
“அது சரி! அப்புறம் என்ன?”
“ஒண்ணுமில்ல!”
ஆனா அந்த ஒண்ணுமில்லைக்கப்புறம் தான் ஓராயிரம் இருந்தது!
‘சங்தீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…’ என்பதுபோல் விடியவிடிய தொடர்ந்தது அந்த மயக்கம்.
நிச்சயதார்த்தத்திற்கு சீர்வரிசை மிகப் பெரிய ஊர்வலமாக வந்து சேர்ந்தது. இவளுக்கு மாப்பிள்ளை வீட்டு சார்பில் வைர நெக்லஸூம் வளையல்களும், மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வைர கைச்சங்கிலியும், கைக்கடிகாரமும், மோதிரமும் போடப்பட்டன. பட்டுச்சேலை வாங்க குடும்பத்தோடு காஞ்சிபுரம் சென்று, இவளுக்கு பிடித்தமாதிரி தேர்வு செய்தபோது, முந்தானையில் மாப்பிள்ளை படத்தை நெய்யச் சொன்னாள். திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பு என்று கடற்கரையிலும், வயல் வெளிகளிலும் திரைப்பட படப்பிடிப்பு மாதிரி நடத்தினார்கள்.
திருமணத்தன்று பெண் வீட்டு சீர்வரிசைகள் மண்டபத்தில் ஏதோ கண்காட்சி போன்று அடுக்கி வைத்திருந்தார்கள். வகைவகையான உணவுகள் தனித்தனியே வைக்கப்பட்டு, விருந்தினர் விருப்பத்திற்கேற்ப பறிமாறப்பட்டன. மொத்தத்தில் மிகப்பெரிய திருவிழா போன்று திருமணம் நடந்தேறியது. தேனிலவுக்கு ‘போரா போரா’ தீவுக்கு சென்று வந்தார்கள்.
விருந்தினர் வீட்டுக்கு வரும்போது, இவள் இரவு உடை அணிந்து ஸோபாவில் சரிந்து கிடப்பது மாமியாருக்கு பிடிக்கவில்லை.
“அழகா பட்டுப்புடவ கட்டிட்டு, நகைகள போட்டுட்டு வந்து உட்காரு. எங்க சொந்தக் காரங்க முன்னாடி அப்பத்தான எனக்கு பெருமையா இருக்கும்”
“வீட்ல அதெல்லாம் போட்டுடிருந்தா கம்ஃபர்டபிளா இருக்காது அத்த”
“கெஸ்ட் வரும்போது மட்டும் போட்டுக்கோ. அப்புறம் மாத்திக்கலாம்”
எரிச்சல் முட்டிக் கொண்டு வந்தது. கல்யாணத்துக்கு ஸாரி கட்னதே பெருசு. இதுல டெய்லி இவங்களுக்கு புடவ கட்டி நக வேற போட்டுட்டு உட்காரணுமாம். நான் என்ன கொலு பொம்மையா, இவங்க சொந்தக் காரங்க வந்து ரசிச்சிட்டு போறதுக்கு?
அவள் அறைக்குள் சென்று பட்டென கதவைக் சாத்தினாள். சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. திறந்தால் கௌதமின் ஒன்றுவிட்ட அத்தை சரோஜா சிரித்தபடியே உள்ளே வந்து, ”நாங்க வரும்போது சிரிச்ச முகத்தோட ரொம்ப அழகா இருந்த. பாவம் உன் அத்தகாரி ரொம்ப கடுப்பேத்தி அழ வச்சிட்டா போல. முகம் வாடிப் போச்சே” என்றார்.
“அழலாம் இல்ல”
“சரி கவலப் படாத. அவ அப்டிதான். பணத்திமிரு. அதுமட்டுமில்ல. கௌதம் உன்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவளுக்கு பிடிக்கல. அவ அண்ணன் பொண்ணு, இங்கயே, சுத்திக்கிட்டிருப்பாளே வைஷ்ணவி, அவளக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னுதான் தலகீழ நின்னா. உன் மாமனாரு தான் ஸ்டேட்ஸ் பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டாரு போல. வைஷ்ணவியோட அப்பா பிஸினெஸ்ல படு லாஸாகி கிட்டத்தட்ட எல்லாச் சொத்தையும் வித்துட்டாரு. அவளுக்கு காலேஜ் ஃபீஸெல்லாங்கூட கௌதம்தான் கட்டினான்னு கேள்விப்பட்டேன். ஒங்க கல்யாணத்துல கூட உன் புடவ கலர்லயே அவளுக்கும் புடவ எடுத்துக் கொடுத்தான் போல. கொஞ்சம் பார்த்து நடந்துக்க” என்றாள்.
இரவில் கணவன் வந்ததும், “அத்தைக்கு என்னப் பிடிக்கலியா கௌதம்?” என்று கேட்டாள்.
“அப்டிலாம் எதும் இல்லையே. ஏன்?“ என்றான்.
“இல்ல. சும்மாதான் கேட்டேன். அப்புறம் சும்மா வீட்ல இருக்கும்போதும் புடவ கட்டிக்கோ, நக போட்டுக்கோனு படுத்தறாங்க. ரொம்ப அன்கம்ஃபர்டபிளா இருக்கு“
“கெஸ்ட் வந்ததால அப்டி சொல்லிருக்காங்க. நீயும் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணிருக்கலாம். கதவ அறைஞ்சி சாத்தினயாமே? “
“ஓ வந்தவுடனே வத்தி வச்சாச்சா?“
“வத்தியெல்லாம் ஒண்ணும் வைக்கல. இப்போ நீயும்தான் சொன்ன. அதுக்குப் பேரு வத்தி வைக்கிறதா?“
“ஓ… அப்ப நான் ஒங்கம்மாவ பத்தி வத்தி வச்சேன்“.
“விடு டார்லிங். பசிக்குது. வா சாப்பிடப் போகலாம்“ என்றவாறு பின்புறமிருந்து கட்டியணைத்தான். அவன் கைகளை பிரித்துவிட்டு கீழிறங்கினாள்.
மற்றொரு நாளில் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது வைஷ்ணவி உள்ளே வந்தாள்.
“வா வைஷூ நீயும் அஸ்வினோட பார்ட்டிக்கு வரல்ல? சீக்கிரம் கிளம்பு“ என்றான் கௌதம்.
“ஐயோ அத்தான் நான் மறந்துட்டேன். இப்போ இந்த ட்ரெஸ்ஸோட எப்டி வறது? நீங்க போங்க“ என்றாள் வைஷ்ணவி.
“நீ வேணா மானுவோட ட்ரெஸ் போட்டுக்கோயேன். உனக்கு கரெக்டாதான இருக்கும்? இல்ல நாம போய் புது ட்ரெஸ் வாங்கிட்டு வந்திடலாமா?“ என்றான். அவள் மானஸாவைப் பார்க்க, அவள் நெஞ்சுக்குள் வெடித்த எரிமலையைக் காட்டிக் கொள்ளாமல், “வா தர்றேன்“ என்று தங்கள் அறைக்கு அழைத்துப் போனாள்.
கிளம்பியதும் கழுத்து மொட்டயா இருக்கே, இதப் போட்டுக்க என்று தன் கழுத்திலிருந்த செயினை கழட்டிக் கொடுத்தான்.
விழா முடிந்து வீடு திரும்பி அவர்கள் அறைக்கு வரவும், மானஸா கேட்டாள், “உங்க அம்மாவுக்கு மட்டும்தான் என்னப் பிடிக்கலியா, இல்ல உங்களுக்குமா? “
“என்னடி பேசற? என்னாச்சு உனக்கு?“
“இன்னும் என்ன ஆகணும்? அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, பண்ணித் தொலைய வேண்டியது தான? ஏன் என் லைஃப்ப கெடுக்கறீங்க?“
“யார?“
“உலக நடிப்புடா சாமி. அவ அத்தான், அத்தான்னு கொழயறதும், இவரு அவளுக்கு ட்ரஸ் வாங்கத்தரவா, செயின கழட்டித் தரவானு அலையறதும் “
“என்ன பேசற? அவ சின்னப்பொண்ணு. நம்ம வீட்டுக்குழந்தை. டயர்டா இருக்கு. தூங்கி நல்லா ரெஸ்ட் எடு“ என்றவாறு குளியலறைக்குள் நுழையப் போனான்.
“எனக்கு பதில் சொல்லிட்டுப் போங்க“ என்றவாறு சட்டையைப் பிடித்திழுத்தாள்.
“என்ன தெரியணும் உனக்கு?“
“உங்களுக்கு அவ மேலத்தான லவ்வு. நீங்களும் உங்கம்மாவும் சேர்ந்து அவள கல்யாணம் பண்ணத்தான ப்ளான் பண்ணீங்க?“
“இல்ல. போய்த் தூங்கு“ என்றவாறு மீண்டும் திரும்பி நகர, மீண்டும் இவள், “பொய் சொல்லாதீங்க“ என்றவாறு சட்டையை வலுவாய்ப் பிடித்திழுக்க கழுத்து இறுகியது. இரத்தம் தலைக்கேறி சூடேற்ற, அவள் கையை உதறி, அப்போ நீ, கல்யாணத்தப்ப ஒன்ன உரசிக்கிட்டே அலஞ்சானே உன் மாமன் மகன் அவனக் கல்யாணம் பண்ணத்தான் ப்ளான் பண்ணியா?“
“என்னடா சொன்ன?“ என்று மீண்டும் சட்டையைப் பிடித்திழுக்க, ஓங்கி ஒரு அறை விட்டான். ஒரே பெண்ணாக கொஞ்சி கொஞ்சி வளர்க்கப்பட்ட அவள், பதிலுக்கு அவனை அறைந்தாள்.
பிரச்சினை பெரிதாகி, அவள் பெற்றோரை அழைத்து ஒப்படைக்கப் பட்டாள். கொஞ்ச நாள் சென்றதும் கோபம் குறைந்து ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் இருவரையும் இம்சைப் படுத்தியது.
‘கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ’ என்றும், ‘ஆனாலும் எப்படி அடிக்கலாம்?’ என்ற வீராப்பும் மாறிமாறி வந்தன. ‘அவள் இனித் தேவையே இல்ல ராட்சசி’ என அவனுக்கும், ‘அவன் தேவையில்ல, பூப்போல வளத்து, சீரும் செனத்தியும் கொடுத்து கட்டிக்கொடுத்த பொண்ண எப்டி கைநீட்டி அடிக்கலாம்’ என்று இவளுக்கும் மாற்றி மாற்றி ஏற்றி விட்டார்கள்.
விவாகரத்து அறிவிப்பு அனுப்புமளவு போனது. மானஸாவின் சித்தி இதைக் கேள்விப்பட்டு அவளிடம் வந்து, “நீ கௌதமை எவ்வளவு நேசிச்ச? அவன் அப்படி அந்த பொண்ண லவ் பண்ணியிருந்தா அவ முன்னாடி உன்ன இப்டி பாத்துட்டிருப்பானா? யாரோ சொல்றதக் கேட்டு அவசரப்பட்டு முடிவெடுக்கக்கூடாது. அப்டியே இருந்தாக்கூட உன்னைக் கல்யாணம் பண்ணப்புறம் உன்ன எப்டி நடத்றாங்கறதுதான் முக்கியம். அதுக்குமே நீ ஒரு செட்லிங் டைம் கொடுக்கணும். ஒட்டிப்பிறந்த ரெட்டையர்ல கூட ஓருத்தர் விகரஸாவும், ஒருத்தர் சாந்தசொரூபியாவும் இருக்றத பாத்திருக்கேன். பல வருஷம் ஒண்ணா வாழ்ந்தவங்களே ஒருத்தர ஒருத்தர் முழுசா அண்டர்ஸ்டேண்ட் பண்ணிருப்பாங்கன்னு சொல்லமுடியாது. விட்டுக்கொடுத்தலும், அட்ஜெஸ்ட்மெண்ட்ஸும் தான் வாழ்க்கை. தப்பு பண்ணினாக்கூட தண்டனையைவிட, மன்னிப்பு பெரிய மாற்றத்த கொண்டு வரும். தப்பே பண்ணாதவங்கள குற்றப்படுத்றது மிகப்பெரிய பிளவத்தான் கொண்டு வரும். கோபமா இருக்றப்ப தண்ணி குடிக்கணும்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? கோபமோ, பயமோ ஸ்ட்ரெஸ்ல இருக்றப்ப, உடம்பு அட்ரினல்ல சுரக்கும் ‘ஃபைட் ஆர் ஃபைட் ரெஸ்பான்ஸ்’னு சொல்வாங்க. காயப்பட்டபிறகும் வலிய உணராம ஹீரோ தொடர்ந்து ஃபைட் பண்றார்ல. அதுக்கு காரணம் அதுதான். என்ன பேசறோம்னே தெரியாம பேசுவோம். காயமும் வலியும்தான் மிஞ்சும். சொல்றவங்கள்லாம் பாஸிங் க்ளவ்ட்ஸ் மாதிரி போய்ட்டே இருப்பாங்க. கடைசிவரை கணவனும், மனைவியும்தான் பரஸ்பர ஆதரவு“ என்றாள்.
“இப்ப நான் என்ன பண்றது?“
“சிம்பிள். ஒரு ஸாரி சொல்லு“
இவள் அழைப்பு வரும்போது, இவள் அவனது படத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட படம் திரையில் வந்தது.
“என்ன?“
“ஸாரி“
ஒரு நொடி மௌனத்திற்குப்பின் “ஐ லவ் யு டி, டில் த எண்ட் ஆஃப் மை லைஃப்!“ என்றான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings