2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மளிகை பொருட்கள் வாங்க கடை வீதிக்கு நடந்தான் பாலாஜி.
வழியில், கோவில் வாசலில் ஆறு பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து, அவர்கள் அருகில் சென்றான்.
“உங்களுக்கெல்லாம்! என்ன வாங்கி கொடுத்தால் சாப்பிடுவீங்க?”என்று கேட்டான்.
“உனக்கு எதுக்கய்யா சிரமம், கஷ்டம்? பணம் மட்டும் கொடு! நாங்க எங்களுக்கு தேவையான சாப்பாடோ, டிபனோ வாங்கி சாப்பிட்டுகிறோம்” என்றார்கள் பிச்சைக்காரர்கள்.
“பணத்தை கொடுத்தா சாப்பிடாம இருந்துடுவீங்க! சாப்பாடே வாங்கி தரேன்” என்றான் பாலாஜி
“நீங்க எல்லாருக்கும், முழுசாப்பாடு வாங்கி கொடுங்க.” என்றான் பிச்சைக்காரர்களில் ஒருவன்.
பாலாஜி, உணவகம் சென்று, பிச்சைக்காரர்கள் கேட்ட ஆறு முழு சாப்பாடு மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு, பிச்சைக்காரர்களிடம் கொடுத்தான்.
”எங்களிருந்தோ, ஹீரோ மாதிரி வந்து எல்லாருக்கும் அன்னதானம் செய்ற! உன் நல்ல மனசுக்கு, நீயும், உன் குடும்பமும் நல்லா இருக்கணும்!” என்று பிச்சைக்கார்கள், பாலாஜியை வாழ்த்தினார்கள்.
“தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்! அன்னதானம் செய்றது, பத்து கங்கை நதியில் குளிச்சிதற்கு சமம். நாம செஞ்ச பாவம் எல்லாம் கரையும். ஒரு பெரிய மன நிறைவு, சந்தோசம் கிடைக்குதில்ல! அதனால தான் உன்னை அன்னதானம் செய்ய சொன்னேன்”என்று அவனது அம்மா சொன்னபோது, மன நிறைவு ஏற்பட்டது பாலாஜிக்கு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings