எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்னுடைய நெருங்கிய உறவில் மாமா மகள் திருமதி. கோமதியின் வாழ்க்கை அனுபவங்களையும் அவளுடைய மனம் திறந்த வாழ்க்கை பற்றிய அவளது எண்ணங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.
மிகவும் இளம் வயதிலேயே திருமணம் ஆகி மறுவருடமே ஒரு குழந்தைக்குத் தாயும் ஆனவள். கலகலப்பான ஆனால் கண்டிப்பான குடும்பம். உறவுகளும் நட்புகளும் என்று தினமும் கல்யாண வீடாக வாழும் இல்லம். அவளுடைய துணைவரும் என் அம்மாவின் சகோதரன் தான்.
ரயில்வேயில் மிகவும் பொறுப்பான உயர்ந்த பதவியில் இருந்தவர். இனிமையாக பேசுவதும் பழகுவதும் இயல்பாகவே கடைப்பிடித்தவர்.
திருமதி கோமதி கனகசபாபதியின் எண்ணங்கள் இன்றைய தலை முறைப் பெண்களுக்கு ஒரு பாடமாகும். மகளிர் தினம் கொண்டாடும் நாம் நம் முன்னோடிகளாக விளங்கும் மாதர்களின் அனுபவங்களையும் உணர்ந்து புரிந்து வாழ்வோம்!
வாழ்க்கை வாழ்வதற்கே!!( கோமதி கனகசபாபதி)
எனக்கு வயது இப்போது எழுபத்து ஐந்து.நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு அரசு உயர் அதிகாரியின் மிடில் கிளாஸ் குடும்பத்தில் நான்கு உடன் பிறப்புகள் உடன் சந்தோஷமான வாழ்க்கை.குதூகலமான இளமைப் பருவம்.
அடுத்ததாக பெற்றவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்க மகிழ்ச்சியாக போனது வாழ்க்கை .புகுந்த இடமும் மிடில் க்ளாஸ் தான் என்றாலும் பெரிதாக கவலையோ கஷ்டமோ இல்லாத வாழ்க்கை.
என்னுடைய கணவர் இரயில்வே துறையில் கடமை தவறாத மற்றவர்களுக்கு உதவி புரியும் தன்மையுடையவராக, தன்னலமற்ற வராக விளங்கியவர் என்று கூறுவதில் எனக்குப் பெருமைதான். அவரின் அப்பா அம்மா சகோதர சகோதரிகளுடன் மிகவும் இயல்பாக போன வாழ்க்கை.
பள்ளிப் படிப்பையே முடிக்காத எனக்கு புகுந்த வீட்டினர் தோழமை உணர்வுடன் ஆசானாகவும் இருந்து பல விஷயங்களைப் புரிய வைத்தார்கள். அவருடைய அலுவல் காரணமாக பல இடங்களும் சென்று வந்ததில் கற்றுக் கொண்ட அனுபவ பாடங்கள் அதிகம்.
எல்லா நிலைகளிலும் உள்ள மனிதர்களைப் பார்க்க , பேச , பழக, உதவ என்று பல விதங்களிலும் வாழ்க்கை கற்றுக் கொடுத்தது. என்னவர்தான் கடமை தவறாதவர் ஆயிற்றே! குடும்பம் எப்போதும் இரண்டாம் பட்சம்தான்.
எங்களுடைய ஒரே மகன் தந்தையைப் போலவே நல்ல குணங்களுடன் உதவி செய்யும் மனப்பான்மை, உயரிய படிப்பு , நல்ல வேலை என்று வாழ்க்கையை மேலும் மெருகூட்டினான்.
இறைவன் அருளால் அவனுக்கும் நல்ல துணைவி அமைந்தாள். ஒரே பேரன் நல்ல விதமாக படித்து எங்களைப் பெருமைப் படுத்துகின்றான். எங்கள் குடும்பம் எப்போதுமே கூட்டுக் குடும்பம் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகவும் பெருமைதான்.
சுழல்கள், பிரச்சினைகள் இல்லாமல் இல்லை என்றாலும் எல்லோருமே எளிதாக கடந்து செல்லும் மனதை உடையவர்களாக இருந்தோம்.
மனநிறைவோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் . இதை விட வேறென்ன வேண்டும்! எங்கள் வாழ்க்கையை , நேசத்தை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
எல்லோரும் நலமாக வாழ வாழ்த்து கூறுவதுடன் நிறைவான வாழ்க்கை அமையும் போது 75 என்ன, நூறையே தொட்டு விடலாம் என்றும் மனப்பூர்வமாக கூறுகிறேன். வாழ்த்துக்கள்!!
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings