in ,

ரெண்டு மூணாச்சு (சிறுகதை)- சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இந்த தடவை தீபாவளிக்கு பட்டுப்புடவையெல்லாம் வேண்டாம்னு சுசிலா டிக்ளேர் பண்ணினா

“யார் சொன்னா பட்டுப் புடவை வாங்கப் போறதா?”

“சொன்னாதானா. ஒவ்வொரு தடவையும் நீங்க ஆசையா வாங்கித் தருவீங்களே”

“அம்மா பரதேவதை அது 10 வருஷம் முன்னாலே, இப்ப ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு, ஆசையா ஏதாவது வாங்கப் போனா ரெண்டு மூணாயிடும்.”

“அய்யே பேச்சைப் பாரு, இப்பல்லாம் நீங்க என்கிட்ட பழைய மாதிரி பிரியமாவே இருக்கறதில்லை, க்கும்”

“அம்மா என் சுசீ செல்லம், இப்படி ஆரம்பிச்சு மெதுவா மகாபாரதம் ஸ்டார்ட் ஆயிடும் விட்டுடுடா கண்ணா எனக்கு சக்தி இல்லை”

“ஆமாம் உங்கம்மா கேக்காமயே வழிஞ்சு வழிஞ்சு ஒரு ஜாண் ஜரிகை போட்டு புடவை எடுப்பீங்க வருஷா வருஷம்.நான் எதுவும் கேக்காதப்பவே மகாபாரதம், ராமாயணம்னு வாயை அடைச்சிடுவீங்க”

“அதில்லைப்பா, சரி இப்ப என்ன பண்ணணும்ன்றே”

“கமலா ஒரு புது டிசைன் நெக்லஸ் பண்ணி போட்டுட்டு வந்து மினுக்கறா எனக்கும் அதை விட உசத்தியா நெக்லஸ் வேணும்”

“என்னது நெக்லஸா…தங்கத்துலயா?”

“பின்ன என்ன தகரத்துலயா பண்ணுவாங்க”

“டி.வி.ல நியூசைப் போடு தங்கம் விலையைப் பாரு, வாங்கற மாதிரியா இருக்கு”

“அமெரிக்க ஜனாதிபதி எலக்‌ஷனுக்கப்பறம், டொனால்ட் டிரம்ப் வந்து நமக்காகவே தங்கம் விலையை ஏகத்துக்கு குறைச்சிட்டார்னு கமலா சொன்னாளே”

“அடிப்பாவி அவர் எப்படிடீ தங்கம் விலையை குறைக்க முடியும், சுரங்கத்தையா திறந்து விட்டார்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது தீபாவளிக்கு 4 பவுன்ல நெக்லஸ்தான் வேணும், அதான் பட்டுப் புடவை வேண்டாம்னாச்சே அப்பறம் என்னவாம்”

ஹோண்டா கார் இனிஷியல் டிபாசிட் பண்ண வச்சிருந்த பணம் VRS தங்க மாளிகைக்குப் போய் சேந்தது. சுசிலா சிரிச்சா. ஆமாம்பா மூணாச்சு அதுக்கென்ன நாங்கதானே வளக்கப் போறோம்.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா என்றால் அன்பு (சிறுகதை) – சுஶ்ரீ

    எழுத்துக்கு மரியாதை (சிறுகதை) – சுஶ்ரீ