in ,

முள் பாதை (அத்தியாயம் 2) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1

தன் குடும்ப நிலைமையையும், இன்று தனக்கு நடந்த நிகழ்வினையும் நினைத்து, சத்தம் போடாமல் மனதிற்குள்ளே அழுகிறாள்.

அவள் இன்று நடந்த நிகழ்வுகளை கூறி, தன் அப்பாவையும், தம்பியையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. தன் உடலில் ஏற்பட்ட லேசான காயங்களையும் மறைத்துக் கொண்டாள்.

இனி யாரையும் நம்பக்கூடாது. நாம் உண்டு நம் வேலை உண்டு, என்று இருக்க வேண்டும்,  என எண்ணினாள்.

செண்பகம், இவளது அப்பா, தம்பி என மூவரும் உணவினை சாப்பிட்டு முடித்த பிறகு தூங்க செல்கின்றார்கள்.

செண்பகத்திற்கு,  தூக்கமே வரவில்லை. ஒரு பக்கம் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி, மறுபக்கம் மனதில் ஏற்பட்ட காயங்களின் வலி.

மறுநாள் காலை விடிந்தது. தன் வீட்டை பெருக்கினாள், உணவு சமைத்தாள், தன் வேலைகள் அனைத்தும் முடித்து கொண்டு, அப்பாவிடமும், தம்பியிடமும் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றாள்.

போகும் வழியில் செருப்பு கடையில்,  மலிவான விலையில் ஒரு செருப்பு வாங்கி அணிந்து கொண்டாள்.

வேகமாக நடந்து, தான் வேலை செய்யும் நிறுவனத்திற்குள் சென்றாள்.

அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து கொண்டிருப்பவர் புவனேஷ். இவனுக்கு வயசு 25. இவனைப் பார்த்தால் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் போல் தான் தெரிகிறது. ஏனெனில், அவனது உடை, அலங்காரம், தோற்றம் பார்த்தாலே சொல்லிவிடலாம், இவன் பணக்காரன் என்று.

இவனுக்கு செண்பகத்தின் மீது ஒரு கண்ணு.சொல்லபோனால், செண்பகத்தை இவன் காதலிக்கிறான். ஆனால் அதை அவளிடம் சொல்லதான் பயம்.

புவனேஷ் இன்று ஒரு முடிவாக தான் இருக்கின்றான். என்ன ஆனாலும் சரி, இன்று அவளிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறான்.

வேலை செய்து கொண்டிருந்த செண்பகத்திடம் செல்கின்றான்.

இவனை பார்த்த செண்பகம்,

“வணக்கம் சார்”

ம்ம்ம் வணக்கம். செண்பகம் உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும். அது எப்படி சொல்றதுன்னு தான் தெரியல.

நீங்க சூப்பர்வைசர். நான் உங்களுக்கு கீழ வேலை செய்யக்கூடிய ஒரு பெண். என்கிட்ட சொல்றதுக்கு எதுக்கு சார் தயக்கம். நீங்க என்ன சொன்னாலும் அதை, நான் செஞ்சு தான் சார் ஆகணும். என்று செண்பகம் கூறுகிறாள்.

புவனேஷின் கண்கள், செண்பகத்தின் இரு கண்களை மட்டுமே பார்க்கிறது.

அவன் கண்ணைப் பார்த்தாலே சொல்லிவிடலாம், செண்பகத்தின் மீது அவன் கொண்டுள்ள காதலை!

“செண்பகம், நான் உன்னை” என சொல்லும் போது,

புவனேஷ் சார் உங்கள மேனேஜர் கூப்பிடுகிறார், என்று ஒரு பணிப்பெண் கூறினாள்.

“நல்ல நேரம் பார்த்து தான் கூப்பிடுகிறார்” என்று, மனசுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறான்.

செண்பகத்திற்கு, புவனேஷ் தன்னிடம் என்ன சொல்ல வந்தான் என்று தெரியும். போகும்போதும் வரும்போதும் புவனேஷ் தன்னை பார்ப்பதும், தன்னிடம் ஏதோ சொல்ல வருவதும் அவளுக்குத் தெரியும்.

இவள் மனதிலும் புவனேசுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தாலும், தன் வீட்டு சூழலை நினைத்து,  தனது உணர்ச்சிகளுக்கு தடை போட்டாள்.

புவனேசுக்கு தெரியாமல் அவனை, இவள் பல நேரங்களில் ரசித்து இருக்கிறாள். ஆனால் மறுகணமே தன் குடும்பத்தை நினைத்து, தனது ஆசைகளுக்கு வேலி போடுவாள்.

காதல் என்னும் வலையில் சிக்கி கருவாடாய் போவதை விட!

இருப்பது  சிறிய குளமாக இருந்தாலும், அதில் மகிழ்ச்சியாக வாழலாம்! என்று நினைத்தாள்.

கடவுளே! இந்த காதல் கத்திரிக்காய் என் வாழ்க்கையில வரவே கூடாது என்று வேண்டினாள்.

என்னதான் வேண்டினாலும், மீண்டும் மீண்டும் அவள் மனம், அவனையே நினைத்திருந்தது.

மேனேஜர் அறையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் செண்பகம். அந்த நேரத்தில் மேனேஜர் அறைக்கதவு திறக்கப்படுகிறது. உள்ளிருந்து புவனேஷ் வெளியே வருகிறான்.

இவ்வளவு நேரம், மேனேஜர் அறையை பார்த்துக் கொண்டிருந்த செண்பகம், புவனேஷை பார்த்ததும் தன் வேலையை செய்ய தொடங்குகிறாள்.

செண்பகம் தன் மனதிற்குள்,  புவனேஷ் தன்னிடம் வந்து பேசுவார் என்று நினைத்தாள். அவளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மேனேஜர் அறையிலிருந்து வெளியே வந்த புவனேஷ், தனது அறைக்கு வேகமாக சென்றான்.

நான் செய்வது சரியா? தவறா?

எதற்காக என் மனம் அவரையே நினைக்கிறது என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாலும், அவனின் நினைவே மீண்டும் மீண்டும், அவளது மனதில் தோன்றியது.

மாலை 6:00 மணியானது. வேலை நேரம் முடிந்ததால்,  தனது வீட்டிற்கு அனைவரும் கிளம்பினார்கள். செண்பகமும் தன் வீட்டிற்கு கிளம்பும்போது,

“செண்பகம் உன்னை சூப்பர்வைசர்  கூப்பிடுறாரு என்னன்னு கேட்டு வந்துருங்க” என்று ஒரு பணிப்பெண்  கூறினாள்.

இவள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அதை முகத்தில் காட்டவில்லை.

சூப்பர்வைசர் அறைக்கு சென்றாள். ” உள்ளே வரலாமா சார்..”

“ம்ம்ம் வாங்க சென்பகம்”

“எதுக்கு சார் என்ன வர சொன்னிங்க”

“அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே செண்பகம்”” என்று கூறி ஒரு துணிப்பையை கொடுத்தான்.

“நன்றி சார்” என்று கூறி அந்தத் துணிப்பை வாங்கினாள். அதற்குள் மயில் பச்சை நிறத்தில் ஒரு சேலை இருந்தது.

“நல்லா இருக்கு சார். சேலை உங்க அம்மாவுக்கு எடுத்திங்களா” என்று கேட்டாள்.

நான் எங்க அம்மாக்கு சேலை எடுக்கல, உனக்கு தான் எடுத்தேன்.

எனக்கு எதுக்கு சார் நீங்க எடுத்து தரணும்?  என்று கேட்டாள்.

புவனேசுக்கு இப்ப என்ன சொல்றதுன்னு கூட தெரியல.

“உனக்கு நாளைக்கு பிறந்தநாள். அதனால, உனக்கு ஒரு சின்ன பரிசு”

எனக்கு நீங்க எதுக்கு சார் பரிசு வாங்கி தரணும்?  இங்க வேலை செய்றவங்க எல்லாருடைய பிறந்தநாளுக்கும், நீங்க பரிசு வாங்கி தரீங்களா சார்? நீங்க சூப்பர்வைசர்,  நான் உங்களுக்கு கீழ வேலை செய்ற பொண்ணு. உங்க மனசு கஷ்டப்படக்கூடாது,  என்று நீங்க தந்த இந்த பரிசு நான் வாங்கிக்கிறேன். ஆனால், இதுக்கு அப்புறம் இதுபோல பரிசு தருவதை நிறுத்திக் கொள்ளுங்கள் சார். உங்க பரிசுக்கு ரொம்ப நன்றி. என்று சொல்லி அங்கிருந்து சென்றாள்.

செண்பகம் பேசிய வார்த்தைகள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும்,  தான் தந்த பரிசை அவள், வாங்கியது இவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

வெளியில் தனக்குப் பிடிக்காதது போல் நடித்தாலும், செண்பகத்திற்கு, புவனேஷ் மீது காதல் உருவானது.

அவள் நாளை நான் வாங்கித் தந்த சேலையை கட்டிக் கொண்டு வருவாளா? அப்படி அவள் வந்தால், அவள் மனசில் நான் இருப்பதாகத்தான் அர்த்தம், என்று தனக்குள் நினைத்தான் புவனேஷ்.

அன்பே  என் பேரன்பே என்று தன் மனம் முழுதும் நிரம்பிய தன் காதலியின் நினைவிலே மூழ்கிருந்தான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைவுகள் ஓய்வதில்லை (சிறுகதை) – தி .வள்ளி, திருநெல்வேலி

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 18) – முகில் தினகரன், கோவை