in

கைரேகை (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து, சென்னை

கைரேகை (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

செல்போன் மணி சினுங்க சிரமப்பட்டு ஜீன்ஸ் பேண்டிற்குள் கையை விட்டு எடுத்து, “ஹலோ நான் ஏகாம்பரம் பேசறேன், நாங்க கெளம்பி வந்திட்டு இருக்கோம்.  டாக்குமெண்ட் ரைட்டிங்லாம் முடிச்சிட்டீங்களா? ஏன்னா இந்த ரெஜிச்ட்ரேசன் முடிச்சிட்டு, அவுங்களுக்கு நிறைய அப்பாயின்மெண்ட்ஸ் இருக்கு. அப்புறம் ரிஜிசஸ்டர் ஆபிஸ்க்கு வந்தவுடனே அந்த பேப்பர் ரெடியாகல, இந்த பேப்பர்ஸ் ரெடியாகலன்னு சொன்னீங்கன்னா மேடம் ரொம்ப டென்ஷனாகிடுவாங்க”

“சார் நான் பத்து வருஷத்துக்கு மேல டாக்குமெண்ட்ஸ் ரைட்டரா இருக்கேன், அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் சொன்ன ஐடி ப்ரூப்ஸ்செல்லாம் கரெக்டா எடுத்துட்டு வாங்க, ஃபர்ஸ்ட் ரிஜிசஸ்ட்ரேசனா ஒங்களோடத முடிச்சிடரலாம்”

“ம்ம்ம் அதெல்லாம் கரெக்டா எடுத்துட்டோம் இன்னும் ஒன்னவர்ல வந்த்திடுறோம்”

”யம்மா இந்த ஏகாம்பரத்தோ  டாக்குமெண்ட்ஸ எடும்மா, கரெக்டா இருக்குதான்னு நான் ஒரு தடவ படிச்சி பாத்துடுறேன். ரொம்ப பேசறான் அந்தாளு” என்றான் பத்து வருடங்களுக்கு மேலாக பத்திர பதிவு செய்து கொடுக்கும் பாரதி, ஒரு வக்கீலுக்கு இணையாக பத்திரங்களை சரிபார்க்கும் அளவிற்கு சாமர்த்தியம் உள்ளவன்.                                                                      

ஒரு மணி நேரமாகும் என்று சொன்ன ஏகாம்பரம் அதற்கு முன்பாகவே வந்து விட்டார்

“என்ன சார் எல்லாம் ரெடியா கரெக்டா இருக்கா?’’                                    

“எல்லாம் கரெக்டா இருக்கு சார், ஜஸ்ட் ப்ரிண்ட் மட்டும்தான் எடுக்கனும்” என்றான் பாரதி

“ஏன் சர் அத மொதல்லேயே எடுத்து வைக்கக் கூடாதா? டைம் ஆகுதுல்ல’’      

“இன்னும் ரிஜிஸ்டர் ஆபிஸரே வரல சார், ஏன் அவசரப்படுறீங்க, ரெண்டு நிமிஷத்தில பிரிண்ட் எடுத்திடலாம். அப்புறம் நூறு ரூபாய் நோட்டா ஒரு பத்தாயிரம் கேட்டிருந்தேனே எடுத்துட்டு வந்திருக்கீங்களா சார்?’’                                          

“பாத்தீங்களா இன்னும் ரிஜிஸ்டர் ஆபிஸ்குள்ளாரவே போகல அதுக்குள்ள பணத்தை கேட்கிறீங்க, அதுல மட்டும் கரெக்டா இருக்கீங்க சார்’’                   

“சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க, உள்ள போகும் போதே வரிசையா எல்லாரையும் சில்லரையால கவனிச்சா தான் நம்ம வேலை ஈசியா முடியும் அதான் கேட்டேன். இல்லன்னா நீங்களே வச்சிக்கீங்க நான் யார் யாருக்கு கொடுகனும்னு  சொல்லும் போது அப்போ நீங்களே கொடுங்க” என்றான்             

“அய்யோ அதெல்லாம் வேணாம் சார், இந்தாங்க நீங்களே கொடுங்க” என்று நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து பாரதி கையில் கொடுத்தார் ஏகாம்பரம்.                  

காரிலிருந்து ஹாரன் சவுண்ட் கேட்டு குட்டி நாய் போல ஓடிய ஏகாம்பரம், ஓடிய வேகத்திலேயே திரும்பி வந்து, “சார் முடிஞ்சிதுங்களா? மேடம் லேட்டாகுதுன்னு சொல்றாங்க ப்ளீஸ்’’                

“வாங்க போலாம்  நான் ரெடி”ன்னான் பாரதி                                 

“அப்ப மேடத்தையும் கூட்டிட்டு வரட்டுமா சார்?’’

“ம்ம் ஓகே” ன்னான் பாரதி.                                                   

அடிக்கடி பெரும்புள்ளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் வந்து போகும் இடம் அரசு அலுவலங்கள். ஆனால் இந்த அலுவலகங்கள் மட்டும் பழைய கட்டிடங்களாகவே இருக்கிறது

சென்னையில் பூச்சிக்கடி, பாம்புக்கடிக்கு சித்த வைத்தியத்தின் மூலம் மருந்து கொடுக்கும் மக்கள் நெருக்கடி நிறைந்த திருவாளப்புத்தூரில் ஒரு பழைய கட்டிடத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாரதியுடன் ஏகாம்பரமும், அவருடன் வந்த மாதவியும் வந்தார்கள்.

படிகளில் ஏறும்போது தப்பித்தவறிக்கூட கைப்பிடிகளில் கையை வைத்துவிட கூடாது மீறி தெறியாமல் வைத்துவிட்டால், துரு பிடித்திருக்கும் அந்த இரும்பு துகள்கள் கையை பதம் பார்த்து விடும்.

இடது புறமாக ஏறி வலதுபுறமாக திரும்பும் வேளையில் லேண்டிங்கும் சுவரும் இணையும் மூலைப்பகுதியில் பான்பராக் போட்டு சிவப்பு நிற எச்சிலை துப்பி வைத்திருந்தார்கள் மானங்கெட்ட சில மனிதர்கள்.                                                    

“மாதவி பார்த்து வாம்மா, கொஞ்ச நேரத்தில ரெஜிஸ்டர் முடிஞ்சிடும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” பவ்யமாக சொன்னார் ஏகாம்பரம்.                                 

படியேறி மேலே சென்று பார்த்தால், இவர்களுக்கு முன்னாடியே கூட்டம் அதிகமாக இருந்தது

“என்ன சார் நாம தான் முதல்லுனு சொன்னீங்க, இங்க வந்து பார்த்தா நமக்கு முன்னாடியே இவ்ளோ கூட்டம் இருக்கு”ன்னார் ஏகாம்பரம்.                          

“சார் நேத்து ஆபிஸ் டைம் முடியிற டைத்ல கொடுத்த டாக்குமமெண்ட்ஸ் சார், அதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும்” என்று பேசிக் கொண்டே ஏகாம்பரத்தின் டாக்குமெண்ட்ஸை சப்ரிஜிஸ்டர் டேபிளில் வைத்தான் பாரதி.                                                                      

ஏற்கனவே டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த சப்ரிஜிஸ்டர், ”சித்ரா நீங்களா என்றார்?’’                                                        

“ஆமாம்மா, நாந்தான்” என்று ஒரிஜினல் ஆதார் கார்டை காட்டினாள், வேறொரு ரிஜிஸ்டரேஸ்னுக்காக வந்திருந்த பெண்னொருத்தி

“சார் எல்லோரும் கூட்டம் போடாம கொஞ்சம் வேளியே இருங்களேன், வரிசயா ஒவ்வொருத்தரா கூப்பிடுவோம், ப்ளீஸ்”னு சத்தமாக குரல் கொடுத்தார் ஜவான்.        

“நான் வேணும்னா கார்ல வெயிட் பண்ணட்டுமாங்க” கேட்டாள் மாதவி

“நீ போன நேரம் பாத்து ரிஜிஸ்டர் கூப்பிட்டாங்கன்னா என்னப் பண்றதும்மா? கொஞ்சம் நேரம் தான் ப்ளீஸ்”ன்னான் ஏகாம்பரம்

“இப்படி வா ஃபேன் காத்துல நில்லு”ன்னார்

பிசுபிசுன்னு வியர்வை உடல் முழுதும் பரவியது. மூடியிருந்த முகத்துணியை நீக்கி அந்த துணியாலே முகத்தை துடைக்கும் போது தான், அவளின் அழகிய முகம் அனைவருக்கும் காணக் கிடைத்தது. அப்போது தான் மரத்திலிருந்து பறித்த ஆப்பிள் போல முகம் பளிச்சென்று இருந்தது

இன்னும் கொஞ்ச நேரம் அந்த வேக்காட்டில் இருந்தால், ஐஸ்கிரீம் உருகுவதைப் போல் உருகி விடுவாள். மாயவரம் சீமாட்டிக் கடை வாசலில் கண்ணாடிக் கூண்டிற்குள் உள்ள புடவை கட்டிய சிலை கணக்காக இருந்தாள் மாதவி

“சார் இப்பத் தான சொன்னேன், கூட்டமா நிக்காதீங்க” என்றார் மீண்டும் ஜவான்

“என்ன நம்மள இன்னும் கூப்பிடவே இல்ல சார், போய் என்னாச்சின்னு கேளுங்க” ன்னார் ஏகாம்பரம்

“சார் சப்ரிஜிஸ்டர் டேபிள்ல பாருங்க, அடுத்து நம்ம பேப்பர் தான், வெயிட் பண்ணுங்க”        

“என்னம்மா நீங்க, நான் சொல்றா மாதிரி இடது கை கட்ட விரல இந்த இங்பேட்ல நல்லா அழுத்தி அப்புறமா இந்த பேப்பர்ல வைங்கம்மா” என்று சொல்லிய ஜவான், கொதகொதன்னு வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலை எச்சியை தான் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டு எழுந்து பின்புறமாக திறந்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் வீ சேப்பில் இரண்டாக பிரித்து ப்ளீச்சின்னு வெளியே துப்பின்னான்

வெளியே வந்து விழுந்த சிவப்பு நிற எச்சில் குறைந்தது நூறு மில்லியாவது இருக்கும். ஜவான் போல அதிகமான எச்சிலை பல பேர்கள் துப்பாமல் இருந்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஓரளவு குறைந்திருக்கும்.                                                                         

“சார் வாங்க, அடுத்தது நம்மளோடது தான்” என்று கூப்பிட்டான் பாரதி

“நீங்க தான் மாதவீங்களா? ஒரிஜினல் ஐடியை காட்டுங்க” என்றார் சப்ரிஜிஸ்டர்                                                            

“ஆமா சார், இந்தாங்க” என்று வோட்டர் ஐடியை கொடுத்தாள் மாதவி

இரண்டு பக்கமும் ஐடியை திருப்பி பார்த்தவர், இப்படியே நாள் முழுதும் மாதவியின் முகத்தை பார்துக் கொண்டிருக்க ஆசைப்பட்டார்

யாரோ ஒருவர் “சார்” என்றவுடன் சுயநினைவுக்கு வந்தார் சப்ரிஜிஸ்டர்

அடுத்தது ஜவானிடம் செல்ல வேண்டும். அவனின் வெள்ளை நிற பைஜாமும், நெற்றியில் பெரிதாக இட்டிருந்த செந்தூர பொட்டும் மூடியிருந்த உதடுகளையும் மீறி வாயின் ஓரமாக ஒழுகும் வெற்றிலை எச்சிலை நினைத்தவுடன் மாதவியின் உடல் முழுக்க உள்ள மயிர்கள் சிலிர்த்தெழுந்தன. 

ஜவானின் டேபிளில் பிரபல திவா என்ற கட்டுமான நிறுவனத்தினரால் கொடுக்கப்பட்ட கை இங்குகளை துடைக்கும் பேப்பர் கட்டுகள் இருந்தன

“வாங்க பாரதி, என்ன இந்த வாரத்தில முதல் ரிஜிஸ்ட்ரேஸனா”ன்னார் திவான்

“ஆமாண்ணே, நாளைக்கும் ஒன்னு இருக்கு”ன்னான் பாரதி

“மேடம் பேரு தான் மாதவியா? மேடம் இங்க கையெழுத்து போடுங்க” என்றான்

“அப்புறம் ஒங்க இடது கை கட்டை விரல இப்படி கொடுங்க” என்று அவளின் கைவிரலை பிடிக்க முயன்றவனை தடுப்பதைப் போல், “வேண்டாம் நானே இங்க்ல அழுத்தி கைரேகயை பதிய வைக்கிறேன்” என்றாள் மாதவி

“மேடம் ஒங்களுக்கெல்லாம் சரியா பண்ண முடியாது மேடம். சொன்னா கேளுங்க எனக்கு டைம் ஆகுது, ஒங்களுக்கு அடுத்து ஆளுங்க நிக்கிறாங்க பாருங்க” ன்னார் ஜவான். ஆனால் மாதவி அதற்கு சம்மதிக்கவில்லை                                                                                        

“இது சரிவராது, அடுத்து நீங்க வாங்க” என்றார் ஜவான் காத்திருந்த இன்னொருவரைப் பார்த்து    

“என்ன மேடம் ஏன் இப்படி பண்றீங்க”ன்னான் பாரதி

“என்ன சார் அந்தாளு என் விரலபுடிச்சி இடப்பக்கமாவும், வலப்பக்கமாவும் வச்சி அழுத்துவான், அத நான் அலோ பண்ணனுமா? என்னால முடியாது” ன்னாள் மாதவி.

திடீரென்று சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மூன்று, நான்கு போலீஸ்காரர்களுடன் ஒரு பெண் ஆவேசமாக உள்ளே நுழைந்தாள்.  ஏகாம்பரத்திற்கு கிலி பிடித்தது

இன்ஸ்பெக்டர் சப்ரிஜிஸ்டரிடம் ஏதோ பேசினார். ஜவான் டேபிளிலிருந்த மாதவியின் பேப்பர்ஸ் ரிஜிஸ்டர் டேபிளுக்கு சென்றது. பேனாவால் குறுக்கும் நெடுக்குமாக கோடு போட்டார் சப்ரிஜிஸ்டர்.                                        

“என்னய்யா முழிக்கிற? எங்கப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்த ஒனக்கு என்னையும் கட்டிக் கொடுத்து சொத்துக்களையும் கொடுத்தா சாரு இந்த ஜில்ஜில்ராணிக்கு ஒரு ஃப்ளாட்ட எனக்கு தெறியாம எழுதி கொடுப்பீங்களோ? எங்கப்பா சம்பாதித்த சொத்துக்கள்ல பாதிய நீ நல்லவன்னு நினைச்சி ஒம் பேருக்கு எழுதி வச்சா நீ அனுபவிக்கறது மட்டுமில்லாம, இவளுக்கும் எழுதிக் குடுக்கறியா? வீட்டுக்கு வா கச்சேரிய அங்க வச்சிக்கிடலாம். ஏய் ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோடி, புடவைக் கட்டினாலும், சுடிதார் போட்டாலும் மாதவின்னா மாதவி தான், கண்ணகி ஆகிடமுடியாது” ன்னாள் ஏகாம்பரத்தின் மனைவி அஞ்சலி.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜவான், ‘பெருசா கைப்படாத ரோஜா மாதிரில்ல பிகு காட்னா கடைசியில இவ அவளா’ என்று எண்ணிக் கொண்டு மீண்டும் காரித்துப்பினான் ஜன்னலுக்கு வெளியே. 

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

9 Comments

  1. பெருமாள் நல்லமுத்து எழுதிய கைரேகை சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது. நிறைய வர வாழ்த்துகள்

வருங்கால எழுத்தாளர்  (சிறுகதை) – ✍  க. பூமணி, செஞ்சி தாலுகா, விழுப்புரம் மாவட்டம்

விந்தையென வந்த வரவே (சிறுகதை) – ✍ இந்து ஷியாம்