அம்மா கை சிகப்பு பார்த்து
அது போல் எனக்கும் வேணுமென
அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்த
அழகிய பசுமை நினைவுகள்!!!
வாய்ல வெச்சுப்ப வேண்டாம்னு
வாகாய் அம்மா எடுத்து சொல்ல
வேணும்னா வேணும்னு
விடாமல்அழுத நினைவுகள்!!!
இலையை பறிப்பதில் தொடங்கி
இன்னும் பாக்கும் கூட சேர்த்து
அரைத்து எடுக்கும் வரை
அம்மா காலை சுற்றிய நினைவுகள்!!!
விரல் நுனியில் தொப்பி வைத்து
வட்டத்தை உள்ளங்கையில் இட்டு
அசைக்காம நில்லேண்டினு
அம்மா அதட்டிய நினைவுகள்!!!
ஒரு கைக்கு போதும்டி
ஒழுங்கா கேளுனு சொல்ல
புரண்டு கைகால் உதைத்து
பொய்க்கண்ணீர் உகுத்த நினைவுகள்!!!
படுத்தால் கலைந்திடும்னு
பல்லை கடித்து தூக்கம் விரட்ட
பின்னிரவில் அம்மாஸ்பரிசத்தில்
படுக்கையில் சுருண்ட நினைவுகள்!!!
எனக்குத்தான் நல்லா சிவந்ததென
எந்தங்கையை சிணுங்கச் செய்து
பாட்டியிடம் கொட்டு வாங்கி
அழுது முகமும் சிவந்த நினைவுகள்!!!
பெரியவளாய் ஆன நாளில்
பெருமிதமாய் கண்ணேறு கழித்து
சொந்தங்கள் மருதாணியிட்ட
சொர்க்கமான நினைவுகள்!!!
சிவக்குமளவு ஆசையாம் என
சிநேகதிகள் கேலி செய்ய
சும்மா என தெரிந்தாலும்
சிவக்கனுமென செய்த முயற்சிகள்
இந்த நொடி நினைத்தாலும்
இனிமையான நினைவுகளே!!!
கைத்தலம் பற்றிய நாளில்
கள்ள பார்வையில் ரசித்துவிட்டு
பின் கிடைத்த தருணத்தில்
பாராட்டிய ரகசியங்கள்
சற்றே இன்று நினைத்தாலும்
சிவக்க வைக்கும் நினைவுகள்தாம்!!!
சஹானா இணைய இதழில் அடுத்த கவிதை வெளியிடப்படும் போது, Auto Notification மூலம் Email பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்து, Subscribe செய்யலாம். நன்றி
.மருதாணிவிழிகள்
இரவில்தூங்கியநாள்முழுவதும்என்தூக்கம்
தொலைந்துபோனதுஅன்பேஏன்என்றால்
என்தூக்கமேஎன்கையின்ஓரத்தில்இருக்கும்அந்தவண்ணமையமானதூக்கத்தில்தான்தொலைந்ததுஎன்தூக்கமே
மிக்க நன்றிங்க
பெண்களே அழகு . அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியல்லவா ?
பெண்களே அழகு . அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியல்லவா ?மருதாணியல்லவா கவிதையும் அழகாய் உள்ளது
Thanks a lot for your compliment