in

அகதி (சிறுகதை) – ✍ கற்பகம்.செ, சென்னை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்று அந்த முகாமில்  அகதிகளின் வருகை 9000க்கும் மேல் இருந்தது.

கடல் அலை சத்தம் ஓய்ந்ததோ? அகதிகளின் வெம்பும் இரைச்சலும் ஓலமானதோ தெரியவில்லை. ஏதென்று அறியாத அந்த கட்டிடம் கண்ணீரோடு வருபவர்களை மட்டும் வரவேற்று வாசல் திறந்து நின்றது. தடுமாறி முன்னேறினர் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் அகதிகள்.

ஆனால், ராமநாதபுரம் மண்டபத்தில் அதற்கு முன்னமே வந்திருந்த 300 அகதிகளுக்கும், அகதிகள் பாதுகாப்பு துறை அதிகாரியினால் வீடு மாற்ற கட்டமைப்பு சரிவர முடித்து வைக்காத நிலையில், அவருக்கு இந்த அகதிகளின் வருகை, பெரும் சிரமத்தைத்  தந்தது.

அந்த எரிச்சலுடன் பேண்டின் இரண்டு பக்க பாக்கெட்டிலிருந்து வத்திப் பெட்டியும் சிகரெட்டும் எடுத்து பற்ற வைத்தார். புலம்பலும் உடன் சேர்ந்து எரிந்தது.

“எதோ கொஞ்ச பேர் வந்தா நாம ஒத்த ஆளா சமாளிக்லா, இங்க இவ்ளோ பேர் வந்தா எப்புடி? கூட இரண்டு ஆளயு தரமாட்றானுங்க உத்தாசைக்கு ச்சச ……”

தீப்பற்றி எரியும் கோபத்தால் புகையாகாமல் பாதி சிகரெட் காலடியில் நசுக்கப்பட்டது. நசுக்கிய சிகரெட்டைத் தள்ளி விட்டு நகர்ந்தார், பெரும் பாரத்தோடும் மனஉளைச்சலோடும் என்ன செய்வது என்று புரியாமல் கலெக்டர் ஆஃபிஸ் கு வர்மன்.

கண்களில் கோபம், மனதில் எரிச்சல் இருந்தாலும் மார்பை உசத்தி கால்களைச் சேர்த்து விரப்புடன் ஒரு சல்யூட் அடித்தார் வர்மன்.

“ஐயா 300 பேர் இன்னு அதிமா வந்திருக்காங்க. என்ன செய்யறது? அந்த மண்டபத்துல அதுக்கு மேல இடமில்லங்க ஐயா”

“ஏங்க இதெல்லா உங்களுக்கு தெரியாதா? பக்கத்துல எதாவது கவர்மெண்ட் ஸ்கூல் இருக்கா பாருங்க”

அந்த கேள்வியின் வேகத்தில் பதில் தந்தார் வர்மன் “அதெல்லா எதுவு இல்லங்க ஐயா “

“எல்லாத்துக்கு பதில் வச்சிருக்காதிங்க. எதுவு இல்லன்னா அங்கயே ஒரு டெண்ட் போட்டு ஏற்பாடு பண்ணுங்க”

“ஐயா டெண்டு போட ஆளு பொருளெல்லா கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க ஐயா”

“எல்லாத்தையும் நான் ஏற்பாடு பண்ணனு னா  நீங்க எதுக்குங்க? போங்க போங்க… நம்ம முருகங்கிட்ட தேவையான பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்து இறக்க சொல்ற, வந்த கூட்டத்திலயே நாளு ஆம்பளைங்கல வச்சு ஏற்பாடு பண்ணுங்க”  

“கேள்விக்குலா பதில தயாரா வச்சிருங்க, வேறெதுவு செஞ்சிறாதிங்க. இவனுங்க மூளைய அப்படியே வச்சிருப்பானுங்க , நாம தான் எல்லா சொல்லணும்” எனும் முனங்கல் காதில் விழுந்து, மீண்டும் சல்யூட் அடித்து திரும்பினார் வர்மன்.

கிடைத்த உதவியோடு அலைந்து திரிந்து எப்படியோ எல்லாம் ஏற்பாடு செய்து முடித்தார். அகதிகள் அனைவரும் நிலைகுலைந்து போன தங்களின் வாழ்வாதார நிலையை நினைத்து, சொல்ல முடியாத பசி மயக்கத்தில் கிடந்தனர்.

அந்த ஊரின் பல இடங்களில் இருந்தும் பல வாலன்டியர்ஸ் சாப்பாடு பொட்டலங்களைக் கொண்டு வந்து தந்தனர். 

“அனைவருக்கும் உணவு சேர்ந்து விட்டதா” என்று கிளை நிர்வாகியிடம் வர்மன் கேட்டுக் கொண்டிருந்தார்.

அங்கு தான் அந்த சிறுமி வந்தாள். வர்மனிடம்

 “மாமா, அங்க என்னோட அக்கா அம்மா தாத்தா எல்லாரு இருக்காங்க, அவங்க மூனு பேருக்கு சாப்பாடு வரல. என்கிட்ட கொடுக்குறீங்களா, நான் அவங்களுக்கு தரேன்.

முன்பே கட்டி வைத்திருந்த கோபம் வர்மனுக்கு, “ஏய் சீ….  சாப்பாடு வேணும்னா சாப்பாடு வேணும்னு கேளு, எதுக்கு மாமானு கூப்பிடுற” கோபமாக சீறி விட்டார், கீழே பிடித்து தள்ளியும் விட்டார்.

ஆனால் சிறுமிக்கு எதுவும் வருத்தமில்லை. சட்டென எழுந்தவள்… பாவடையை உதறி கையைத் தட்டி மேல் பட்ட மண்ணை உதறி விட்டாள். கிளை நிர்வாகி உணவு பொட்டலங்களைக் கொண்டு வந்து சிறுமியிடம் தந்தார்.

அந்த சின்ன பெண் அப்போதும் முகம் சுழிக்காமல், உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு சென்று  அம்மா அக்காவிடம் கொடுத்தாள். உணவினைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அனைவருமே.

அவ்விடம் தான் சற்று தூரத்தில்  ம்மா ம்மா என்று ஒரு பிஞ்சு குழந்தையின் குரல். அங்கிருந்த பலரின் காதுகள் குழந்தையின் குரலை  கவனிக்கவே இல்லை.  சற்று குரல் அதிகமாகி ஒவ்வொருவராய் அவ்விடம் சென்று பார்க்கும் நேரத்தில், அந்த சின்ன பெண், ஒரு சிறு குழியிலிருந்து குழந்தையைத் தூக்கி மேலே வந்து விட்டாள்.

கூட்டமாய் கூடியவரில் ஒருவர் சத்தமாய் “என்ன ஆனது?” என்று கேட்க

அச்சிறுமி “தங்கச்சி பாப்பாவுக்கு ஒன்னு ஆகல, இந்த குட்டைல பாப்பா விழுந்திருச்சி… நா தூக்கிட்ட” என்றாள்.

அனைவரையும் தள்ளி நகர்த்தி பதட்டத்தோடு வந்து பார்த்தார் வர்மன். அந்தக் குழந்தை “அப்பா…” என்று வர்மனிடம் ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டது. குழந்தையைத் தூக்கி அணைத்துக் கண்ணீர் பெருக செயலற்று நின்றார் .

 கூட்டத்திலிருந்த ஒருவரிடம் அதிகாரி வர்மன், “உங்க பொண்ணு மட்டும் குழந்தையோட குரல கவனிக்கலனா  அவளுக்கு என்ன ஆகியிருக்குமோ? தெரியல ரொம்ப நன்றிங்க  அம்மா” என்றிட 

“இல்லங்க ஐயா, அது எம் பொண்ணு இல்ல. அந்தப் பொண்ணோட அம்மா அப்பா எல்லா அங்கயே செத்துப் போயிட்டாங்க”

கலங்கி இருந்த கண்ணீர் வற்றிப் போனது வர்மனுக்கு. புருவம் சுருக்கி, நெற்றித் தாழ்த்தி,  தன்னைத் தான் ஊன் குறுக பார்த்தார் அந்தச் சிறுமியை. அப்போதும் அவள் தன் பாவாடையை உதறிக் கொண்டு கையில் ஒட்டிய மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நிலாவின் அம்மா (சிறுகதை) – ✍ வித்யா குருராஜன், புதுச்சேரி

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 4) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி