வணக்கம்,
சிறுகதைப் போட்டி 2021
ஆகஸ்ட் 2ம் நாள், இந்த வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருந்தோம். அறிவித்த அடுத்த நாளில் இருந்தே போட்டிக்கான கதைகள் வந்த வண்ணம் இருந்தன
இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, UK, கனடா, அமெரிக்கா என பல நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் தங்கள் கதையை போட்டிக்கு அனுப்பி இருக்கிறார்கள்
இன்று கதைகள் அனுப்ப கடைசி நாள் என்பதால், பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. வெற்றி பெற, அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்
சிறுகதைப் போட்டி அறிவிப்பு இணைப்பு இதோ 👇
ஆண்டு நிறைவு
இந்த மாதத்தோடு, நம் ‘சஹானா’ இணைய இதழ் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்தது. அதை கொண்டாட இணைய வழி சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தோம், அதில் நம் வாசகர்கள் எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர்களுக்கு, மீண்டும் ஒரு முறை, இந்த தருணத்தில் எங்களது நன்றியை பதிவு செய்கிறோம்
கடந்த ஒரு வருடத்தில் நாம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 100 எழுத்தாளர்கள் 300+ பதிவுகள் என, சிறப்பான ஒரு வருடமாய் அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் ‘சஹானா’ இணைய இதழ் நடத்திய போட்டிகள், அதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அனைத்தும், ஆண்டு விழா கொண்டாட்ட வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காதவர்களுக்கு, வீடியோ இணைப்பு இதோ 👇
ஜூலை 2021 போட்டி முடிவுகள்
ஜூலை 2021 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனி, ஜூலை 2021 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:-
GIPHY App Key not set. Please check settings