2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்பு அழுது கொண்டடேயிருந்தான். சற்றே எரிச்சலுற்ற ராதிகா, ‘ செல்லம்… அழுதுகிட்டே இருந்தா எப்படி… அம்மாக்கு நேரமாவுதில்லே… அழாம சமர்த்தா இறேன்…. ‘ என்று அவனை சமாதானப் படுத்தியபடியே தனது வேலைகளை செய்து கொண்டிருந்தாள் ராதிகா. இன்னும் ஒரு பத்து நிமிடத்திலாவது கிளம்பிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
சுந்தரும் வேலைக்குப் போகிறான். ராதிகாவும் வேலைக்குப் போகிறாள். அவனை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால், அன்புவை நான்கு தெரு தள்ளி இருக்கும், பேபி கேரில் சேர்த்துவிட்டிருந்தனர்.
மணி ஒன்பதே கால் தாண்டியே விட்டது. கொஞ்சம் அழுகையை நிறுத்தியிருந்தான் அன்பு. அவளும் தயாராகிவிட்டாள். அவனுக்கு டிரெஸ் போட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியே இருந்த ஸ்டாண்டிலிருந்து ஷூவை எடுத்து அவனுக்கு மாட்டிவிட்டுத் தூக்கிக்கினாள். மறுபடியும் வீரிட்டு அழ ஆரம்பித்தான்.
அம்மா கிளம்புகிறார்கள், நம்மை பேபி கேரில் கொண்டுபோய் விடப்போகிறார்கள் என்று உணர்ந்துதான் அவன் ரொம்பவும் அழுகிறான் என்று புரிந்துகொண்ட அவள் அவனை சமாதானப் படுத்தினாள்.
‘ என் செல்லமில்லே…. அழாம சமர்த்தா வருவியாம்… நாளைக்கு சண்டே… அம்மா உன்கூடவேத்தான் இருப்பேனாம்… ‘ என்று தாஜா செய்துகொண்டே வண்டியை விரட்டிச் சென்று பேபி கேரில் விட்டுவிட்டு ஆபீசிற்கும் கிளம்பிவிட்டாள்.
அவனைப் பிடித்துக்கொண்ட ஆயா, ‘ நீங்க கிளம்புங்கம்மா… ‘ என்றுவிட்டு, அவனை அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
ஆபீஸில் உட்கார்ந்து கொண்டு அன்புவையே நினைத்துக் கொண்டிருந்தாள். அவனது அழுகை காட்சி கண்களிலேயே நின்று கொண்டிருந்தது.
ஒரு மணி நேரத்தில் பேபி கேரிலிருந்து போன். ‘ ராதிகா மேம்… அன்பு தொடர்ந்து அழறான்… இந்தமாதிரி அவன் அழுததே இல்லை. என்னன்னும் தெரியலை… நீங்க கொஞ்சம் வந்துட்டு போங்களேன்… ‘
பதறிப்போன அவள், அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே இருந்தாள். அன்புவின் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. உடம்புக்குத்தான் ஏதும் பிரச்சினையோ என்று பயந்து, எதற்கும் டாக்டரிடம் காட்டிவிடலாம் என்றெண்ணி அதே தெரு முனையில் இருக்கும் ஒரு குழந்தைகள் டாக்டரிடம் ஓடினாள்.
பையனைப் பார்த்ததும், ‘ நர்ஸ்… ஃபேனை கொஞ்சம் பெரிசா வைங்க… என்றுவிட்டு அவனை பரிசோதித்தார். பிறகு, ராதிகாவைப் பார்த்து, ‘மேடம் டிரெஸ்ஸை கழற்றுங்க… செக் பண்ணனும்… ‘ என்றார். டிரவுஸர் கொஞ்சம் டைட்டாக இருப்பதைப் பார்த்தவர், ‘ ஏன் மேடம் இவ்ளோ டைட்டான டிரவுஸர் போடறீங்க… அதையும் கழற்றுங்க… ஷூவையும் கழற்றுங்க… ‘ என்று சொல்லிக்கொண்டே போனார். ஒவ்வொன்றாய் கழற்றிவிட்டு. ஷூவையும் கழற்றி தூக்கி ஏறியும்போதுதான் கவனித்தாள் ராதிகா, நசுங்கிய பூரான் ஒன்று அதிலிருந்து விழுந்ததை.
‘ அய்யய்யோ… ‘ என்று அலறியே விட்டாள் அவள்.
டாக்டர் ஊசிபோட்டு அவளுக்கு புத்திமதியும் கூறி அனுப்பி வைத்தார்.
இப்போதெல்லாம் அவள் ஷூவை தட்டாமல் போடுவதே இல்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
Yes. The story is very nice.
This thing actually happened in reality.
This happened to one of our friend’s son and by God’s grace he was saved in the last minute.
Yes. It happens. Thanks for the comments