in , ,

இதயமடி நீ எனக்கு (இறுதி அத்தியாயம்) – பு.பிரேமலதா, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவு

முதல் மகிழ்ச்சியான செய்தி பதிப்பாசிரியர் ஆறுமுகம் சார் கூறுவார். கயல் இன்று உனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. “சிறகுகள்” நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளாய். உன்னுடைய உழைப்புக்கும், நேர்மைக்கும் சன்மானம் இது.

என்ன பார்க்கிறாய் கயல், எனக்குள் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தை தானே தேடுகிறாய். இரண்டு நாள்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை பேருந்து விபத்தில் இருந்து காப்பாற்றினாயே அது என்னுடைய குழந்தை தான். அதை கேள்விப்பட்டவுடன், நேரடியாக உன்னுடைய வீட்டிற்கு சென்று, உன் அம்மாவை சந்தித்து பேசினேன்.

இப்படிப்பட்ட பெண்ணை, மகளாக அடைந்ததற்கு நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அவளுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் என் குழந்தையை காப்பாற்றி இருக்கிறாள். நான் தான் புரிந்து கொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பலமுறை கயலின் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டேன். மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோரினேன்.

ஆறுமுகம் சார் உங்கள் குழந்தையை காப்பாற்றியது என் கடமை. நான் தான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நன்றியுள்ளவளாக இருக்க வேண்டும். என் அம்மாவின் பாசத்தை எனக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறீர்கள். இதை விட பெரியது உலகில் எது.

தூணிற்கு பின்னிருந்து ஒரு பெரிய மலர் கொத்தோடு வந்து, கயலின் கையில் கொடுத்து, வாழ்த்துக்கள் கயல். பத்திரிகைத் துறையின் மிக உயரிய விருதான “புலிட்சர் விருது” உன்னுடைய புத்தகமான The Tribes of India (The Bangaras-Bihar) என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது என்றேன்.

கயல் ஆச்சர்யத்தோடு, மதி என்ன கூறுகிறாய்? என்னுடைய புத்தகமாக? நான் எப்போது வெளியிட்டேன்.

நானே அதைப்பற்றி விளக்கம் கொடுக்கிறேன். “புலிட்சர் விருது” பற்றியும் கூறுகிறேன், அனைவரும் கேளுங்கள். ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. யார் வேண்டுமானாலும், இதற்கு பதிவு செய்யலாம்.

Online-ல் படிவம் நிரப்பி 50 டாலர் நுழைவுப் பணமாக கட்ட வேண்டும். “புலிட்சர் விருது” 21 விருதுகளாக ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படுகிறது. 14 விருதுகள் பத்திரிக்கை துறைக்கும், 6 விருதுகள் எழுத்திற்கும்,  1 விருது இசைக்கும் கொடுக்கப்படுகிறது.

கயலுக்கு Public Service categoryயின் கீழ் இவ்விருது கொடுக்க பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. பீகாரில் வசிக்கும் பஞ்சாரஸ் என்று அழைக்கப்படும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், மருத்துவ முறைகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள், அரசானது கொடுக்க தவறிய சன்மானங்கள், அரசு, பழங்குடியினருக்கு செய்ய வேண்டியவை என்று ஒட்டு மொத்த பழங்குடியினரின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் கடந்த இரண்டு வருடத்தை செலவழித்து தொகுத்து வைத்திருந்தார்கள்.

பல பழங்குடியினரை நேரில் சந்தித்து, தகவல்களை திரட்டி, அங்கே தங்கி முழுவதுமாக அவர்களின் தேவைகளை ஆராய்ந்து, அதை தீர்க்க வழிவகை செய்தார்கள். அதற்கான அனைத்து குறிப்புகளையும் தோழி தமிழ்செல்வியிடம் இருந்து பெற்று, அதில் தேவையான புகைப்படங்களை என்னுடைய முயற்சியால் இணைத்து புலிட்சர் விருதுக்கு அனுப்பி வைத்தேன்.

கயலின் திறமைக்கும், நேர்மைக்கும் பரிசாக, புலிட்சர் விருது கிடைத்துள்ளது. அனைவரும் சேர்ந்து பலத்த கரவொலி எழுப்பி நம் வாழ்த்தை தெரிவிப்போம். இன்னொரு சிறப்பான, மகிழ்ச்சியான செய்தி, என் அன்புத் தோழி கயல்விழிக்கு இன்று பிறந்த நாள். நம் வாழ்த்துகளை மலர்தூவி வெளிப்படுத்துவோம்.

கயல் இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளிவரவில்லை, ஓடி வந்து என்னை கட்டித் தழுவி அணைத்துக் கொண்டாள்.

கயல் என்னை தழுவிய அந்த நிமிடத்தில் நான் உறைந்து போனேன். எனக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஓர் உணர்வு. அவளுடைய முகத்தில் நான் பார்த்த புன்னகை, இந்த உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும் ஈடாகாது. எனக்குள் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் போல் ஓர் உணர்வை இதுவரை நான் அனுபவித்ததில்லை.

எல்லாவற்றையும் அவளுக்காக செய்தாலும், தோழியாக அவளை வெளியில் சொல்லிக் கொண்டாலும், அவள் என் இதயமாகவே இருந்திருக்கிறாள் என்பதை  இத்தருணத்தில் தான் நான் உணர்ந்து கொண்டேன்.

மதி, பள்ளிப்பருவத்தில் என்னோடு நீ இருந்த நாள்கள் என் வாழ்வில் மறக்க முடியாத சந்தோஷங்கள். மீண்டும் அந்த மகிழச்சியான நினைவுகளை திரும்ப வந்து கொடுத்திருக்கிறாய். என் கைகளை அவள் கன்னங்களில் ஒத்திக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் உன்னோடு கூடவே இருக்க எனக்கு வாய்ப்பு கொடுப்பாயா? என்றாள்.

விழிகள் நோக்காமல், நெடுநேரம் பேசாமல், நினைவுகளோடு வாழ்ந்து, மகிழ்ச்சியில் இணைந்து காதலில் திளைப்பதை உணர்ந்தோம் எங்களுக்குள்.

“மூச்சுக்காற்றாய் நான், உன்னை நேசிக்கிறேன். புன்னகைகள் கண்ணீருடன் என் வாழ்நாள் முழுவதும் கடவுள் விரும்பினால் மரணத்திற்குப் பிறகு நான் உன்னை மேலாக நேசிப்பேன்” என்ற வரிகளின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் என்னுள் உணர்ந்தேன்.

கயல்விழியை இப்போதே வீட்டிற்கு கூட அழைத்து சென்று விட ஆசையாகத் தான் இருந்தது. விரைவில் என் வீட்டில் கயல்விழி இருப்பாள் என்ற நம்பிக்கையோடு, மூச்சு விட கூட இடம் தராமல் இறுக அணைத்துக் கொண்டேன்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                                                                  

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 9) – பு.பிரேமலதா, சென்னை

    தூக்கணாம் குருவியும் மின்மினிப் பூச்சிகளும்…! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M