2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சிவபெருமான் ஒரு முறை புதிதாக ஏதோ ஒரு பொருளை தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த பொருள் மிகவும் பளபளப்பாக இருந்தது.
அந்தப் பொருளின் இந்த பக்கத்தில் இருந்த அந்தப் பக்கம் பார்த்தால் தெரிந்தது. அதற்கு அவர் கண்ணாடி என பெயர் சூட்டினார்.
பார்வதி அங்கே வர சுவாமி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவ சிவபெருமான் கூறுகிறார் இதை பார் பளபளப்பான ஒரு பொருள் இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதை பூலோகத்தில் உள்ள மனிதர்களுக்காக செய்தேன். எனக்கு இதைக் கொடுக்க மனமில்லை இதை தடுக்க என்ன செய்யலாம் சொல் என்றார்.
உடனே பார்வதி நீங்கள் உலகத்திற்காக அன்பு , கருணை , அரவணைப்பு , பாசம், நேசம், இரக்கம் மற்றும் பிறகு உதவுதல் போன்ற நற்பண்புகளை கொடுத்தீர்கள் அவை அனைத்தும் அங்கே உபயோகப்படுத்தப்படுகிறதா ?
இவை அனைத்தும் உங்களிடம் வந்தது போல் இந்த கண்ணாடியும் உங்களிடம் வரவேண்டும் என்றால் இதன் பின்புறம் பாதரசத்தை தடவுங்கள். பின்பு, பூலோகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
அது தானாகவே உங்களை தேடிவரும் என்றார் பார்வதி.
சிவபெருமானுக்கு கோபம் வந்தது பார்வதி மீது, பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு ஏற்ப பொருளின் பின்புறம் பாதரசம் தடவு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாயே…..?என்று கூற.
பார்வதி சிவனை முறைத்தவாறு நான் சொன்னதை தான் செய்து பாருங்களேன் என்கிறார்.
சிவபெருமானும் ஒத்துக்கொண்டு ஒரு புறம் பாதரசம் தடவி பூலோகத்திற்கு கொண்டு செல்கிறார்.
அங்கே மாடசாமி என்ற விறகுவெட்டி மரம் வெட்டி கொண்டிருக்க அவன் கண்ணில் படுமாறு கண்ணாடியை வைத்துவிட்டு சிவபெருமான் வந்துவிடுகிறார்.
மாடசாமி ஏதோ ஒரு பொருள் தெரிகிறதே என்று அருகில் சென்று பார்த்து வியப்படைகிறான்.ஏனெனில் , பூலோகத்தில் உள்ள மனிதர்கள் அதுவரை கண்ணாடியை பார்த்ததில்லை.
கண்ணாடியில் மாடசாமி தன் முகத்தை பார்த்து என்ன? நம் தந்தையின் முகம் போல் தோற்றமளிக்கின்றதே என்ற வியப்படைகிறான்.தன் தந்தையை இழந்தவனுக்கு தன் தந்தையின் முகமே தெரிய ஒன்றும் புரியாமல் பார்த்த வண்ணம் சிறிது நேரம் இருக்கிறான்.
திரும்ப அந்த கண்ணாடியை வீட்டிற்கு எடுத்து சென்று தனது இரும்பு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி வைத்து கொள்கின்றான். தினமும் காலை வேலைக்கு கிளம்பும் போது தன் தந்தையின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து பின் பெட்டியை மூடி விட்டு சென்று விடுவான்
இதைப்பார்த்த மாடசாமியின் மனைவி லட்சுமிக்கு ஏதோ ஒரு சந்தேகம் எழுகிறது.
என்ன? இவர் தினமும் அந்த பெட்டியை திறந்து எதையோ உற்று நோக்கி தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறாரே அப்படி என்னவாக இருக்கும் என்று மாடசாமி வேலைக்கு சென்றவுடன் அந்த பெட்டியை திறந்து பார்க்கிறாள் மாடசாமியின் மனைவி.
அவளுடைய முகம் கண்ணாடியில் தெரிய. ஆனால் இவள் முகம் தான் என்று லட்சுமிக்கு தெரியாது யாரோ ஒரு பெண்ணை தினமும் முத்தமிட்டு விட்டு செல்கிறார் என்று நினைக்கிறாள்.
ஒரே அடியாக தன்னுடைய வயிற்றிலே அடித்துக் கொண்டு அழுகிறாள் நான் இந்த மனிதனுக்காக மாடாய் உழைக்கின்றேன் இவர் யாரோ ஒரு பெண்ணை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார். என்று அந்த கண்ணாடியை எடுத்துக்கொண்டு நாட்டாமை பெரிய சாமியிடம் ஓடுகிறாள் .
நாட்டாமையும் அதை பார்த்துவிட்டு என்னமா இது முரட்டுத்தனமான ஒருவன் பெரிய மீசையும் தாடியும் ஆக இருக்கிறான் இவனை ஒரு பெண் என்கிறாயே ? என்கிறார்.
ஏதோ இந்த பெண்ணிற்கு ஆகிவிட்டது என்று விடுவிடுவென்று அவளை சிவனடியார் இடம் அழைத்துச் செல்கிறார்
சிவனடியார் அந்த கண்ணாடியை வாங்கிப் பார்த்துவிட்டு ஏதோ ஒரு சிவனடியாரின் உருவம் அல்லவா தெரிகிறது.
இருவரும் இப்படி பைத்தியம் போல் உளறுகிறார்கள்.சரி இதற்கு ஒரு தீர்வு காண்போம் என்று கூறி இது சிவனடியாரின் உருவம் தெரிகிறது எனவே இது எப்பொழுதும் சிவனை நோக்கியே பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் எனவே இதை நான் கோவிலில் கொண்டு சிவனின் முன்பே மாட்டி வைக்கிறேன் என்று கூறுகிறார்.
சிவனின் முன்பு அந்த கண்ணாடியை மாட்டி வைக்கிறார். சிவபெருமான் திருவிளையாடல்கள் அனைத்தையும் தன் மனதிற்குள் ரசித்தவாறு மெதுவாக ஒற்றைக் கண்ணை திறந்து பார்க்கிறார்.
தன் முன்னே அதே கண்ணாடி இப்பொழுது வந்துவிட்டது நாம் பார்வதியிடம் மாட்டிக்கொண்டோமே,பெண் புத்தி பின் புத்தி என்று வாய் பிதற்றல் செய்தோமே இப்பொழுது பார்வதி என்ன சொல்லப் போகிறாரோ? என்று மனதிற்குள் சிறு கவலையுடன் அமர்ந்திருந்தார்.
அங்கே வந்த பார்வதியும் பார்த்தீர்களா நான் சொன்னதுபோல் செய்ததும் அந்த கண்ணாடி உங்கள் முன்னே வந்து விட்டது ஏதோ சொன்னீர்களே பெண் புத்தி பின் புத்தி என்று? செல்லமாக தன் கைகளால் சிவபெருமானின் தலையில் கொட்டினார்.
அதிலிருந்து ஆண் என்ற ஆதிக்கம் நீராக பெருக்கெடுத்து வெளியேறியது அதுவே கங்கை நதியாகும் அதனால்தான் அதில் நாம் தலை முழுகினால் பொறாமை , கர்வம் , ஆணவம் , பாவம் , பீடை அனைத்தும் தொலையும் என்கிறார்கள்.
கண்ணாடியில் நம் உருவத்தை பார்க்கும் பொழுது நம்முள் தெய்வம் இருப்பது விளங்கிக் கொள்ளவே கோவிலில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
எனவே நம்முள் இருக்கும் தெய்வத்தை யாருக்கும் தீங்கிழைக்கவோ, தீய செயல்களில் ஈடுபடுத்தவோ கூடாது
நம்முள் இருக்கும் கடவுள் மூலம் பிறருக்கு என்றும் நன்மையே செய்ய வேண்டும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings