2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அம்மா, இங்கே வந்து பாருங்க யாரு வந்திருக்காங்க” என்று மகன் ஸ்ரீராம் கூப்பிட ஓடோடி வந்தாள் தாய் சங்கீதா. விருந்தாளியை பார்த்ததும் கண்ணில் நீர் தழும்பியது.
“எதற்காக அழுகிறீர்கள், உங்களுடைய பையன் மிகவும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும்போது, நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என வந்திருந்த விருந்தாளி சாரதி சொன்னார்.
“அம்மா, நீங்க பேசிக்கொண்டு இருங்கள், நான் என்னுடைய நண்பனை பார்த்துவிட்டு அரைமணி நேரத்தில் வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிட்டான் ஸ்ரீராம்.
“உங்களை இந்த கோலத்தில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை. என்ன ஆகி விட்டது உங்கள் கணவருக்கு, எதற்காக இந்த முடிவை எடுத்தார்” என சாரதி கேட்டார்.
“சந்தேக என்ற பேய் தான் அவரை தற்கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய் விட்டு விட்டது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் சந்தேகம். நானும் பலமுறை சொல்லி பார்த்தேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவரை விரும்பினது உண்மைதான். ஆனால் வெளியே எங்கேயும் சுற்றியது கிடையாது என சொன்னாலும் அவர் நம்புவதாக இல்லை.
திருமணமான புதிதில் ஆறு மாத காலத்தின் என்னை நன்றாகத் தான் என்னுடைய கணவர் வைத்திருந்தார். எந்த குறையும் சொல்ல முடியாது. நல்ல மனுஷன் தான். நான் கர்ப்பமாக இருக்கும் போது என்னுடைய அண்ணி என்னை பார்க்க வந்தார். அப்போது என் வீட்டில் நான் எழுதிய சமையல் குறிப்பு டைரி என எடுத்து வந்து சில டைரி கடை என்னிடம் கொடுத்தார்.
அதிலிருந்த ஒரு டைரி மட்டும் நாம் சந்தித்த நாட்களைப் பற்றி எழுதி இருந்தேன். நீங்கள் என்னை வர்ணித்து எழுதிய கவிதையும் அந்த டைரியில் தான் இருந்தது. அண்ணி கொண்டு வந்த சில டைரிகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு டைரியில் நாம் சந்தித்த நாட்களையும் கவிதையும் படித்துவிட்டு அமைதியாக வைத்து விட்டார்.
என்னிடம் எதுவும் கேட்கவில்லை. பத்து நாட்கள் அமைதியாக சென்று கொண்டிருந்தது. என்னிடம் பழைய கணவராக பேசுவது குறைந்துவிட்டது. நானாக பிரியப்பட்டு சென்று பேசினாலும் என் கணவர் முகம் கொடுத்து பேசவில்லை.
ஒரு நாள் ஒரு சின்ன வாக்குவாதத்தில் இந்தக் குழந்தை என் குழந்தையா அல்லது உன் காதலன் சாரதி குழந்தையாய் என கேட்க நான் தடுமாறி போய் விட்டேன். அதில் ஆரம்பித்த சந்தேகம், அவருக்கு அது நோயாகவே மாறிவிட்டது. பிறந்த வீட்டுக்கு போவது குறைந்து போய்விட்டது. அங்க எதற்காக போகிறாய், உன்னுடைய பழைய காதலனை பார்க்க போகிறாயா? என கேட்பார்.
நான் இவர் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து கொண்டே எங்கேயும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். கைபேசியில் என்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கூப்பிட்டது காதில் விழவில்லை. நானும் கவனிக்கவில்லை. அவர்தான் ஒரு சந்தேகப் பிராணி ஆச்சே. நான் என்னுடைய பழைய காதலனுடன் பேசிக் கொண்டிருப்பதாக அவர் நினைத்துக் கொண்டு ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வயிற்றில் வளர்கின்ற குழந்தைக்கு அம்மா வேண்டுமே, அதற்காக நானும் தவறான முடிவை எடுக்காமல் குழந்தைக்காக வாழ ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்த போது அமுதா என்ற தோழி இருந்தால் அல்லவா, அவள் இன்று வரை என்னுடன் தொடர்பில் தான் இருந்து கொண்டிருக்கிறான். அவளுக்கு அனைத்தும் தெரியும்.
என் பையனுக்கும் அனைத்தும் தெரியும், நான் எதையும் மறைக்க மாட்டேன் என்னுடைய பையனிடம். அமுதாவிடம் உங்களைப் பற்றி என் பையன் கேட்க அவள் சில தோழிகளை கண்டுபிடித்து உங்களுடைய கைபேசி நம்பரை வாங்கி என் மகன் ஸ்ரீராமனிடம் கொடுத்து உள்ளார்.
அவனும் உங்களை கண்டுபிடித்து அழைத்து வந்து இதோ என் கண் முன்னாலேயே உட்கார வைத்திருக்கிறான். உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் சந்தோசம். நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது தவறு. எனக்கு தான் திருமணம் ஆகி விட்டது அல்லவா. இது உங்களுக்கு தெரியும்” என சங்கீதா கூற
“உன்னைத் தவிர என்னுடைய மனது யாரையும் மனதில் உட்கார வைத்து அழகு பார்க்க முடியவில்லை” என சாரதி சொன்னார்.
அப்போது ஸ்ரீராம் வீட்டில் உள்ளே வர பேச்சு தடைப்பட்டது.
“அம்மா நான் சாப்பிட்டு விட்டேன் நீங்கள் சாப்பிடுங்கள்” என சொல்லிவிட்டு டைனிங் டேபிள் சாப்பிடுவதற்கு தட்டை எடுத்து வைத்து இருவருக்கும் சாப்பாட்டை பரிமாறினான் ஸ்ரீராம்.
ஸ்ரீராம் மிகவும் யோசித்து, வந்திருந்த விருந்தாளியிடம், “எங்க அம்மாவின் நினைவாகவே நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டீர்கள். இதற்கு பிரயாசித்தமாக நான் என்னுடைய அம்மாவை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன்” என்று சொன்னான் ஸ்ரீராம்.
முதலில் இருவரும் மறுத்தனர், ஸ்ரீராமின் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொள்ள இரண்டு பேரும் சம்மதித்தார்கள்.
ஒரே வாரத்தில் தன்னுடைய அம்மாவுக்கும், அம்மாவின் பழைய காதலரான சாரதிக்கும் மிகவும் சந்தோசமாக, எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி முடித்தான் மகன் ஸ்ரீராம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings