in ,

கல்லு மனசு (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மாதவன் அறையில் அமர்ந்தவாறு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் அவனது அண்ணன் முருகன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அதைப் பார்த்தவுடன் அய்யய்யோ, இவன் வேறு எதற்கு இப்போது இங்கு வருகிறானென்று தெரியலையே,? காலையிலேயே மஞ்சுளா வேறு சீட்டுப்பணம் கட்ட பணம் தரவில்லையே என சண்டை போட்டுக்கொண்டிருந்தாள், அவளிடம் இருந்து தப்பிப்பதற்காகதான் தனது அறையில் வந்து கம்ப்யூட்டரை நோண்ட ஆரம்பித்தான்., இப்போது இவன் வேறு வருகிறானே, என்ன சொல்லப்போராளோ தெரியலையே,என அண்ணன் வருவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

மஞ்சுவுக்கு தனது கணவரின் அண்ணன் முருகனை கண்டால் பிடிக்காது, ஏனென்றால் அவர் பொறுப்பாக எந்த வேலைக்கும் செல்வதில்லை, “காடாறு மாதம் நாடாறு மாதம்” என்பது போல சில மாதங்கள் வேலைக்கு செல்வதும், பல மாதங்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதுமாக இருந்து வருவார், காரணம் அவரது குடிப்பழக்கம் வேலைக்கு செல்லும்பொழுதும் குடித்துவிட்டு சென்றதால் பல நல்ல வேலைகளை இழந்து விட்டார்.

மீண்டும் அடுத்த வேலை கிடைக்கும் வரை அடிக்கடி தம்பியிடம் வந்து பணம் உதவி கேட்டு தொந்தரவு செய்வார். இது மஞ்சுளாவிற்கு சுத்தமாக பிடிக்காது. நாமே இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்து நம்மிடம் வந்து உதவி கேட்டால் என்ன செய்வது, அவர் வந்தால் பணம் இல்லை என்று சொல்லி அனுப்புங்கள் என்பாள்.

மாதவனுக்கு தர்ம சங்கடமாக போய்விடும், மனைவி சொல்வதும் ஓரளவு சரிதான், அவனும் தனியார் கம்பெனியில் தான் வேலை பார்க்கிறான். சொற்ப சம்பளத்தில் கஷ்ட ஜீவனம்தான் நடத்துகிறான்.

 வீட்டிற்கு வந்தால் மஞ்சுளா சத்தம் போடுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட மாதவனின் அண்ணன் முருகன், சில முறை நேரடியாக மாதவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்து விடுவான் .அதுபோன்ற நேரங்களில் மாதவன், அண்ணனை “ஆபீசுக்கெல்லாம் வராதே “ என சொல்லியபடியே தன்னால் ஆன தொகையை கொடுத்து அனுப்புவான்.

 தற்போது வாசலுக்கு வந்து அண்ணனை வேண்டா வெறுப்பாக “ வாங்கண்ணே” என்றான்.

 “ஒன்னும் இல்ல தம்பி பையனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல, டாக்டர்கிட்ட கூட்டி போகணும், மருந்து மாத்திரை வாங்கணும் ஒரு 500 ரூபாய் இருந்தா குடு என கேட்டார்

 அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த மஞ்சுளா, “ இங்கே என்ன காசு கொட்டியா கிடக்கு, நாங்களே வாய்க்கும் பத்தாம,வயித்துக்கும் பத்தாம சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம், எப்ப பாரு ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக்கிட்டு வந்து நிக்க வேண்டியது, தம்பி கிட்ட இருந்து காசு புடுங்கிட்டு போயி சாராய கடையில கொண்டு கொடுக்க வேண்டியது, எங்க கிட்ட கொடுக்க இப்போ காசு இல்லை, போய்ட்டு வாங்க” என்றாள் கோபத்துடன்,

அதற்குள் மாதவன் குறுக்கிட்டு மனைவியிடம் “வீடு தேடி வந்தவரை அவமானப்படுத்தாத, நீ உள்ள போ” மஞ்சு என்றான்.

“அண்ணனை சொன்னவுடன் தம்பிக்கு கோபம் பொத்துக்கிட்டு வருதோ, எக்கேடும் கெட்டுப் போங்க எனக்கென்ன” என்று புலம்பியபடி மஞ்சுளா உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றவுடன் அண்ணனை பார்த்து மாதவன் “அண்ணே உள்ளபடியே என்கிட்ட இப்ப காசு இல்லை, மாச கடைசி ஆயிடுச்சு, நானே செலவுக்கு இல்லாம சிரமப்பட்டுகிட்டு இருக்கேன் நீங்க இ ப்போ போயிட்டு வாங்க, அப்புறமா பார்க்கலாம் என்றான்.

தம்பியும் பணம் இல்லை என்று சொன்னவுடன், சரிப்பா நான் வரேன் என்று தலை குனிந்தபடி சென்றார் முருகன்.

இது நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாதவனும், மஞ்சுளாவும் வீட்டின் முகப்பறயில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அண்ணன் முருகனின் மகன் கணேஷ் தயங்கியப்படியே வீட்டிற்குள் வந்தான் .

அவனை பார்த்த மாதவன் “அடடே, கணேஷ் எங்க வந்த, எப்படி இருக்க? என கேட்டான்?

நல்லா இருக்கேன் சித்தப்பா, என்ற அவன் மஞ்சுளாவை பார்த்து சித்தி நீங்க எப்படி இருக்கீங்க, ராஜா எப்படி இருக்கிறான் எனக் கேட்டான், எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம், “நீ இப்ப எதுக்கு இங்க வந்திருக்க அத முதல்ல சொல்லு” என அவனிடம் கடுகடுத்தாள் மஞ்சுளா. அதைப் பார்த்த மாதவன் “ஏன் மஞ்சுளா அவன்கிட்ட போய் கோச்சுக்கிற”? பிறகு கணேஷை பார்த்து என்னடா என்ன விஷயம் சொல்லு என்றான்.

கணேஷ் தயங்கியபடியே சித்தப்பா பள்ளிக்கூடத்துக்கு பணம் கட்டல, due date முடிஞ்சு ஒரு வாரம் ஆனதனால “திங்கட்கிழமை பள்ளிக்கு வரும்போது பணத்தோட வா இல்லைனா வராத” என்று டீச்சர் சொல்லிட்டாங்க. அப்பா கிட்ட சொன்னேன், அப்பாவும் பல பேர் கிட்ட கேட்டு பார்த்தும் பணம் கடன் கிடைக்கலைன்னு சொன்னாரு, பள்ளிக்கூடத்துல இன்னும் ஒரு வாரம் டைம் கேட்டு வாங்குன்னு சொல்றாரு, ஆனா பள்ளிக்கூடத்துல ஒத்துக்க மாட்டாங்க, அதனால நீங்க ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்டுப் போக வந்தேன், என சொல்லி முடித்தான்.

 “ஏண்டா கடைசி நேரம் வந்து கேட்டா நான் எங்கடா போறது காசுக்கு, அப்பா வந்து நேரா கேட்காம ஒன்னு கேட்க சொல்லி அனுப்பி வைத்தாரா, என்கிட்ட மட்டும் என்ன காசு நிறையவா இருக்கு, இந்த முறை எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி கட்டுங்க அடுத்த முறைக்கு பார்க்கலாம்” என்றான்.

 “சரி சித்தப்பா நான் வாரேன்” என்று சொல்லியபடி கணேஷ் கிளம்ப எத்தனிக்கையில்,

“உள்ளே இருந்து வெளியே வந்த மஞ்சளா, “கணேஷ் கொஞ்சம் நில்லு என்றபடி அவன் அருகே வந்து அவன் கையில் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, அவனிடம் இதுல உனக்கு பள்ளிக்கூடத்துக்கு எவ்வளவு கட்டனுமோ அதை செலுத்திவிட்டு, மிச்சப்பணத்த அம்மாவிடம் கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல், எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவிடம் பணத்தை கொடுத்து விடாதே,

என்றாள்.

மகிழ்ச்சியுடன் பணத்தைப் பெற்றுக் கொண்ட கணேஷ் “ரொம்ப தேங்க்ஸ் சித்தி என்றான்..

சரி, உள்ள வந்து சாப்பிட்டு விட்டு போ என்றாள். கணேஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது அவனிடம் உணவு பதார்த்தங்களை கொடுத்து அனுப்பினாள்..

அவன் செல்லும் வரை காத்திருந்த மாதவன், பிறகு மனைவியிடம் ஆச்சரியத்துடன், “என்ன மஞ்சு ஆச்சரியமா இருக்கு! நான் ஏதாவது பணம் கொடுத்தாலே என்கிட்ட சண்டைக்கு வருவ, இப்ப நீ மொத்தமா 5000 ரூபாய் எடுத்துக் கொடுத்துட்டியே “?

எனக்கு உங்க அண்ணன் பேர்ல தான் கோபம், அவரு ஒழுங்கா சம்பாதிக்காம சம்பாதிக்கிற காசையும் ஒழுங்கா வீட்டுல கொடுக்காம காசை குடிச்சே அழிக்கிறார், அதுக்கு அவர் மனைவியோ, இல்லை குழந்தைங்களோ என்ன செய்யும், பணம் இல்லை என்பதனால் பையனோட படிப்பு கெட்டுப் போககூடாது, அதனாலதான் “நமக்கு திடீர்னு ஏற்படக்கூடிய மருத்துவ செலவுக்காக நான் சேமித்து வைத்திருந்த ஐந்து ஆயிரத்தை எடுத்து கொடுத்து விட்டேன் என்றாள்.

ரொம்ப நன்றி மஞ்சு, நான் கூட சில சமயம் நீ பண உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றப்ப உனக்கு கல் மனசு என நினைத்து உள்ளேன், ஆனால் அந்தக் கல்லுக்குள்ளேயும் ஈரம் இருக்குங்குறத இப்ப தெரிஞ்சுகிட்டேன் என்றான், மனைவியை பெருமையாக பார்த்தபடி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மத்யமாவதி (பகுதி 5-அடாணா) – சாய்ரேணு சங்கர்

    பந்திக்கு முந்து (சிறுகதை) – ரேவதி பாலாஜி