ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வள்ளுவன் அலுவலகத்தில் வாடிக்கையாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அந்த இனிப்பான செய்தி வந்தது
“வள்ளுவன் சார், உங்களுக்கு ஃபோன்” மேலாளர் தன் அறையிலிருந்து கத்தினார். அந்த அலுவலகத்தில் ஒரே ஒரு ஃபோன் தான் 1991ல்
“ஹலோ… வள்ளுவன் பேசறேன்”
“மாப்பிள்ளை உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கா” மாமனார் குரலில் காவேரியின் ஆடிப்பெருக்கு உற்சாகம்
வள்ளுவன் ஒரு செகண்ட் ஸ்தம்பித்தான். தகப்பனான உணர்வு உடலின் ஒவ்வோர் செல்லுக்கும் செல்வதை மனப்பூர்வமாக உணர்ந்தான். சுயநினைவு வர நேரமாயிற்று
“நான் ராத்ரி ராக்ஃபோர்ட்ல வர்றேன் மாமா” ஃபோனை வைத்தான் வள்ளுவன். இதுக்கு மேலே பேசினால் காசு அதிகமாகி விடும் மாமனார்க்கு.
மேலாளரிடம் ஒரு நாள் விடுப்பு கேட்டான். இனி திங்களன்று வந்தால் போதும். நடுவில் ஞாயிறு வருகிறது
அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தான். அனைவரும் வாழ்த்து கூறினர். 35 வயசில் முதல் குழந்தை, கல்யாணமும் லேட், அதுக்குப் பிறகு மூன்றாம் வருடம் விடிவு பிறந்தாச்சு
விடியற்காலையில் மாமனார் வீட்டில் குளித்து விட்டு சைக்கிளில் தில்லை நகர் ராணா ஆஸ்பத்திரி விரைந்தான்
குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. சீன தேச மஞ்சள் நிற அழகி போல முறுவலித்தாள் வாசுகி. இருவர் கண்களும் சந்தித்தன இரண்டு வாரங்களுக்குப் பிறகு.
சென்னையில் தான் குடித்தனம். பிரசவத்திற்காக வாசுகி திருச்சியில் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டாள். இருவருக்கும் பெருமை, மூணாவது வருஷமாவது தாங்கள் வெற்றி பெற்றோமேயென்று.
முதல் வருடம் இரண்டாம் மாதமே கரு கலைந்து விட்டது. இருவருக்கும் இந்த ஒரு கவலை மட்டுமிருந்தது, அதுவும் இப்போது தீர்ந்துவிட்டது
இராசேந்திர சோழனாவது உலகின் ஒரு பகுதியை மட்டும் வென்றான். வள்ளுவன் உலகையே வசப்படுத்திய சந்தோஷத்தில் ரஸகுல்லா கடலில் மிதந்தான்
இரண்டு வருடத்தில் முல்லைக்குத் தங்கை ரோஜாவும் பிறந்தாள். இரண்டோடு நிறுத்திக் கொண்டனர். இரு பெண்களையும் இளவரசிகளாக வளர்த்தனர்.
பெண்களும் நன்கு படித்தனர். குடும்ப சூழ்நிலை அறிந்து ஆசைப்பட்டனர். இருவருக்கும் கல்லூரியில் கேம்பஸ் செலக்சன், சென்னையிலேயே வேலை.
வள்ளுவனும் வாசுகியும் முல்லைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அமெரிக்காவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை அமைந்தது. முல்லையும் அங்கேயே வேலை தேடிக் கொண்டாள்
ரோஜாவுக்கு சென்னையிலேயே மாப்பிள்ளை பார்த்தனர். ஒருத்தியாவது பக்கத்தில் இருக்க வேண்டுமே
இருவரும் ஐ.டி துறை தான். ஆஃபிஸ் பக்கத்திலேயே சோழிங்கநல்லூரில் ஃப்ளாட் வங்கிக் கடனில் வாங்கினர். வள்ளுவனும் வாசுகியும் தங்கள் சொந்த வீட்டிலேயே இருந்தனர்.
சனி ஞாயிறுகளில் ரோஜாவும் மாப்பிள்ளையும் சில மணி நேரங்கள் வள்ளுவன் வீட்டிலேயும், சில மணி நேரங்கள் மாப்பிள்ளை பெற்றோர் வீட்டிலேயும் கழி(ளி)த்தனர்
வள்ளுவன் ஓய்வு பெற்று இரண்டு வருடங்களில் வாசுகி அமெரிக்கா போய் முல்லைக்கு பிரசவம் மற்றும் குழந்தை வளர்ப்பிற்கு உதவி பண்ணினார். வள்ளுவன் ரோஜா வீட்டிலேயே தங்கினார்
நல்லாத்தான் வாழ்க்கை போச்சு…. அந்த நாள் வரும்வரை…
“ரோஜா… நம்ம மீடியம் ரேஞ்ச்ல ஒரு கார் வாங்கணும்” என்றான் ரோஜா கணவன்.
“கடனுக்கா?”
“ஆமாம்”
“எதுக்குங்க…. அப்பாட்ட ரிடயரான மொத்த பணமும் இருக்கு. நாங்க ரெண்டு பொண்ணுங்கதானே. எப்படின்னாலும் பாதிப்பணம் எனக்குத்தான் வரும்”
“உன் பாடு உங்கப்பா பாடு…. ஏதோ பண்ணுங்க”
காலை தோசை சட்னி சாம்பார் எல்லாவற்றையும் தட்டிலிருந்து வயிற்றுக்குள் மடை மாற்றம் பண்ணிய பிறகு, பேச்செடுத்தாள் ரோஜா
“அப்பா… நாங்க கார் வாங்கலாம்னு பார்க்கிறோம். கடனுக்கு
வாங்கறதுக்குப் பதிலா கேஷாவே வாங்கிறலாம். என்ன சொல்றீங்க? எப்படின்னாலும் உங்கள் டெபாஸிட் எங்க ரெண்டு பேருக்குந்தான் தரப் போறீங்க… இப்பவே கொடுத்தா கடன் வாங்காமல் தப்பிக்கலாம். நீங்களும் அம்மாவும் எங்க கூடவே இருந்துடுங்க”
இந்த திடீர் விஷயம் வள்ளுவன் எதிர்பார்க்கவில்லை. வாசுகியிடமும் இது வரை பேசினதில்லை. மூன்றில் ஒரு பங்கை ரோஜாவுக்குக் கொடுத்துவிட்டு ஒரு பங்கு அவசரத்துக்கு தன் பெயரில் டெபாஸிட்டாகவே இருக்கட்டும் என விரும்பினார்
“முப்பது லட்சம் இருக்கும்மா… உனக்கும் முல்லைக்கும் பத்து பத்து லட்சம் இன்னிக்கே தந்துடறேன்”
“பதினஞ்சு வேணும்பா…”
“இல்லைம்மா நான் பத்து தர்றேன் மீதிக்குக் கடன் வாங்கிக்க…”
மனித மனம் சில நொடிகளில் உச்சகட்ட சுயநல முடிவுகள் எடுக்கும். நாம் நினைத்துப் பார்க்காத எதிர்விளைவு ஏற்படுத்துவர். அதில் பெற்றோர் பிள்ளைகளும் விதி விலக்கல்ல.
விதி விளையாடியது இங்கே….. திடீரென ரோஜா மனதில் ஒரு வெப்பம் உருவானது. அந்த நிலையில் என்ன செய்றோம்னு விழிப்புணர்வின்றி தன் கையிலுள்ள ஓரளவு கனமான தரை துடைக்கும் மாப்பினால் தந்தை தலையில் ரெண்டு போடு போட்டாள்
வள்ளுவன் தலையைப் பிடித்துக் கொண்டே மயங்கி விழுந்தார். ரோஜா தான் ஆத்திரத்தில் செய்ததை எண்ணி சுய இரக்கத்தில் அழ ஆரம்பித்தாள்.
மாப்பிள்ளை அடுத்த அறையிலிருந்து வந்தவன் ஓலா புக் பண்ணி முதியோர் நல மருத்துவரிடம் கூட்டிப் போனான். மயக்கம் இரண்டு மணி நேரமாக தெளியவேயில்லை.
மருத்துவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு “ஒன்றுமில்லை… இரண்டு நாளில் வலியும் வீக்கமும் குறைந்து விடும்” என மாப்பிள்ளையிடம் சொன்னார்.
வெட்கப்பட்டு ரோஜா ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டரிடம் விசாரிக்கவில்லை. அடுத்த நாள் ஃபோன் பண்ணினாள்
“டாக்டர்…. அப்பா சொல்றதையெல்லாம் நம்பாதீங்க… கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்… கீழே விழுந்துட்டார்”
“எனக்குத் தெரியும், யார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று” ஃபோனை டக்கென்று வைத்தார் மருத்துவர்
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
UNmaich cheithi kasakkaththaan cheyyum! Yaarum vithivilakku alla ivvulagil. Doctor avarGaLin sariyaanathE. Avarukkup paaraattukkaL.
“Mandakolathur Subramanian.”
100, Juliet Court,
Chapel Hill-N.CarOlina-27516,
USA.
Doctorukku thannudaiya thozhilaiyum nangu theriyum. ‘Kooda, ‘Psychology’ (makkaL mananGaLil veLIppadum uNarchchiGaLaiyum) nangu theriyum. Avaridam pOy chollith thappikka iyalaaththu. Illaiyaa? —- “Mandakolathur Subramanian.”
100, Juliet Ct: – Pin: 27516.
Chapel Hill. North Carolina,
USA.