2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
லலிதாங்கி கேட்டதற்கு பதில் சொல்ல முயன்றவனை, காவலாளி குறுக்கிட்டு “இளவரசே நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். நான் இவர்களிடம் உங்களை பற்றி சொல்லி விடுகிறேன். இனி இப்படி தங்களை எதிர்த்து பேச மாட்டார்கள். நான் உறுதி தருகிறேன். நீங்கள் கிளம்புங்கள்.” என்று கோபமான அந்த வாலிபனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
அவன் சென்றதும் இவர்களிடம் வந்த காவலாளி “அம்மா அவர் யார் என்று தெரியாமல் நீங்கள் இப்படி பேசாதீர்கள் அவர் நம் இளவரசனின் தோழர், பக்கத்து நாட்டு சிற்றரசனின் மைந்தன் இளவரசர் மதங்கன்.
சிறிது துற்குணம் கொண்டவர். அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் உள்ளே செல்லுங்கள். இவர் நம் ராணியாரிடம் அனுமதி பெற்றே இங்கு வருகிறார். எப்பொழுதுதாவதுதான் வருவார். அவர் நாட்டிலுள்ளப் பெண்கள் இங்கு தங்கி பயலுகிறார்கள். அவர்களை அவ்வப்பொழுது வந்து பார்த்துவிட்டு செல்வார். பயம் கொள்ளாதீர்கள். இங்கு அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள்.”
“ம்..நல்லது, ஆனால்…அவரை துர்குணம் உள்ளவர் என்று சொன்னீர்களே?”என்றாள் சந்தேகத்துடன் லலிதா.
“ஆமாம் அம்மா. அவர் கொஞ்சம் கோபக்காரர். அதனால் அப்படி சொன்னேன். கோபம் ஒரு துர்குணம் தானே.”என்றார் காவலாளி சிரிப்புடன்.
தங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்தும் லலிதா யோசனையுடன் இருப்பதை கண்ட வதனா “இன்னும் என்ன யோசனை? அதுதான் விஷயம் தெளிவாகி விட்டதே பிறகு என்ன? என்று கேட்டாள்.
“இல்லை, எனக்கு என்னவோ இங்கு ஏதோ தவறாக நடப்பது போல் மனதிற்கு தோன்றுகிறது.” என்றாள் லலிதாங்கி.
“ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அந்த மதங்கன் வெளிவந்த அறையில் யார் இருக்கிறார்கள் என்று போய் பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டாள் வதனா.
“அதுதான் சரி, வா போகலாம்” என்று லலிதா கூறஇருவரும் கிளம்பினார்கள்.
அந்த அறையின் கதவை மெதுவாக தட்டினார்கள்
யாரது ? என்று கேட்டுக் கொண்டே உள்ளே இருந்து இவர்களது வயதையொத்த ஒரு மங்கை வந்தாள்.
இவர்கள் அவளிடம் மதங்கனைப் பற்றி விசாரித்தார்கள். அந்த மங்கையும் காவலாளி சொன்னதையே சொன்னாள்.
இருவரின் மனதில் இருந்த குழப்பமும் பயமும் தீர்ந்து அமைதியானார்கள்.
.மறுநாள் காலை வதனசச்சந்திரிகா லலித்தாங்கியை எழுப்பினாள். “லலிதா..எழுந்திரு… வா, இன்று அருவியில் நீராட போகலாம். இங்கு இந்த மாளிகையில் உள்ள குளத்தில் குளித்து, குளித்து சலிப்பாகிவிட்டது எனக்கு” என்று கூறியபடி.
சரேலென எழுந்த லலிதா “சரி, சரி, பிடிவாதம் பிடிக்காதே, வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. உனக்கு துணையாக வருகிறேன். எனக்கு அருவி நீர் ஒத்துக் கொள்ளாது. என்னை நீராடச் சொல்லி வற்புறுத்தாதே” என்றாள்.
வதனா சிரித்துக்கொண்டே “ஆகட்டும். சொல்லவில்லை” என்றாள்.
அவர்கள் தங்கியிருந்த விடுதி மாளிகையின் பின்புறமாக சென்ற அகன்ற பெருவெளியில் நடக்கத் தொடங்கினர்.
அருவிக்கு செல்லும் வழியெங்கும் காட்டுச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து பல வண்ணப் பூக்களுடன் ஒரு வித கசப்பு நறுமணத்துடன் வாசம் வீசியது. மூலிகை மரங்களின் வேர்களின் வாசம் சுவாசத்தில் நிறைந்தது. காலை இளம் காற்று மேனியை வருடி ஒரு வித ஏகாந்த நிலைக்கு அழைத்துச் சென்றது.
“அதோ,அங்கே பார். அருவி…எவ்வளவு உயரமான மலையிலிருந்து விழுகிறது பார்.”என்று வதனா உற்சாகக் குரலில் கூறிக் கொண்டு வேகமாக ஓடினாள்.
“இரு, வதனா…மெதுவாகச் செல் “என்று பின்னாடியே ஓடினாள் லலிதாங்கி.
அருகே செல்ல செல்ல அழகான, பிரமாண்டமான, உயரமான மலை உச்சியிலிருந்து அருவி பேரிரைச்சலுடன் கொட்டிக் கொண்டிருந்தது. சத்தம் காதை அடைக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருவரும் காதை மூடிக்கொண்டனர்.
லலிதாங்கி வதனாவின் அருகில் வந்து “இந்த இடத்தில யாருமே இல்லை. இங்கு நீராட வேண்டாம். வா…சென்று விடலாம்.”என்று பயந்த குரலில் தடுத்தாள்.
“சரி, சரி..பயப்படாதே..நீராட வில்லை. அருகே சென்று அந்த அருவியின் நீரை தொட்டுப் பார்க்கலாம், வா”.. என்று லலிதாங்கியை இழுத்துக் கொண்டு போனாள் வதனச்சந்திரிகா. இருவரும் அருவியின் அருகில் சென்று அந்த நீரை கைகளால் அள்ளி பருகினர் “எவ்வளவு சுவையாக எவ்வளவு வாசனையாக இருக்கிறது?”என்று ஆனந்தக் கூச்சல் போட்டார்கள்.
வதனா அந்த அருவியில் நீராட ஆரம்பித்தாள். லலிதாங்கியையும் நீரில் இழுத்து நனைத்தாள், சிரித்துக் கொண்டே.
இருவரும் ஆசை தீர சிறிது நேரம் நீரில் மகிழ்ச்சியாக சத்தமிட்டுக்கொண்டே முழுகிவிட்டு வெளியே வந்தனர்.
“போதும்… போதும்… வா… உடை மாற்றிக் கொள்ளலாம்” என்று லலிதாங்கி சொன்னதும் அருவியின் வலப்புறத்தில் அடர்த்தியாக வளர்ந்து இருந்த காட்டுச் செடிகளின் மறைவிற்கு சென்றார்கள்.
இருவரும் உடைமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ புகை நாசியை தாக்க “எங்கிருந்து புகை வருகிறது ஐயோ ஒரே கசப்பு நறுமணமாக உள்ளதே” என்று கூறிக் கொண்டே சுற்று மற்றும் பார்த்தார்கள்.
“இங்கு பக்கத்தில் எதுவும் இல்லையே, தூரத்தில் ஏதோ காய்ந்த சருகுகளை எரிக்கிறார்கள் போலும். சரி, சரி வா விரைவாகப் போகலாம்” என்று சொன்ன வதனா லலிதாங்கின் கையைப் பிடித்துக் கொண்டாள். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
அருவியின் எதிர்ப்புறம் இருந்த சிறிய சிறிய பாறைகள் மேல் காலை வைத்தபடி மெதுவாக நடக்கும்பொழுதே இருவருக்கும் கால்கள் துவண்டு, கண்கள் இருள ஆரம்பித்தது. ஐயோ மயக்கமாக வருகிறதே” என்று இருவரும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அப்படியே அந்த பாறையில் சரிந்தனர்.
குதிரைகளின் சத்தமும், அங்கே பார் ஏதோ இரண்டு பெண்கள் மயங்கி கிடக்கின்றனர் வா அருகில் சென்று பார்க்கலாம் என்ற குரலோசையும் கேட்டபடியே …சிந்திக்கும் திறனை இருவரும் இழந்து மயக்கத்தில் ஆழ்ந்தனர்.
“இனி பயமில்லை இவர்களுக்கு முழு நினைவும் திரும்பிவிட்டது. இன்று இவர்களுக்கு பழங்களும் பாலும் உணவாக கொடுங்கள். இந்த மருந்தையும் பாலில் கலந்து கொடுங்கள் மூன்று வேளைக்கு”.என்ற குரல் கேட்டு மெதுவாக, பாரமாக இருந்த கண் விழிகளை பிரயத்தனப்பட்டு திறந்தாள் வதனச்சந்திரிகா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings