in ,

மது-மாது-சூது (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இரண்டு நாட்களாக மது, மாதுவுடன் கோவா விடுதியில் ஜாலியாக ஆட்டம் போட்டுவிட்டு, திங்கள்கிழமை காலை சோர்வுடன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்தான் மாதவன் .

அவன் தன்னுடைய தனியறையில் சென்று அமர்ந்தவுடனேயே , அவனுடைய ரகசிய மொபைல் ஒளிர்ந்தது, அவசரமாக அதை உயிர்ப்பித்து பேசிய மாதவனிடம் எதிர்முனையில் பேசியவர் , என்ன மாதவன், லட்சக்கணக்கில் காசு வாங்கிகிட்டு தவறான புள்ளி விவரங்களை கொடுத்து இருக்கீங்க, இந்த முறை ஒப்பந்தம் உங்க கம்பெனிக்கே முடிவு ஆயிடுச்சு, இனிமே உங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்தார். அதிர்ச்சி அடைந்த மாதவன், நாம நம் நிறுவனத்தில் என்ன தொகையை டெண்டரில் குறிப்பிட்டிருந்தார்களோ அதை அப்படியே ஸ்கேன் செய்துதானே அனுப்பினோம், இடையில் என்ன ஆச்சு?ன்னு தெரியவில்லையே என குழம்பிப் போனான்.

அப்போது மேசை மேல் இருந்த இன்டர்காம் ஒலித்தது, அதில் பேசிய நிறுவன இயக்குனரின் நேர்முக செயலாளர், “சார் உங்களை இயக்குனர் உடனே அவரது அறைக்கு வர சொன்னார் என்று கூறினார். மாதவன் அவசரமாக புறப்பட்டு சென்றபோது இயக்குனரின் அறையிலேயே பொது மேலாளரும் அமர்ந்திருந்ததை கவனித்தான் .

இயக்குனருக்கு வணக்கம் சொன்ன மாதவனை பார்த்து இயக்குனர், “ என்ன மாதவன், வேலை பார்க்கிற நிறுவனத்திற்கே துரோகம் செய்கிறீர்களா”? என கோபமாக கேட்டார்.

“என்ன சார் சொல்றீங்க” ?!, என அதிர்ச்சியுடன் கேட்டான் மாதவன்.

சும்மா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க, நீங்க இங்க வேலை பார்த்துக்கிட்டே என்னோட போட்டி நிறுவனத்திற்கு, இங்கிருந்து அனுப்பப்படும் அனைத்த ஒப்பந்தப் புள்ளி தொடர்பான விவரங்களையும் ரகசியமாக கொடுத்து வந்து இருக்கீங்க ,

கொஞ்ச நாளாவே உங்க மேல சந்தேகம் ஏற்பட்டு, தனியார் முகமை மூலம் உங்களை கண்காணிக்க சொல்லியிருந்தோம்அவர்களும் உங்களை ரகசியமாக கண்காணித்து, உங்களுடைய ரகசிய போன் உரையாடல்கள், நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் பதிவு செய்து கொடுத்துட்டாங்க.

அதனாலதான் நாங்க கடைசியா அனுப்பின ஒப்பந்த புள்ளிகளில் உங்களை ஒரு குறிப்பிட்ட தொகையை போடச் சொல்லிவிட்டு பிறகு, தனியாக நாங்கள் வேறு ஒரு ஒப்பந்தப் புள்ளியை அனுப்பி அந்த காண்ட்ராக்டைகைப்பற்றினோம், அது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. நீங்கள் எப்போதும் போல நமது ஒப்பந்தப்புள்ளியை அனுப்பியவுடனே அதன் நகலினை உங்களுக்கு காசு கொடுத்த போட்டி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள், அவர்களும் அதை உண்மை என நம்பி, அதில் கூறப்பட்டிருந்த தொகைக்கு ஏற்றார் போல் தங்களது ஒப்பந்தத்தை அளித்திருந்தார்கள் , ஆனால், நாங்கள் திருத்தி அனுப்பிய ஒப்பந்தப்புள்ளி அவர்கள்அளித்திருந்த தொகையைவிட குறைவாக இருந்ததால் அந்த ஒப்பந்தம் நமக்கு கிடைத்து விட்டது என்றார் பொதுமேலாளர் .

அப்போது குறுக்கிட்டு மீண்டும் பேசிய இயக்குனர், இங்கே வேலை பார்த்து கொண்டே மற்றொரு நிறுவனத்திற்கு சாதகமாக நம்முடைய ரகசியங்களை தெரிவித்து நீங்கள் பணியாற்றிய இந்த நிறுவனத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து வந்துள்ளீர்கள் , “இனிமேல் இந்த நிறுவனத்தில் உங்களுக்கு வேலை இல்லை” நீங்கள் வெளியே போகலாம் என கோபமாக கூறினார்.

மாதவனும் எந்தவித மறுப்பும் கூறாமல் அவசரமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினான். மறுநாள் தான் எந்த நிறுவனத்திற்கு ரகசிய தகவல்களை அளித்து உதவி செய்தானோ, அதே நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்து நடந்தவைகளை விளக்கிக் கூறி தனக்கு வேலை அளித்து உதவுமாறு கேட்டுக்கொண்டான்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர், “ மிஸ்டர் மாதவன், நீங்கள் வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அந்த நிறுவனத்தின் ரகசிய தகவல்களை காசுக்காக எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள். தற்போது உங்களுக்கு எங்களது நிறுவனத்தில் வேலை அளித்தால் எங்களுக்கும் அதேபோல துரோகம் செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்,?

Sorry, உங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை தர இயலாது என்று கூறி முடித்தார்.

தாம் செய்த தவறுகளே தனக்கு எதிராக திரும்பி விட்டதை அறிந்த மாதவன் தலை குனிந்தபடியே வெளியேறினான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புனைவுலகம் (சிறுகதை) – ராஜேஸ்வரி

    அதென்ன நாளைக்கு? (சிறுகதை) – முகில் தினகரன்