in ,

அம்மா கொடுத்த சர்ப்ரைஸ் (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘தலை தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு போயிட்டு போன வாரம் தானே வந்தோம், அம்மா எதுக்கு இப்போ தனியா வந்திருக்கா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தாள் ஸ்மிதா.

“என்னடி என்னைப் பார்த்திட்டு பேய் அறைஞ்ச மாதிரி நிக்கறே..? நான் அவ்வளவு கண்றாவியாவா இருக்கேன்..?” என்ற காமாட்சியின் கேள்விக்கு.

“இல்லம்மா.. திடுதிடுப்புனு வந்து நிக்கயனு பார்த்தேன்.. உள்ளே வா..” என்று சமாளித்தாள் ஸ்மிதா.

“ஏன்டி.. பொண்ணுக தான் பிறந்த வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிக்கணுமா? அம்மாக்கள் பொண்ணு வீட்டுக்கு வரக் கூடாதா..?” விடாமல் கேட்டாள் காமாட்சி.

ஸ்மிதா தனது சப்தத்தை குறைத்துக் கொண்டு… “தாராளமா வாம்மா.. நாங்க மட்டும் இருந்தா பரவாயில்ல.. மாமனார், மாமியாரும் இங்கே இருக்காங்க.. அவங்ககிட்ட மரியாதைக்கு முன்னைக் கூட்டியே ஒரு வார்த்தை சொல்லி வைக்க வேண்டாமா?.. தப்பா நினைச்சுக்க போறாங்க..” என்றாள்.

உள்ளிருந்து வந்த மாமியார், கடைசி வார்த்தையை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு.. “அப்படியெல்லாம் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டோம் ஸ்மிதா..” என்று சொல்லிக் கொண்டே..

“வாங்க சம்பந்தி.. ” என்று  காமாட்சியைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஸ்மிதா திருதிருவென விழிக்க.. “நாம சஸ்பென்ஸை உடைச்சிற வேண்டியது தான்..” என மீண்டும் ஆரம்பித்த மாமியார்..

“ஸ்மிதா.. உங்கப்பா ஆஃபிஸ் வேலையா ஒரு வாரம் வெளியூர் போறாராம்.. வீட்டில சும்மா தானே இருக்கோம்.. மக வீட்டுக்கு சர்ப்ரைஸ்ஸா வந்து ஒரு வாரம் இருக்கலாம்னு பிளான் பண்ணி அம்மா வந்திருக்காங்க.. உன் புருஷன் நேத்து நைட்டே என்கிட்ட சொல்லிட்டான்..” என்று சிரித்துக் கொண்டே சொல்ல..

“அடப் பாவிகளா… இதுக்கு அவரு வேற உடந்தையா?.. அவரை என்ன செய்றேன் பாருங்க..” என்று கணவனைத் தேடி ஓடினாள் ஸ்மிதா.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மீளுமா அந்த நிமிஷங்கள் (சிறுகதை) – பாத்திமா ஜெமீனா

    இன்னைக்குமா..? (சிறுகதை) – அர்ஜுனன்.S