நம்பிக்கை வைத்து தட்டிப் பார் கொட்டாங்கச்சியில்கூட தாளம் வரும் நம்பிக்கை வைத்துக் கேட்டுப் பார் காக்கை கரைதல்கூட குயிலின் கானமாய் கேட்கும்
யானையின் தும்பிக்கையை விட வலிமையானது நீ உன்மீது வைக்கும் நம்பிக்கை காய்ந்த சருகுகள் நினைக்கும் தான் மீண்டும் துளிர்ப்போம் என்று பட்டமரம் கூட நினைக்கும் தான் மீண்டும் தழைப்போம் என்று காற்றின் நம்பிக்கை வீசுவதிலே கடலின் நம்பிக்கை ஆர்ப்பரிப்பிலே வானின் நம்பிக்கை பொழிவதிலே பூமியின் நம்பிக்கை சுழல்வதிலே இருக்கும் நம்பிக்கை இழந்து போனால் இயக்கங்கள் அது இற்று போகும் உன் நம்பிக்கை உனக்குள் மட்டுமே உறங்கும் குதிரையான ஊக்கமருந்து அதனை தட்டி எழுப்பிப் பார் தரையில் கால் பாவாமல் தக்கையாய் செலுத்தி தரணியில் உனை உயர்த்தும் #ad
#ad
GIPHY App Key not set. Please check settings