in ,

கலைந்த மேகம் (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

மொபைலில் பிரண்ட்ஸோட சாட் செய்து கொண்டு இருந்த ‘கேஷவ்’, காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்தான் .

பக்கத்து பிளாட்டில் வசிக்கும் லட்சுமி பாட்டி நின்று கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க பாட்டி…….என்ன வேணும்?”

“எலக்ட்ரீசியன வர சொன்னேன், ஒரு பெரிய ஸ்டூல் கேக்குறாங்க உங்க வீட்ல இருக்குமா?….. அம்மா இருக்காங்களா?”

 “ஒரு நிமிஷம் பாட்டி……. நானே எடுத்துட்டு வரேன்”.

சத்தம் கேட்டு கேஷவ்வின் அம்மா கௌரி வெளியே வந்தாள். “வாங்க மா….. உள்ள வாங்க. என்ன,?…… பேத்தி வரான்னு புது ஏசி வாங்கியிருக்கீங்க போல?”

“ஆமா…… பழசு கொஞ்சம் ரிப்பேரா இருந்தது,…… நாங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்……இப்ப அவ… வரா……. 20 நாள் இங்க தான் இருக்க போறா….. அதான் அவளுக்கு ரூம் ரெடி பண்ணிட்டு இருக்கேன்”.

“யாரு பாட்டி, லண்டன்ல இருக்காங்களே , மிருதுளா அக்கா அவங்களா வராங்க?” என்று ஆறாவது படிக்கும், கேஷவ்வின் தங்கை தான்யா கேட்டாள்.

“ஆமாண்டா குட்டி, உனக்கு ஞாபகம் இருக்கா?”

“அவ…. இங்க வந்து…… ஒரு அஞ்சாறு வருஷம் இருக்குமா..?” என்றாள் கௌரி.

“ஆமா ஆறு வருஷமாச்சு. இப்போ அவ ‘ஆக்ஸ்போர்டு’ யுனிவர்சிட்டி..ல பி.ஏ. சைக்காலஜி ஸெகன்ட் இயர் படிக்கறா…… ஏதோ ப்ராஜக்ட் பண்றதுக்கு வரப்போறேன்…….அப்படியே இந்த வருஷ பர்த்டே …யை எங்க கூட ‘செலிபரேட் ‘ பண்றேன்னு போன சன்டே ஸ்கைப்- ல பேசும்போது சொன்னா.. சரி……. அப்புறமா வரேன்….. வேலை இருக்கு…..தாங்க்ஸ்…”. என்று லக்ஷ்மி பாட்டி கிளம்பிய பின் கதவை சாத்தி விட்டு

“யாரும்மா?…. அது லண்டன் பொண்ணு”…. என ஆர்வமாய் கேட்டான் கேஷவ்.

‘டேய், உனக்கு ஞாபகமில்லயா? நீயும் அவளும் ஒரே செட் -டு டா. இங்க நம்ம வீட்டுக்கு வந்து  உங்க கூட…..கேரம்,…… பல்லாங்குழி எல்லாம் விளையாடினாளே. அவ ஊருக்கு கிளம்புறப்ப தான்யா பாப்பா அவள விடமாட்டேன்னு அடம்பிடிச்சு  ஒரே அழுகை. நீ கூட அவளுக்கு பர்த்டேக்கு கிப்ட் அனுப்ப அப்பாகிட்ட அடம்புடிச்சியே”

 “அட அவளா, இப்ப ஞாபகம் வந்துருச்சு. ‘பாப்’……ஹேர் கட்….. ‘மினி ஸ்கர்ட்’…….அப்புறம் தான்யாவ…..டான்யா….னு கூப்பிடுவாளே.”

“ஆமா.. …..மா….நல்ல ஞாபகம்” என்று நமுட்டுச் சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

தன் ரூமிற்கு சென்ற கேஷவ் தன் நண்பர்களுக்கு மிருதுளாவை பற்றி சேட் செய்ய ஆரம்பித்தான். லண்டனில் இருந்து தன் ஃபிரண்டு வருகிறாள்.., என்றும் அவள் அழகை வர்ணித்தும்……. அவர்களை கனவு காண வைத்தான்.

இரண்டு நாள் கழித்து, சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்-க்கு மாலை 6 .02க்கு வந்து சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவளான மிருதுளா ஃபோனில் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஆமாமா, சேஃப் லேண்டேட். எஸ், ஐ அம் என்ஜாயிங் திஸ் ஜர்னி….. இத வச்சு ஒரு ஆர்டிக்கல் எழுதிருவேன். செக்கிங் எல்லாம் முடிஞ்சு லக்கேஜ் வந்துருச்சுமா ………போயிட்டு இருக்கேன்…….. ஆமா……. தாத்தா……. வந்துட்டேன்னு எனக்கு மெசேஜ் போட்டு…….. இருந்தார்”

ரோலிங் டிராவலிங் பேக் ஐ ஒரு கையால் இழுத்து நடந்தபடியே அலைபாயும் கண்களால் தன் தாத்தாவை தேடினாள்..

“தாத்தாவை பார்த்துட்டேன் ம்மா…… ஓகே…… பை மா…….. அப்புறமா பேசறேன்……. வீட்டுக்கு போயிட்டு……. பாட்டியோட வீடியோ கால் போடுறேன். தாங்க்யூ…… மா…….லவ்…யூ…மா.. ஓ.கே….பை”

ஃபோனை சைலன்ஸ் மோடில் போட்டுவிட்டு தன் தாத்தாவை நோக்கி போனாள்…..

“‘ஹாய்’…..ம்ருதுகுட்டி….வெல்கம்”

“ஹா……ய்…….. தாத்தா” தாத்தாவின் கையை பிடித்துக் குலுக்கினாள்.

***********

ஜன்னலின் திரையில் தன்னை மறைத்துக் கொண்டு மெயின்கேட்டை பார்த்தபடி நின்றிருந்தான் கேஷவ், மிருதுளாவை எதிர்பார்த்து. கார் வந்து நின்றதும்,….நெஞ்சம் லேசாக படபடவென அடித்துக் கொண்டது.

இடுப்புவரை சரிந்த கரிய நீண்ட கூந்தலும், உடல் முழுவதும் மறைத்த லூஸ் பிட்டிங் ஆடையும் கண்களுக்கு அவள் அணிந்திருந்த கண்ணாடியும்…..அவளைப் பற்றி அவன் கற்பனை செய்து இருந்த எதிர்பார்ப்பு சற்று ஏமாற்றமடைந்தது

நாளை அவளை அருகில் பார்த்து விடலாம் என்று தன் மனதை தேற்றினான் தன் பிரெண்ட்ஸிடம் அவள் வரவை சாட் செய்தான்.

மறுநாள் காலை அவனும் தான்யாவும் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது மிருதுளாவிடமிருந்து கால் வந்தது

தான்யா தான் எடுத்துப் பேசினாள்…..”ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க?’….. நான் நல்லா இருக்கேன்’…… எல்லாரும்……. சாப்பிட்டுட்டு……. இருக்கோம் ……. ஒன் ஸெகன்ட் அக்கா………ஃபோனை ஹோல்டில் போட்டுவிட்டு தன் அம்மாவிடம் கேட்டாள்……. அம்மா….. மிருதுளா அக்கா நீங்க எப்ப ஃப்ரீயா இருப்பீங்க இங்க வரலாம்னு கேக்குறாங்க”

“எப்ப வேணா வரலாம்னு சொல்லு”……

“ஓகே….. பை….. அக்கா……

 “ஒரு ஹாஃப் அன் ஹவர் கழிச்சு வரேன்னு சொன்னாங்கமா”

கேஷவ் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு தன்னைறக்குச் சென்று கதவையும் சாத்திக் கொண்டான். தலைமுடியை ஸ்டைலாக சீவி….., டி ஷர்ட் போட்டுக்கொண்டு சென்ட் அடித்துக் கொண்டான்.

அவளின் குரலுக்காக காத்திருந்தான்.

“அடேய் கேசவா, மேல இருக்கற டப்பாவ கொஞ்சம் இறக்கி குடேன்” அம்மாவின் குரல் கேட்டு கொஞ்சம் கோபமானான்.

“அவளுக்கு நேர கொஞ்சம் சீனப் போடலாம்னு பார்த்தா இந்த அம்மா வேற…” முனுமுனுத்தபடியே ரூம் கதவை திறக்கவும் காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

தான்யா கதவை திறக்க கையில் கிஃப்ட் பேக் குடன் நின்றிருந்தாள் மிருதுளா.

‘ஹாய்…. தான்யா குட்டி” இரண்டு கைகளை நீட்டி அவளை கட்டிக்கொண்டாள்.

“வா மிருதுளா” என்ற கௌரியை,

“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?” கேட்டுக் கொண்டே சிரித்தடி கட்டிக் கொண்டாள்.

தலை முதல் கால் வரை அவளை பார்த்தான் கேசவன் முழங்கால் வரை நீண்ட வெளிர் பச்சை நிற டாப்பும் கருப்பு நிற பலாசாவும் அணிந்திருந்தாள். முடியை டைட்டாகப் பின்னலிட்டிருந்தாள்.

‘ஹாய் கேஷவ்”

“ஹாய்” அவன் நீட்டிய கையை பார்க்காமல் முகத்தை திருப்பி கௌரியிடம் பேச ஆரம்பித்தாள்.

பின்பு அவன் படிப்பைப் பற்றியும், காலேஜை ப்பற்றியும் அவனிடம் விசாரித்தாள்.  அவளின் வார்த்தை உச்சரிப்பும்,அவள் தோளை குலுக்கும் உடல் மொழியும் தான் அவளை வெளிநாட்டில் வளர்ந்தவள் என உணர்த்தியது.

“தமிழ் இவ்வளவு அழகா நல்லா பேசுறியே?” என்று கேட்டாள்.கௌரி .

“ஆமா ஆன்ட்டி ….அங்க நானு ஸ்போக்கன் தமிழ் கோச்சிங் கிளாஸ் போறேன்”

சிறிது நேரம் பேசிவிட்டு சென்றதும் , கீச்சு கீச்சு என்ற மெல்லிய குரலும்’ கிளிங் கிளிங் என்ற மணி போன்ற அவள் சிரிப்பும், சாக்லேட் வாசனையும், மயக்கும்சென்ட் மணமும் அவனையே சுற்றி சுற்றி வந்தன.

அந்த கேட்டட் கம்யூனிட்டியில் வேறு வேறுஅப்பார்ட்மெண்டில் இருக்கும் தன் நண்பர்களுக்கு போன் செய்து “டேய், நம்ம மீட்டிங் பாயிண்ட்க்கு வாங்கடா” என்று கூறி போனை கட் செய்தான்.

அன்று மதியம் தன் பாட்டியுடன் மேல் மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள் மிருதுளா.

“பாட்டி …..அந்த ரோஜா செடி யாரோடது?”…. என்று கை நீட்டி கேட்டாள். தூரத்தில் இருந்ததை பார்த்து. “அது சி ப்ளாக்ல உள்ள வசந்தியோடதுமா”

“போய் பார்க்கலாமா?….”

“சரி…. போய்ட்டு வா….. வரும்போது இந்த பக்கமா நம்ம ‘ஏ’ ..பிளாக் லிப்ட்லயே வா….சரியா?… நான் கீழே வீட்டுக்கு போறேன்…” . ‘ஓகே’… பாட்டி” சொல்லிக்கொண்டே குதித்து ஓடியபடி அந்த ரோஜா செடியை ஆர்வமாக பார்க்க சென்றாள்.

“வ்…வாவ்…. பியூட்டிஃபுல்….” தன் ஃபோனில் பிங்க் நிற ரோஜாமொட்டை ஃபோட்டோ எடுத்தாள்.

தன் பெயரை கிசுகிசுப்பானக் குரலில் யாரோ பேசுவது காதில் விழுந்தது. ரோஜா செடியின் பின்புறமிருந்த மாடிப்படியில் மெதுவாக இறங்கினாள். நான்காவது படியில் இறங்கும்போது கேஷவ்வின்பேச்சு தெளிவாகக் கேட்டது.

“டேய்…. அதுக்கு நம்ம கேர்ள்ஸ் எவ்வளவோ மேல் றா. ஜுன்ஸ், டைட்ஸ், ஷார்ட்ஸ் -ஸ்லீவ்லெஸ் டீ ஷர்ட் ,…..ஃப்ரீ ஹேர்…..னு கலக்குவாங்க. இவ ஃபாரின்-ல வளர்ந்தவ. போட்டுக்கற ட்ரெஸ்ஸும், நீளமான முடி வளர்த்து பின்னிக்கறதை பார்த்தா வில்லேஜ் கேர்ள் மாதிரி இருக்கு” அலுத்துக் கொண்டான்.

“ஒருவேளை இங்க பாட்டி தாத்தாவுக்காக இப்படி இருக்கலாம் அங்க எப்படியோ?” என்றான் சுதிர்.

“டேய்… அவ கிட்ட …என்னை ‘இன்ட்ரட்யூஸ்’ பண்றா….எனக்கு இந்த மாதிரி ஹோம்லி லுக் தான் எனக்குப் பிடிக்கும்” என்றான் ப்ராணேஷ்.

“டேய்…..நானே இன்னும் சரியா பேசலை. அவ இன்னும் பதினஞ்சு நாள் தான் இங்க இருக்கப் போறா. அதுக்குள்ள பேசி,… ஃபிரண்ட் ஆகணும். எனக்கு… ஃபாரின் கல்ச்சர் பிடிக்கும்” என்று சிரித்தான் கேஷவ்.

:டே…..அவளுக்கு ….அங்க….ஜான்…..இல்ல சார்லஸ்…னு எவனாவது லவ்வர் இருக்கப் போறான். நீ பாட்டுக்கு .. .கனவுல ….மிதக்காத…. “

“பாயிண்ட்…….” என்றான் கேஷவ்

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா,  ‘ஏ’-ப்ளாக்கிற்கு விரைந்தாள்.

மறுநாள்,  மாடியில் மேகங்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

“என்ன போட்டோகிராபியா?” என்று கேட்டபடி வந்தான் கேசவன்.

“ஓ ஹாய்….எஸ் போட்டோகிராபி இஸ் மை பேஷன். …யூ நோ…இந்த மேகங்கள் மாதிரி தான் நம்மளுடைய தாட்ஸும்…. மாறிக்கிட்டே இருக்கும்” என்றாள் மிருதுளா

“என்ன தத்துவமா?” என்று கேட்டான் கேசவ்

மணிச்சத்தமாய் சிரித்தாள்.

“ஆமா? தான்யா கிட்ட என்ன கேட்டுருந்தியாமே? நான் கொஞ்சம் வெளியில போயிருந்தேன், என்ன விஷயம்?” என்றான் சந்தோஷமான குரலில்.

“யூ நோ? நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட், ஒரு ப்ராஜெக்ட்டுக்காகத்தான் இங்க வந்தேன்……ம்….ப்ராஜெக்ட் – டாபிக்…..  ஃபிரெண்ட்ஷிப்  ஃபார் டீன் ஏஜஸ்…..நீ எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“உங்க காலேஜ் கோ-எட் தானே…. உங்களுக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் மிருதுளா.

“ஆமா…… நாங்க பாய்ஸ் எல்லாருமே கேள்ர்ஸ்-அ ஈகுவல்லா தான் ட்ரீட் பண்ணுவோம்…… ஹாண்ட் ஷேக் பண்ணிப்போம்…… ஹக் பண்ணிப்போம்….. ஒன்னா சேர்ந்து சாப்பிடுவோம்….. ஒரே தட்டில் சாப்பிடுவோம்…. பைக்-ல ஒண்ணா சேர்ந்து போவோம். இங்கேயும் ஃபாரின் மாதிரி ட்ரெண்ட் எல்லாம் மாறிடுச்சு” என்றான் கேஷவ் உற்சாகக் குரலில்.

“ம்……  பட்……. அது பியூரா 100% ஃபிரண்ட்ஷிப்பா இருக்குமா?” என்றாள் சந்தேகத்துடன் மிருதுளா.

“ஏன் இருக்க முடியாது?” நெற்றியைச் சுருக்கினான் கேஷவ்.

“கேர்ள்ஸ் பத்தி கமெண்ட் பண்றவனால கண்டிப்பா இருக்க முடியாது”…. என்றாள் சிறிது கோபத்துடன் மிருதுளா.

“கமெண்ட் பண்றது…….ஏஜ்….. ஃபாக்ட். …..அதுக்கும், இதுக்கும் கனெக்ட் பண்ணாத” என்றான் சிறிது தடுமாறிய மனதுடன் கேஷவ்.

“ஓ.கே..உனக்கு புரியற மாதிரி சொல்றேன்… கொஞ்சம் திங்க் பண்ணி பதில் சொல்லு. நீ உங்க அம்மாவை என்னைக்காவது…. ஹக் பண்ணி, ஐ லவ் யூ… சொல்லி இருக்கியா? இல்ல… தான்யாவையாவது கட்டிப்பிடிச்சு ஐ லவ் யூ சொல்லி இருக்கியா?” அழுத்தமாக கேட்டாள் மிருதுளா.

“அதெல்லாம் எங்களுக்கு பழக்கம் கிடையாது….. சின்ன வயசுல இருந்து அப்படியெல்லாம் எங்களுக்கு கத்துக் கொடுக்கல” தலையை அசைத்தபடி மறுத்தான் கேஷவ்.

“அப்போ சின்ன வயசுல இருந்து கேர்ள் பிரண்டை மட்டும்  ஹக் பண்ண சொல்லித் தந்திருக்காங்களா” சிறிது கோபமாகக் கேட்டாள் .

“இல்ல….ஆனா….. இது….. இந்த வயசுக்கு இயல்பா…வர்றது” என்றான் வார்த்தைகள் தடுமாறிய கேஷவ்.

“என்னோட சைக்காலஜி புரொஃபஸர் ஒண்ணு சொன்னார். சின்ன வயசுலேர்ந்து வர்ற பழக்கம் எந்த இடத்துல தடுமாற்றமடையுதோ? இல்ல மாறுதோ? அங்க நாம ஜாக்கிரதையாக இருக்கணும். அது கால மாற்றமாகவோ இல்ல, …..ஆபத்தானதாகவோ  இருக்கும்…….இந்த வயசுல குழப்பங்கள் நிறைய இருக்கும். இதுக்கு நீங்க ஒருத்தரையொருத்தர் தொடாமல்  பேசும்  இண்டியன் கல்ச்சரை ஃபாலோ பண்ணுங்கனு சொன்னார். ஆனா, நீ சொல்ற..நாங்க கல்ச்சர் மாறிட்டோம்னு” சீரியஸானாள் மிருதுளா.

:இது …..கால மாற்றமா இருக்கலாமே?” என்றான் கேஷவ்.

“இருக்கலாம்…அதை தெளிவா புரிஞ்சுக்கணும்.”என்றாள்

“நீ இப்போ ஃபைனலா என்ன சொல்ல வர்ற?” என்றான் சிறிது எரிச்சலான குரலில் கேஷவ்.

“நான் வளர்ந்த கலாச்சாரப்படி நீ என்னை எதிர்பார்த்த…. அதே மாதிரி நானும் நீ…இந்திய கலாச்சாரப்படி  நடந்துப்பன்னு எதிர்பார்த்தேன்” என்றாள் மிருதுளா,.. அழுத்தமான குரலில்

“ம்…” தலை குனிந்தான் கேஷவ்..

“கேஷவ்….நான் இதப் பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன் பாரு” என்று சிறிய நோட்பேட் -ஐ நீட்டினாள்….

“கவிதை மாதிரி”  .. …என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“கலாச்சாரத்தை மாற்றுவது

வெய்யிலில் கம்பளி போர்த்திக் கொள்வது போல!!”

படித்து விட்டு தலையை நிமிர்த்தினான்.

மேகம் மெதுவாக கலைந்து  நீலவானம் தெளிவாக தெரிந்தது.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆமென இணங்கி (பாகம் 2) – ராஷி ராய் (தமிழில் பாண்டியன் இராமையா)

    காணாமல் போன கோவில் மணி (சிறுகதை) – மலர் மைந்தன்