in

காணிக்கை (சிறுவர் கதை) – ✍ திரு ராம், அரியலூர்

காணிக்கை (சிறுவர் கதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ஒரு கிராமத்தில், மூர்த்தி என்ற சிறுவன் தாய் தந்தையரோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தான். மூர்த்தி படிப்பில் மந்தமாகவும், விளையாட்டில் சிறந்தும் விளங்கினான்.  

ஆனால் அவனிடம் ஒரு கெட்ட குணமும் இருந்தது. அது அவனுடைய திருடும் பழக்கம் தான். அவ்வப்போது பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவர்களிடம் திருடிய பொருட்களை வீட்டிற்கு எடுத்து வருவதை கவனித்த அவனது பெற்றோர் அவனை கண்டித்தனர். 

இருந்தும் சிறியதாக தொடங்கிய பழக்கம் நாட்கள் செல்லச்செல்ல அதிமாகியது அவனிடத்தில். இவனின் இச்செயலால் பெற்றோரின் மகிழ்ச்சி குறைந்து, அவனது எதிர்காலம் குறித்த கவலை அதிகரித்தது. ஆனால் அவன் இதை பொருட்படுத்தாமல் இருந்தான். 

மூர்த்தியின் தந்தையும் அவனின் தலைமையாசிரியரும் நண்பர்கள் என்பதால், அவரிடம் கூறி வருந்தினார் மூர்த்தியின் தந்தை. 

அவரது வருத்தத்தை புரிந்துக்கொண்ட தலையாசிரியர், “நான் அவனை முறைபடுத்துகிறேன்” என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்து அனுப்பினார். 

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்பதுகேற்ப, வகுப்பில் யாரும் இல்லாத சமயம், சக மாணவனின் விலை உயர்ந்த பேனாவை திருடிய போது ஆசிரியர் பார்த்து விட, அவனை கையும் களவுமாக பிடித்து, தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றார். 

தலைமையாசிரியர் மிகவும் கண்டிப்பானவர் என்பதால், செல்லும் வழியிலே மூர்த்தியின் கால்கள் நடுக்கம் கொண்டதோடு, வியர்வையும் பெருக்கெடுத்துதது. 

வகுப்பாசிரியரிடமிருந்து நடந்தவற்றை கேட்டறிந்த தலைமையாசிரியர்,  சிறுவனை திருத்த இதுவே தக்க சமயம் என நினைத்து, அவனை தனது அறைக்கு வெளியே அன்று முழுவதும் முட்டி போட்டு நிற்கச் செய்தார்.  

நெடுநேரம் முட்டி போட்டு நின்றிருந்த மூர்த்தியை, அவ்வழியாகச் சென்ற மற்ற மாணவர்கள், தலைமையாசிரியரின் அறைக்கு அருகே  இருந்த  தகவல் பலகையில்,  

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 

பழித்தது ஒழித்து விடின்.”   

“உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால், மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா” என்று எழுதப்பட்டிருந்த தீயொழுக்கம் பற்றிய குறளையும் அதன் பொருளையும் படிக்கச் சொல்லி கேலி செய்தனர்.

அதனால் ஏற்பட்ட அவமானத்தை, தனது தவறின் விளைவாக உணர்ந்து அழுதான் மூர்த்தி. 

இவற்றையெல்லாம் கவனித்த தலைமையாசிரியர், அவனை அழைத்து திருடக்கூடாது என்ற அறிவுரையும் கூறியும் அதனால் ஏற்படும் தீமையையும்  எடுத்துரைத்தார், மூர்த்தியும் புரிந்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். 

கால் வலியும் அவமானமும் மூர்த்தியின் மனதை வாட்ட, சோர்ந்த முகத்துடன் வீட்டிற்கு வந்தவன், யாரிடமும் பேசாமலும் சாப்பிடாமலும் தனது அறையில் அழுதுக்கொண்டிருந்தான். 

விவரம் அறிய  தலைமையாசிரியரை தொடர்புக் கொண்டு மூர்த்தியின் தந்தை பேசி, அவர் பள்ளியில் நடந்தவற்றை விரிவாக கூறி, அவன் மனம் தெளிவடைய சமாதனமும் அவகாசமும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதனால் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தனர் அவனது பெற்றோர்.  

இரவு வீட்டில் அனைவரும் உறங்கியபின், சத்தமில்லாமல் சாமியறைக்குச் சென்ற மூர்த்தி, வெகு நேரமாகியும் சாமியறையில் அமர்ந்து மனமுறுகி அழுதபடியே, ” சாமி… என்னோட இந்த திருட்டு பழக்கத்தை மறக்க வச்சிடு, நான் என்ன காணிக்கை வேணாலும் செய்றேன் ” என்று வேண்டினான். 

வேண்டுதலின் ஊடே பள்ளி தகவல் பலகை குறளும் பொருளும் மனதில் வந்துப் போயிற்று. அக்குறள் அவனை மேலும் சிந்திக்க தூண்டியது. நீண்ட யோசனைக்கு பிறகு இது தான் நான் குடுக்க போகின்ற காணிக்கை என அவனே முடிவெடுத்தான்.  

மறுநாள் முகப்பொலிவுடனும் நம்பிக்கையுடனும் தனது முதல் நாள் காணிக்கையை சாமியிடம் செலுத்திவிட்டு பள்ளிக்குச் சென்றான். அன்றுமுதல் தினமும் அந்த காணிக்கையை தவறாது செலுத்தி வந்தான்.  

தான் அவமானப்படுத்தபட்ட இடத்தில் தலைநிமிர்ந்து நடக்க, மனதில் வைராக்கியம் கொண்டான். காணிக்கை செலுத்தவே அதிகாலையில் எழுந்தான்.

படிக்கவும் வீட்டு பாடம் செய்யவும் நேரத்தை கடைப்பிடிக்கவும் பழகிக் கொண்டான். அவன் நடத்தையிலும் படிப்பிலும் நல்ல முன்னேற்றமடைவதை கண்ட அவனது பெற்றோரும் மகிழ்ந்தனர். 

அந்த ஆண்டு இறுதி தேர்வில் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றான்.

மூர்த்தியின் முன்னேற்றத்தை கண்டு, அவனை தண்டித்த தலைமையாசிரியரே பள்ளியின் காலை நேர அணிவகுப்பில் அனைவர் முன்பும் பாராட்டியதோடு, மற்ற மாணவர்களிடம் அவனை முன்னுதாரமாக பின்பற்ற வேண்டும் என  கூறினார். 

பெற்ற பெரும் பாராட்டை தன் பெற்றோரிடம் மகிழ்ச்சியுடன் கூறி, அவர்களையும் மகிழ்வுறச் செய்தான் மூர்த்தி. துள்ளிக்குதித்து சாமியறைக்கு ஓடியவன், சாமியிடம் தன் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றி செலுத்திவிட்டு, மேலும் தன் காணிக்கையை என்றென்னும் செலுத்துவேன் என உறுதியெடுத்துக் கொண்டான். 

என்ன குட்டீஸ்… மூர்த்தி அப்படி என்ன காணிக்கை குடுத்தானு கண்டு புடிச்சிட்டீங்களா? 

ஆமா, அவன் தினமும் ஸ்கூல் போறதுக்கு முன்னாடி சாமிகிட்ட, “இன்னைக்கு நான் திருட மாட்டேன், நல்லா  படிப்பேனு” வேண்டிகிட்டான்

தன்னோட திருடுற கெட்ட பழக்கத்தையே சாமிக்கு காணிக்கையா குடுத்தான். அதனால படிப்புல கவனம் அதிகமாகி, இப்போ நல்ல மாணவனா மாறிட்டான். 

குட்டீஸ்… நீங்களும் உங்க நல்ல பழக்கத்தை அதிகமாக்கி, கெட்ட பழக்கத்தை சாமிக்கு காணிக்கையா கொடுத்துடுங்க சரியா… 

#Ads – Kids Story Books – Deals from Amazon 👇

 

#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 “சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆலிவ் குட்டி(சிறுகதை) – ✍பிரியா, சேலம்

    குளிர் கால உணவுகள் – ✍ ராஜஸ்ரீ முரளி