எழுத்தாளர் மகாராஜா பரமேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பிரபல துப்பறிவாளர் அருணனைப் பார்க்க , அவரின் துப்பறியும் அலுவலகத்துக்கு, சூர்யா வந்தான்.
அருணன் “உனக்கு என்ன பிரச்சினை தம்பி, நான் ஏதாவது கண்டுபிடித்து தரணுமா?” என்று சூர்யாவிடம் கேட்க,
சூர்யா “ இல்லைன்னா, எனக்கு டிடெக்டிவ் செய்ய ஆர்வம் அதிகம். அதான் நானும் உங்கள்ட அசிஸ்டன்டா சேர்ந்து…” என்று தலையை சொரிந்த வாறே சொல்ல,
உடனே அருணன் “ ஓ.அப்படியா.!”
“ நீ என்ன படிச்சுருக்க? “ என்று கேட்க,
சூர்யா “ நான் இவ்வளவு தான் அண்ணா படிச்சுருக்கேன் “என்று சொல்லி விட்டு, படிப்பறிவை விட பட்டறிவு அதிகம் “ என்று சொல்ல,
அதற்கு அருணன் “ புரியல தம்பி.!” என்று சந்தேகமாக கேட்க,
சூர்யா “ அண்ணா எனக்கு பொது அறிவு அதிகம் தெரியும், அதைத் தான் சொன்னேன் “ என்று சொல்லி லேசாக சிரிக்க,
அருணன் “ ஓ அப்படியா.!” என்று சொல்லி விட்டு,
“ நான் உனக்கு ஒரு டெஸ்ட் வைக்கட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே, “அடிடாஸ் (adidas) என்பது எதன் அக்ரோனிம் வேர்ட் என்றதும்,
சூர்யா, வேகமாக “ ஆல் டே ஐ டீரீம் அபௌட் ஸ்போர்ட்ஸ்” என்று விளக்கம் கொடுக்க,
அதற்கு அருணன் “ சபாஷ் தம்பி…!” என்று சொல்லி விட்டு, “உனக்கு பொது அறிவு அதிகம் தெரியும் என்பதால் இன்னொரு டெஸ்ட் “ என்று சொல்ல,
சூர்யா “ ம்ம் கேளுங்க அண்ணா “
அருணன் “ ஒரு நாட்டில வெள்ளி உண்டு. அதை வைச்சே அந்த நாட்டோடு பேர் உண்டு. அந்த நாட்டோடு பேர் என்ன?” என்று கேட்டதும்,
சூர்யா ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ”அண்ணா அந்த நாட்டோட பேரு அர்ஜென்டினா. அந்த நாட்டில் வெள்ளிமலை இல்லை . ஆனால் அங்கே வெள்ளிமலை இருக்கு என்று வதந்தியை நம்பி எசுப்பானியர்கள் இங்கே வந்தார்கள். மேலும் அர்கெந்தினா என்னும் சொல் வெள்ளி என்று பொருள் தரும் “ விளக்கமளிக்க,
“ சபாஷ் டா தம்பி. டிடெக்டிவ் பண்ண, பொது அறிவும் நுண்ணறிவும் அதிகம் இருந்தாலே போதும். ம்ம் இப்போதைக்கு எனக்கு எந்த கேசும் வரல, எதுவும் வந்தா உன்னைக் கூப்டுறேன் “என்று சொல்லி, அவனிடம் போன் நம்பர் கேட்கும் போதே, ஒருவர் ஒரு கேஸ் விசயமாக வந்தார். வந்தவர் அருணனுக்கு பழக்கமானவர் தான்.
அருணனிடம் “ டிடெக்டிவ் சார், ஒரு இரகசியம்.! “ என்று சொல்ல ,
“ என்ன இரகசியம் தாமோதரன்?” என்று அருணன் கேட்க,
தாமோதரன், சூர்யாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு யோசிக்க, “ அவன் எனக்கு புதுசா சேர்ந்திருக்கிற, அசிஸ்டன்ட் தான் “ என்று தாமோதரனுக்கு சூர்யாவை நம்பிக்கை வரும் படி சொல்ல,
தாமோதரன் “ ஓ. அப்படியா.!” என்று சிரித்துக் கொண்டே, கொஞ்சம் சீரியஸாக, “ ஒன்னுமில்லை டிடெக்டிவ், நேற்று இரவு என் கடை பக்கத்தில , ஒருத்தன், பைக்கை நிறுத்தி,போன்ல ஒருத்தனுக்கு ஏதோ ஒரு க்ளு கொடுத்தான் “ என்று அதிர்ச்சி கலந்து சொல்ல,
அருணன், “ ம்ம்” என்று கேட்க,
தாமோதரன் “ அவன் கொடுத்த க்ளுவைக் கேட்டு அவன் ஏதோ தப்பு செய்றான்னு என் மனசுக்கு பட்டது”என்று சொல்ல,
அருணன் “ அவன் உங்களுக்கு தெரிஞ்சவனா?”என்று கேட்க,
தாமோதரன் “ இல்லையே.! , அவன் யாருன்னே தெரியாதே?,” என்று வியப்பாக சொல்ல,
அருணன் “ ம்ம், பிறகு எப்படி அவன் பேசியதை அரை குறையா கேட்டுட்டு அவன் ஏதோ தப்பு செய்றான்னு முடிவுக்கு வந்தீங்க?”என்று கேள்வி கேட்க,
“ இல்ல. டிடெக்டிவ், அவன் கொடுத்த க்ளு தான் எனக்கு அவன் மேல சந்தேகம் வந்துச்சு, அவன் யாருன்னு பாக்கிறதுக்குள்ள, அவன் பைக்கை கிளப்பி போய்ட்டான் “ என்று திருடனை பிடிக்க முடியாமல் ஏமாந்தது போல் சொல்ல,
“ இப்ப என்ன அவன் யாருன்னு தெரிஞ்சுக்கனுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க அருணன் கேட்க,
“விளையாடதீங்க டிடெக்டிவ், நான் சீரியஸாக பேசிக் கிட்டுருக்கேன்…” என்று வருத்தமாக சொல்ல,
அருணன் “ ம்ம். சரி கூல் டவுன், இப்ப நான் என்ன செய்யனும்னு எதிர் பார்க்கிங்க?” என்று கேட்க,
தாமோதரன் “ அவன் சொன்ன க்ளுவை வைத்து எனக்கு சந்தேகமாக இருக்கு. போலிஸ் ஸ்டேஷனில் போய் சொன்னா, உங்களை மாதிரி தான் அவங்க நிறைய கிராஸ் கேள்வி கேட்பாங்கன்னு இங்க வந்தா, நீங்க என்னடான்னா…” என்று சலித்து கொள்ள,
அருணன் “ ம்ம். சரி, அதான் நான் கூல் டவுன் சொல்லிட்டேனே, நீங்க க்ளுவை சொல்லுங்க “ என்றதும்,
தாமோதரன், “ ம்ம் “ என்று சமாதானம் ஆனது போல் சொல்லி விட்டு, “ ஏதோ, விவசாய மறை நகரம், +65 கடைக்கு பின்னாடி… அப்புறம் ஏதோ சொன்னானே…!” “ஆங் ,விளக்க வேற இங்கிலிஸ்ல சொன்னா அதே உச்சரிப்புல வர்ற சமாதிக்கு பக்கத்துல…” என்று சொல்லி கொண்டே, “ அவ்வளவு தான் டிடெக்டிவ் “ என்றதும்,
தாமோதரன் க்ளுவை சொல்ல சொல்ல, அதைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தான் சூர்யா.
அருணன் “ ஆமா இந்த க்ளு ஏதோ சந்தேகமாக தான் இருக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள்,
சூர்யா “ அண்ணா, விவசாய மறை நகரம் என்பது, நாலடியார் நகரை குறிக்கும் க்ளுண்ணா” என்று ஒரு க்ளைவை கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் சொல்ல,
அதைக் கேட்டு அருணன் “ எதை வைச்சு, அப்படி சொல்ற?” என்று ஆச்சரியமாக கேட்க,
சூர்யா “ அண்ணா, சமண முனிவர்களால் 400 வெண்பாக்களால் இயற்றப்பட்ட நாலடியார் நூலுக்கு, வேளாண் வேதம் என்று ஒரு பெயர் உண்டு , மேலும் இது பதினெண்ன கீழ் கணக்கு நூல்களுள், திருக்குறளுக்கு இணையாக போற்றப் படுகிறது. அந்த நூலில் வேளாண் உற்பத்தி பற்றி அதிக பாடல்கள் உண்டு “ என்று சொல்லிக் கொண்டே,
“முதல் க்ளுப் படி பார்த்தால், விவசாய மறை என்பதை வேளாண் வேதம் என்று வைத்துக் கொண்டு பார்த்தால், அது நாலடியார் என்று வருது, அப்படின்னா, அதோடு நகரைச் சேர்த்தா நாலடியார் நகர் என்று அர்த்தம் “ என்றதும்,
அருணன் “ வெரிகுட்றா தம்பி…!” என்று பாராட்ட, தாமோதரனும் சூர்யா சொன்ன க்ளுவைக் கேட்டு ஆச்சரியமானார். சூர்யா அப்படியே அடுத்த க்ளுவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
‘+ 65 கடைக்க்கு பின்னாடி என்றால்?, நாலடியார் நகரில் உள்ள முதல் கடையிலிருந்து 65 வது கடையா? அல்லது, + என்று இருப்பதால், எதனோடு+65 ஆ இருக்கும்?’என்று யோசித்து பார்த்தான்.
ஊரோடு அடுத்த எல்லையிலிருந்து ஊருக்குள் வரும் 65 வது கடையா? அல்லது இந்த எல்லையில் இருந்து அந்த எல்லைக்கு செல்லும் வழியில் இருக்கும் 65 வது கடையா? என்று யோசித்து பார்க்கும் போது, அவன் வாட்சப்புக்கு, குவைத்தில் இருந்து அவன் நண்பன் ஆடியோ கால் செய்ய, அதைப் பார்த்து விட்டு அதை கட் செய்தவன், ஏதோ ஒரு நினைவு வந்தவனாக, தன் நண்பனின் வாட்சப் நம்பரை பார்க்க, அதில்+ 965 என்று போட்டு அதன் பிறகு போன் நம்பர் இருக்க, அதைப் பார்த்தவனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே கூகுளில் போய்+ 65 எந்த நாட்டு அழைப்பு குறீயீடு என்று தேடிப் பார்த்தால், அது சிங்கப்பூர் என்று வந்தது.
உடனே அருணனிடம் “ அண்ணா அந்த+ 65 என்பதற்காக க்ளு சிங்கப்பூர்” என்று சொல்லிக்கொண்டே தான் கண்டு பிடித்ததை விளக்க,
உடனே அருணன் “ சபாஷ் டா…!தம்பி, உண்மையிலேயே, உனக்கு புத்திக் கூர்மை அதிகம் தான்டா “ என்று மனமுவந்து பாராட்ட,
தாமோதரன் “ ஆமாம், நாலடியார் நகர்ல சிங்கப்பூர் சில்க்ஸ் என்று ஒரு கடை இருக்கு…!” என்று சொன்னதும்,
அருணன் “ அப்படின்னா, அந்த கடைக்கு பின்னாடி தான் ஏதோ ஒரு இரகசியம் இருக்கு “ என்று அதிர்ச்சியாக சொல்ல, உடனே சூர்யா, அடுத்த க்ளுவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
‘ விளக்கு என்பதை இங்கிலிஷ்ல லைட்ன்னு சொல்லுவாங்க, அப்படின்னா அதை உச்சரிப்புல, லைட்னா என்னவாக இருக்கும் என்று மேலும் மேலும் வேறு வேறு கோணத்தில் யோசித்து பார்க்கும் போது, விளக்கை இங்கிலிஷ்ல லேம்ப் என்று சொல்லலாம், அதே உச்சரிப்புலன்னா, லேம்ப்… லேம்ப்… என்று யோசித்தவனுக்கு,
ஆங்… லேம்ப் (lamb) என்று யோசனை வர, அப்ப அதனருகில் சமாதி என்றால்,” லேம்ப் டாம்ப் “ என்று தன் மனதில் யோசித்ததை சத்தமாக சொல்ல,
அருணன் அதைக் கேட்டு விட்டு ”என்ன ஆட்டுச் சமாதியா…!” என்று ஆச்சரியமாக கேட்க,
உடனே தாமோதரன் “ அட ஆமாங்க டிடெக்டிவ், எனக்கு இப்பத்தான் நியாபகம் வருது, நாலடியார் நகர்ல சிங்கப்பூர் சில்க்ஸுக்கு பின்னாடி ஒரு ஆட்டுக் குட்டி சமாதி ஒன்னு இருக்கு. வெள்ளைக்காரன் காலத்துல ஒரு போலிஸ்காரனோட ஆடு அங்கனக்குள்ள வைச்சு செத்ததுனால அங்கேயே புதைச்சு சமாதி கட்னாங்க…!” தாமோதரன் சொல்ல,
அருணன் “ அப்படின்னா, நீங்க சொன்ன இரகசியம் அங்க தான் மறைஞ்சிருக்கு” என்று சொல்லி விட்டு மூவரும் அந்த இடத்துக்கு போய், அந்த ஆட்டுக்குட்டி சமாதி பக்கத்துல, சந்தேகத்திற்குரிய இடத்தைப் பார்த்து விட்டு, அருணன் போலிஸுக்கு தகவல் கொடுக்க, அவங்க வந்து அந்த இடத்தை தோண்டி பார்த்ததில், அந்த இடத்தில் நிறைய நகைகள் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமானாங்க,
அதற்குள் பத்திரிகை காரங்களுக்கு விசயம் தெரிந்து அங்கே வர, இன்ஸ்பெக்டர் “இங்கே ஏதோ இரகசியம் இருக்கு என்று உங்களுக்கு யார் சொன்னா?” என்று அருணனைப் பார்த்து கேட்க,
அருணன், தாமோதரன் சொன்ன க்ளுவையும், சூர்யாவின் புத்திக் கூர்மையால் கண்டு பிடித்ததையும் சொல்ல, இன்ஸ்பெக்டர், தாமோதரனிடம், “ உங்களுக்கு சந்தேகம் வந்து இவரிடம் சொன்னதற்காக உங்களைப் பாராட்டுறேன், மேலும் இந்த நகைகள் நேற்றைய முன் தினம் தான் பக்கத்து ஊரில் உள்ள அம்மன் கோயிலில் காணாமல் போன நகைகள்” என்று புதிய தகவலையும் சொல்ல, அதைப் பத்திரிக்காரர்கள் குறித்துக் கொண்டார்கள். நகைகளையும் போட்டோ எடுத்து கொண்டார்கள்.
இன்ஸ்பெக்டர் சூர்யாவிடம் “ க்ளு கிடைச்ச சில மணி நேரத்திலேயே, அதைக் கண்டு பிடிச்சு உன் புத்திக் கூர்மையை பாராட்டுறேன். மேலும் உனக்கு அரசிடம் இருந்து வெகுமதி வாங்க முயற்சி செய்றேன் “ என்று அவனுக்கு ஊக்கம் கொடுத்தார்.
மேலும் பத்திரிக்கையாளர்களும் சூர்யாவை போட்டோ எடுத்து விட்டு, அவனிடம், “எப்படி இதைக் கண்டு பிடிச்சீங்க?” என்று கேட்க, சூர்யா, தனக்கு துப்பறிய வந்த ஆசையையும், அதை துப்பறிவாளர் அருணன் அண்ணனிடம் வந்து சொல்லவும், அவர் கொடுத்த வாய்ப்பு மூலம் இதைக் கண்டு பிடித்தேன்,”என்று உணர்ச்சி பொங்க சொன்னான்.
மேலும் தன்னுடைய துப்பறியும் ஆசை நிறைவேறியதற்கு அருணனுக்கு மனமார நன்றி சொல்லி விட்டு வீட்டுக்கு சென்றான்.
எழுத்தாளர் மகாராஜா பரமேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings