2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11
ஜே.கே.யின் நாட் குறிப்பிலிருந்து….
ஜூலை 10, 1972. பய்குல்லாவின் மார்கெட் பகுதியில் ஊரிலுள்ள நண்பரைத் தேடி வந்தேன். ஊரிலிருந்து அத்தையிடமும் தங்கையிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நூறு ரூபாய் பணத்தையும் அவளுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ரயில் டிக்கெட் எடுக்காமல் பாம்பாய்க்கு வந்து மூன்று நாளகி விட்டது.
இன்னும் ஒருமுறைதான் சாப்பிட பணம் இருக்கிறது. தாராவியில் தங்கியிருந்த நண்பரும் கோவாவிற்கு மாற்றலாகிப் போய் விட்டதால் இந்தப் பம்பாய் ஊரில் யாரையும் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் சங்கர் பய்குல்லாவில் காய்கறி மார்கெட்டில் வேலை செய்வதைக் கேள்விப்பட்டு வந்தேன்.
மூன்று நாளும் தூங்கி எழவும் குளிக்க, வெளியே போகப் பட்டபாடு திரும்பவும் ஊருக்குப் போய் அத்தையுடன் சேர்ந்து வயற்காட்டுக்கு தினக் கூலி வேலைக்குப் போய் விடலாமோ என்று தோன்றியது.
எப்போது வரும் என்று சொல்ல முடியாமல் கருமேகங்கள் மின்னல் மூலம் கண்ணை சிமிட்டிக் கொண்டு ’கொட்டிவிடப் போகிறேன் மழைத்தண்ணீரை…’ என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
ரோடெல்லாம் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி, போய் வருகின்ற கார்களின் வேகத்தில் தண்ணீர் தெறித்துக் கொண்டிருக்கிறது.
போட்டிருக்கும் இந்த ஒரே உடையும் பலமுறை நனைந்து உடலை நடுக்கிக் காய்ந்து விட்டது.
மிருகக்காட்சி சாலை, பூங்காவைத் தாண்டி பய்குல்லா மார்கெட் வந்து சேர்ந்த போது ஒரு கடையில் கூட்டம் கூடி நின்றது.
மழைவேறு ஆரம்பித்து விட, நனைந்து கொண்டே “சார், இங்கே சங்கர் எந்த கடையில் வேலை பார்க்கிறார் தெரியுமா” என்று அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையில் கேட்டேன்.
என்னை ஒரு மாதிரி வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த மனிதனைப் போல மேலும் கீழும் பார்த்து விட்டு “கியா” என்றான் அந்த பையாக்காரன்.
தமிழ் புரியாத இடம் என்று எண்ணி என் தலையில் தட்டிக் கொண்டு “சங்கர் கிதர்” என்று தெரிந்த ஒரே ஹிந்தி வார்த்தையை உபயோகித்தேன்.
வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலைச் சிவப்பை ‘புளிச்’ என்று கடையின் முன்னால் நடுரோட்டில் துப்பி விட்டு, “கோன்..சங்கர்… ஏதோ மர் கயா…” என்று அவன் கையைக் காட்டிய பக்கத்தில் அந்தக் கூட்டம் நின்று கொண்டிருந்தது.
அவன் சொன்ன வார்த்தை புரியாமல் அந்தக் கூட்டத்தை நெருங்கிய போது “அய்யோ …அண்ணா.. என்னை விட்டுப் போய் விட்டீர்களே “ என்று தலையில் அடித்துக் கொண்டு தமிழில் அழுது கொண்டிருந்த சப்தம் கேட்க, கூட்டத்தை நெருக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தேன்.
சங்கர் இறந்து போயிருந்தார். அருகில் அவர் தங்கை அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். என் தலைக்குள்ளே ஒரு இடி இறங்கிய மாதிரி இருந்தது. கண்கள் இருண்டு கொண்டு வந்தது.
சுற்றியிருந்தவர்கள் ஹிந்தியிலும், மராத்தியிலும் பேசியதிலிருந்து எனக்குப் புரிந்த ஒரு விஷயம் சங்கருக்குப் பிறகு அவர் தங்கையை யார் காப்பற்றுவார்கள் என்பது மட்டுந்தான். கொஞ்சம் உதவி செய்யலாம் என்று தோன்றியது.
என்ன செய்வது…?
நானே அடுத்த வேளை உணவிற்காக அல்லாடிக் கொண்டிருக்கிற, உறைவிட மில்லாத மாற்றுடையில்லாதவன்.
நான் என்ன உதவி செய்ய முடியும்? கொஞ்ச நேரத்தில் சங்கருக்கு இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. அருகில் அழுது கொண்டிருந்த அந்தப் பெண் மயங்கி விழுந்து விட… அருகிலிருந்த கடையிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன்.
சங்கரின் உடலை எடுத்துக் கொண்டு போகும்போது அந்தப் பெண் எழுப்பிய அபலக் குரல் குரல்வளையை நெறித்தது. சங்கரின் உடல் தீயில் எரியும் போது எந்தக் கனவுகளோடு பம்பாய்க்கு வந்தேனோ அத்தனையும் அந்தத் தீயில் கருகியதுபோல உணர்ந்தேன்.
திரும்ப வந்து அவன் தங்கையிடம் “ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டு விட்டு அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் இரண்டு கப் டீயும் இரண்டு ரொட்டி பொறையும் வாங்கி வந்து அவளுக்கு ஒன்று கொடுத்து விட்டு நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.
“எங்களுக்கு வீடெல்லாம் கிடையாது. இந்தக் கடையைக் கவனித்துக் கொண்டு அதற்குப் பின்னாலிலுள்ள மறைவிடத்தில் சமைத்து சாப்பிட்டு படுத்து கொள்வோம்.”
“குளிக்கிறதுக்கும், வெளியே போறதுக்கும் அந்தாலே பொது கழிப்பிடம் போயிருவோம். ஆமா.. நீங்க… நீ.. நீங்க யாரு?” என்று வாய் குழறிய வாறு கேட்டாள். சங்கரின் தங்கை
“நான்… நான்.. ஜெயக்குமார். என் நண்பர் சங்கர் பய்குல்லாவில் காய்கறி(பாஜி) மார்கெட்டில் வேலை செய்வதைக் கேள்விப்பட்டு அவர் மூலம் வேலை தேடிக் கொள்ள பம்பாய்க்கு வந்தேன். ஆமாம்.. உன் பெயர் என்ன?” என்று கேட்டேன்.
“ராணி” என்றாள் பயம் தீராமல்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings