in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 16) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10  பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15

“நீ நல்ல காரியம்தான் பண்ற. ஆனா உன்னோட ஸேஃப்டியும் முக்கியம். கொஞ்சம் கேர்ஃபுல்லா இரும்மா” என்றார் நித்யாவின் மீது அக்கறை கொண்ட அவளது பள்ளி ஆசிரியை.

“உனக்கு ஏன் இந்த வேலை? அமைதியா இரு“ என்று நித்யாவின் நலம் விரும்பிகளிடமிருந்தும் அறிவுரை வந்தது.

“சே! இப்படி ஒவ்வொருத்தரும் பயந்தா எப்படி வேல செய்றது? பூனைக்கு மணிய யார் கட்றது? எத்தன குழந்தைகளோட லைஃப் ரிஸ்க்ல இருக்கோ! இந்த ஆர்.டி.ஓ. எவ்ளோ இண்ட்ரஸ்டா இருந்தாங்க, தாசில்தார் அவங்களையும் பயமுறுத்திட்டாரே!” என்று புலம்பினாள் நித்யா.

மீட்புக்குழுவில் உடன் வந்த சமூக சேவகராலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

“மனிதக் கடத்தலாக இருக்கலாம்“  என்று குறிப்பிட்டு கோட்டாட்சியர்  அறிக்கை அனுப்பியிருந்தார். 

காவல் ஆய்வரைக் கேட்டதற்கு, “நீங்க பாண்டட் லேபர்ங்கறீங்க, ஆர்.டி.ஒ. ஹியூமன் டிராஃபிக்கிங்கா இருக்கலாம்னு தான் சொல்லிருக்காங்க. உங்க ரெண்டுபேர் ரிப்போர்ட்டும் முன்னுக்குப் பின் முரணா இருக்கு. நான் ஒண்ணும் செய்ய முடியாது“ என்றார் ஆய்வாளர்.

“ஏங்க நான் பாண்டட் லேபர்னு ரிப்போர்ட் கொடுத்திருக்கேன். ஆர்.டி.ஓ. ஹியூமன் டிராஃபிக்கிங்னு கொடுத்திருக்காங்கன்னா, ரெண்டுக்கும் சேர்த்து தானே ஆக்‌ஷன் எடுக்கனும்?” என்று கேட்டாள் நித்யா.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது மேடம். என்கிட்ட பேசிப் ப்ரயோஜனமில்ல மேடம். வேணும்னா கம்ப்ளெயிண்ட் கொடுங்க.  இல்லண்ணா பதினெட்டு வயசு கம்ப்ளீட் ஆன பொண்ண ரொம்ப நாள் ஹோம்ல வைக்க முடியாது.  அவங்க பேரண்ட்ஸ்ட்ட ஹேண்ட் ஓவர் பண்ணனும். இல்லண்ணா எனக்கு தேவையில்லாத பிரச்சன வரும்“ என்றார் ஆய்வாளர்.

‘இப்போ பத்தொன்பது வயசானா என்ன? பதிமூணு வயசிலருந்து வேலைக்கு வச்சிருக்காங்கல்ல? சும்மா விடக்கூடாது’ன்னு சொன்ன வாயா இது’ என்று ஆச்சரியப்பட்டாள் நித்யா.

“விக்டிமோட ஓரல் கம்ப்ளயிண்டயே நீங்க பதிவு செஞ்சிருக்கணும். நானும் கலெக்டர், கமிஷனர், ஆர்.டி.ஓ.ன்னு மட்டுமில்ல உங்களுக்கும் ரிப்போர்ட் அனுப்பியிருக்கேன். என்.ஜி.ஓ. கூட கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்கார். அப்பக் கூட எப்.ஐ.ஆர் போட மாட்டீங்களா?” என்று கேட்டாள் நித்யா.

“அந்த சின்ன பொண்ண அவங்க அம்மாட்ட ஹேண்ட் ஓவரே பண்ணிட்டாங்க.  நான் மட்டும் என்ன பண்ண முடியும்? என்றார் ஆய்வாளர்.

”அவங்கதான் அம்மாங்றதுக்கே ப்ரூஃப் இல்லையே. அஃபென்டர் அரேஞ்ச் பண்ணினவங்ககிட்டயே விக்டிம எப்படி ஹேண்ட் ஓவர் பண்ண முடியும்?” என்றபடி கோபமாக தொடர்பை துண்டித்தாள் நித்யா.

போராளியென  அறியப்பட்ட ஒரு பெண் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  இந்த வழக்கு குறித்து விவாதித்தாள்.

“நானும் ஹோம்ல அந்த பொண்ண சந்திச்சு பேசினேன். அடிச்சிருக்காங்க, முடியக் கொதறி எடுத்திருக்காங்க. பதிமூணு வயசுப் பொண்ணுங்களையா பாத்துப் பாத்து கூட்டிட்டு வராங்கன்னா, வேற எப்டி யூஸ் பண்றாங்கன்னு யாருக்குத் தெரியும். ஏ.சி.கிட்ட கம்ப்ளயிண்டும் கொடுத்தேன். இன்னும் எப்.ஐ.ஆர் போடல. ஆனா, இத நான் சும்மா விடமாட்டேன்“ என்றார்.

ரு நாள் நித்யா அலுவலகப் பணியிலிருந்த போது அலைபேசி ஒலித்தது. 

“ஹலோ“ என்றாள் நித்யா.

“நீங்க நித்யா, ஏ.சி.எல்.தானா? என்றது குரல்.

“ஆமா, நீங்க? “

“நான் ஸ்டேட் சைல்ட் ரைட்ஸ் ப்ரடக்‌ஷன் கமிஷன்லருந்து பேசறேன்“

“சொல்லுங்க மேடம்“

“…. வீட்ல ரெண்டு குழந்தைகள ரெஸ்க்யூ பண்ணினீங்கல்ல! என்ன ஆக்ஷன் எடுத்தீங்க? எப்.ஐ.ஆர் போட்டாச்சா? இல்லன்னா நேஷனல் கமிஷன்ல ரிப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்” என்றது குரல்.

“மேடம், பாண்டட் லேபர்தான்னு நான் ரிப்போர்ட் கொடுத்தாச்சு.  விக்டிம் ஸ்டேட்மெண்ட், என்.ஜி.ஓ. கம்ப்ளயிண்ட், இன்னொரு சி.டபிள்யூ.சி. மெம்பர் கம்ப்ளயிண்ட் இப்படி எதையுமே கன்சிடர் பண்ணாம… போலீஸ் எப்.ஐ.ஆர். போடல.  பாண்டட் லேபர்ல டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட், கலெக்டர். அவங்க சார்பில ஆர்.டி.ஓ.தான் டெசிஷன் எடுக்கனும்.  நான் என்ன பண்ண முடியும்?” என்றாள்.    

இது குறித்து தன் உயர்அதிகாரிக்கும் தெரிவித்தாள்.  

“நீங்க சொன்னது கரெக்ட்தாம்மா. ஆர்.டீ.ஓ.’ட்ட பேசச் சொல்லிட்டு நீங்க அமைதியா இருங்க“ என்று கூறிவிட்டார் அவர். 

இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், விசாரணைக்கு ஆஜராக கோரி, ஆணையத்திடமிருந்து அறிவிப்பு வந்தது. அரசு தரப்பில் உள்ள அனைவரும் ஆஜராகினர். ஆனால் பிரபலம் ‘உடல்நிலை சரியில்லை’ எனத் தெரிவித்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராவதாகத் தெரிவித்தனர். 

ஆணையத்தின் முன்பாக நடந்த அனைத்தையும் ஆவேசத்துடன் விளக்கினாள்  நித்யா.

“நடந்தது என்னன்னு இப்பத்தான் புரியுது“ என்றார் ஆணையத் தலைவர்.

புகாரைப் பதியாததற்காக காவல் ஆய்வாளர் கடிந்து கொள்ளப்பட்டார்.

தகுந்த ஆதாரங்களின்றி சிறுமிகளை ஒப்படைத்தற்காக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும் கடிந்து கொள்ளப்பட்டார். ஆதாரமென அவர் காட்டிய ஹிந்தியில எழுதப்பட்டிருந்த ஏதோ ஊர்த்தலைவர் கடிதம் நகைப்புக்குள்ளானது.

பிரபலம் வீடியோ அழைப்பில் ஆஜரானார்.  கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எதிரில் உட்கார்ந்திருந்த யாரையோ பார்த்துப் பார்த்து அவர்கள் சொல்லித் தந்ததை அப்படியே திருப்பி சொன்னார்.

”அவங்கள வேலைக்கு வைக்கல, பாதுகாப்பு கொடுத்து வளர்த்தேன்” என்றார்.

”ஏன் ஸ்கூலுக்கு அனுப்பல? ” எனக் கேட்டார் ஆணைய உறுப்பினர் ஜெயஶ்ரீ.

”அவங்களுக்கு எந்த ப்ரூஃபும் இல்லாததால அனுப்ப முடியல.  ஆனா ஸ்பெஷலா டியூசன் வச்சி படிக்க வச்சேன்” என்றார் பிரபலம். 

”அடிப்பாவி நாங்க என்கொயர் பண்ணும்போது தானே சொல்லிக் கொடுத்ததால சொன்னாங்க, இப்ப ஸ்பெஷல் டியூசன்ங்கறாங்களே” என்றாள் நித்யா.

”டியுஷன் எங்க போனாங்க? ”

”வீட்டுக்கு டீச்சர் வந்து சொல்லிக் கொடுத்தாங்க”

”டீச்சர் பேரு என்ன? ”

இப்போது எதிரில் பார்த்தார் பிரபலம்.  பின்னர் ”நூர்” என்றார்.

”அவங்க மொபைல் நம்பர் கொடுங்க”

”மீண்டும் எதிரில் பார்த்தார்.  மொபைல்ல சார்ஜ் இல்ல.  அப்புறம் தர்றேன்” என்றார். 

”எல்லாம் பொய், மேடம்.  எதிர்ல அட்வகேட்ட உட்கார வச்சி சொல்லிக் கொடுக்கறத அப்புடியே சொல்றாங்க.  டீச்சர் இருந்தாதான உடனே தருவாங்க.  அப்புறமா யாரையாவது ரெடி பண்ணுவாங்க”  என்றாள் நித்யா.

சிரித்துக் கொண்டே ஆமோதித்து தலையசைத்தார் ஜெயஶ்ரீ.

”சரி, ஏன் முடி வெட்டி விட்டீங்க?” என்று பிரபலத்திடம் கேட்டார் ஜெயஶ்ரீ

”அவ டீ கடை பையன விசில் அடிச்சி கூப்பிட்டா, லவ் லட்டர் கூட எழுதிருக்கா. நாங்க ஆர்த்தோடக்ஸ் ஃபேமிலி. கண்டிக்றதுக்காகதான் அப்படி பண்ணேன்”  என்றார் பிரபலம்.

ஏதோ எழுதப்பட்ட புதிய ஏ4 தாளை திரையில் காட்டினார். 

”நாங்க விசாரிக்றப்ப லவ் லட்டர் பத்திலாம் சொல்லலையே! 3 மாசம் கழிச்சி இப்படி புத்தம் புது பேப்பர்ல! அதுவும் இவங்க கைல!  திடீர்னு எப்படி வந்தது, மேடம்?” என்று கேட்டாள், நித்யா.

”அந்த லட்டர இங்க அனுப்புங்க” என்றார் ஜெயஶ்ரீ.

”ஃபேக்ஸ் நம்பர் கொடுங்க அனுப்பறேன்” என்றார்.

சொன்னதும் உடனே அனுப்பினார்.  ஏ4 தாளில் ஆங்கிலத்தில் ”ஐ லவ் யூ” என எழுதப்பட்டு ‘சுஷ்மா’ என கையெழுத்திடப்பட்டிருந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 3) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

    விடியல் தேடும் கண்ணம்மாக்கள் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி