அடிப்படையான வெறும் மூன்று பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே இரட்டை அடுக்கு கேக்கை எளிதில் தயாரிக்க முடியும். இந்த பிஸ்கட் கேக் எல்லா திருவிழாக்களுக்கும் பொருத்தமானது
தேவையான பொருட்கள் :
- Parle-g பிஸ்கட் – 250 g
- வேகவைத்த பால் – 5 teaspoons
- சர்க்கரை தூள்- 3 teaspoons
- வெண்ணெய் காகிதம் -2
- நறுக்கிய பாதம் – 6-10#s
- Bourbon பிஸ்கட் – 150 g
#ad
செய்முறை :
- முதலில் 250 கிராம் Parle-G பிஸ்கட்டை உடைத்து அரைக்கவும்
- பின்னர், ஒரு கலவை கிண்ணத்தில் பிஸ்கட் பொடியை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை தூள் மற்றும் மூன்று டீஸ்பூன் வேகவைத்த பால் சேர்க்கவும்
- இது அனைத்தையும் ஒன்றாக கலந்து மாவாக தயாரிக்கவும்
- மாவு தயாரானதும் , வெண்ணெய் காகித்தில் சம்மாக பரப்பி, அழுத்தி சதுர வடிவம் போல செய்ய வேண்டும்
- பின், குளிர்சாதன பெட்டியில் 10 நிமிடம் மாவை உறைய வைக்கவும் (Freeze it)
- அடுத்து, Bourbon பிஸ்கட்டை பொடியாக அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
- பின்னர், அதில் 3 டீஸ்பூன் வேகவைத்த பால் மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து மாவாக தயாரிக்கவும்.
- 10 நிமிடம் கழித்து குளிர்சாதன பெட்டியில் இருந்து Parle-g பிஸ்கட் மாவை எடுத்து தனியாக வைக்கவும்.
- மீண்டும் ஒரு வெண்ணெய் காகித்ததை எடுத்து, Bourbon மாவை சம்மாக பரப்பி, அதன் மேல் Parle-g மாவை வைக்கவும்
- வெண்ணெய் காகிதத்தில் மாவை அழுத்தி, சதுர வடிவம் வருவது போல் செய்ய வேண்டும்
- பின்னர், குளிர்சாதன பெட்டியில் 10 நிமிடம் மாவை உறைய வைக்கவும்
- அதன் பின், குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து, கேக்கை சதுர வடிவில் வெட்டி பரிமாறலாம்
அனைவருக்கும் முன்கூட்டிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
GIPHY App Key not set. Please check settings