2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
ஒரு நிமிடம் நான் என்ன செய்கிறான் என்று புரியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் ஆதி.
நான் வாந்தி எடுத்து தள்ளாடி நிற்க என்னருகே ஓடி வந்தார்.
“என்னாச்சு கவி” பதட்டமாக கேட்டான்
“முடில.. ஒரு மாதிரியா இருக்கு”
இந்த சமயத்தில் இளநீர் கடை அக்காவும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கடைக்குப் பக்கத்திலேயே மண் தரையில் வாந்தி எடுத்து விட்டேன்.
“அக்கா மாசமா இருக்கா.. மூணு மாசம்.. அதான்”
அதுவரை சற்று கோவமாக இருந்த அவர் முகம் ஆதி இப்படி கூறியதும் மெல்ல கனிந்தது.
“இங்க பெஞ்ச் இருக்கு.. ரெண்டு நிமிஷம் உக்காருமா.. வெறும் வயித்துல குடிச்சியா..”
ஆமாம் என்பது போல் தலை அசைத்து விட்டு அமர்ந்தேன்.
“புளிப்பா சாப்புடு.. கொமட்டல் குறையும்” அந்த அக்கா இப்படி கூறியதும் மாங்காய் சாப்பிட ஆசை வந்தது. ஏதோ புரிந்தது போல் ஆதியும் என்னைப் பார்த்தார்.
“மாங்காய் நெல்லிக்காய் அப்படி சாப்பிட்டா நல்லாருக்கும்ன்னு எனக்கும் தோணுது”
“வாங்கிட்டு வரேன்”
“சரிங்க”
இரு நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு கிளம்பினோம்.
நான் வாந்தி எடுத்ததை வீட்டிற்கு வந்து அத்தை மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குச் சோர்வாக இருந்தது. நான் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டேன். அத்தையும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை.
தூங்கி எழும்பொழுது மணி மதியம் ஒன்று. எழுந்து ஹாலிற்கு வந்தேன்.
“எழுப்பலாமா வேணாம்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். அசந்து தூங்கிட்ட போல”
“ஆமா ஆதி நல்ல தூக்கம்”
“சாப்பிடு கவி.. இன்னும் நீ எதுமே சாப்படல”
“சாப்பாடு போடவா” ஆதியும் அத்தையும் சாப்பிட சொன்னார்கள்.
“சாப்பிடவே தோணல”
“எதாவது சாப்பிடணும்ல.. வெறும் வயிராவா இருப்ப”
“என்ன சாப்பாடு அத்தை”
“சாப்பாடு பருப்பு சாம்பார் ரசம் பொரியல்”
“எனக்கு பருப்பு நினைச்சாவே கொமாட்டுது அத்தை”
“காலைல இட்லி தக்காளி கொழம்பு வெச்சேன் அது சாப்ட்றியா”
“சரிங்க அத்தை.. தப்பா எடுத்துக்காதிங்க”
“இல்லை எனக்கு புரியுது மா.. எனக்கும் அப்போல்லாம் குக்கர் சவுண்ட் வரும் போது கொமட்டும். கொழம்பு வாசனை பருப்பு வாசனை வந்தாலே வாந்தி வரும்.. அதெல்லாம் தாண்டி தான வந்துருக்கேன்”
இரண்டு இட்லியை வெகு நேரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆதி அதற்குள் கடைக்குச் சென்று மாங்காய் மற்றும் நெல்லிக்காய்களை வாங்கி வந்திருந்தார்.
“மாங்காயா.. எனக்கா” சந்தோசமாக உள்ளே சென்று உப்பு மிளகாய் தூளை கலந்து கொண்டு வந்து சாப்பிட்டேன். முதல் வாய் புளிப்பாக இதமாக இருந்தது. ஆனால் அடுத்தது சாப்பிடும் பொழுது அதுவும் பிடிக்காமல் போனது.
“ஆதி ஈவினிங் ஒரு கல்யாணத்துக்கு போணும் சொன்னல்ல.. நானும் வரவா”
“அவ்ளோ சீக்கிரம் நீ கல்யாணத்துக்கு வர மாட்டியே.. இப்போ என்ன திடிர்னு”
“தோணிச்சு.. ட்ரெஸ் பண்ணிக்கனும்.. வெளிய வரணும் தோணிச்சு.. அங்க சாப்பாடும் வரைட்டியா இருக்கும்ல”
“இருக்கும் நீ சாப்டுவியா..”
“நைட்ல கொமட்டல் இருக்காது பாப்போம்”
“ஓகே கவி.. அப்பாவோடு ப்ரண்ட் பொண்ணு.. அதனால அப்பா அம்மாவும் வருவாங்க.. நாலு பெரும் போலாம்”
“ம்ம்.. வரேன் ஆதி”
புடவை கட்டி பூ வைத்து நிதானமாக ஆனாலும் சீக்கிரமே தயாராகி காத்திருந்தேன். ஆதி வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். அவருக்கு அது மிகவும் அழகாக இருந்தது. இன்னொரு நிமிடம் கூடுதலாக கண் அசைக்காமல் பார்த்தேன். அத்தை மாமாவும் தயாராகிவிட நால்வரும் மண்டபத்திற்குக் கிளம்பினோம்.
எனக்கு இது போன்ற விஷேசங்களில் கலந்து கொள்ள ஆசை தான். சில சொந்தக்காரர்கள் தேவையற்ற கேள்வி கேட்பதால் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவேன்.
இன்று ஏனோ கூட்டமான மக்களை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
மணமகனும் மணப்பெண்ணும் மேடையில் நின்று கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு இருவரும் மிக இளமையாக இருந்தனர். இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது ஐந்து வயதிற்குள் தான் இருக்கும். காதல் திருமணம் என்று ஆதி கூறினார். அதனால் இருவருக்கும் ஒரே வயது தான் இருக்கும்.
பரவாயில்லை இப்பொழுதெல்லாம் நிறைய காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. பெற்றோர்கள் அதை இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர்.
எங்கள் திருமண நிகழ்வும் ஒரு நிமிடம் நினைவில் வந்து போனது.
மணமக்கள் இருவரும் சிரித்த முகத்தோடே இருந்தனர். போட்டோ எடுக்க சிரிக்கச் சொல்லி வற்புறுத்த தேவையில்லை. இருவர் முகத்திலும் கல்யாண சோர்வே இல்லை. மகிழ்ச்சி வழிந்தோடியது.
இசை காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.மெல்லிசை ஆகத்தான் இருந்தது. சில பாடல்களை வீட்டில் தனியாக உட்கார்ந்து கேட்டால் பிடிக்காது. இப்படி சபையில் இடம் முழுவதும் நிறைந்த சத்தத்தில் கூட்டமாக உட்கார்ந்து கேட்பது எனக்கு எப்பொழுதும் பிடிக்கும். அதுவும் இன்று சிரித்த முகத்தோடு இருக்கும் மணமக்கள், நிரம்பி இருந்த நண்பர்கள் கூட்டம் எனக்குள் இருந்த மகிழ்ச்சியை இன்னும் மெழுகேற்றியது.
இரண்டாம் பந்தியில் சாப்பிட அமர்ந்தேன். பாதி தென்னிந்திய உணவும் பாதி வட இந்திய உணவும் பரிமாறின.
குளோப் ஜாமூனை முதலில் ருசித்தேன். நாணுடன் பன்னீர் பட்டர் மசாலாவை ருசித்தேன். எப்பொழுதும் பிடிக்கும் சுவை இன்று பிடிக்கவில்லை. தெகட்டியது. இன்னொரு வாய் வைத்தேன் கொமட்டியது. அதற்கு மேல் அதை சாப்பிடாமல் இட்லி கேரட் ஆனியன் தோசையை சாப்பிட்டேன். காலிஃப்ளவர் சில்லியில் ஒன்று கட்லட்டில் ஒரு வாய் இன்னும் கூட மேல் இலையில் என்னனவா வைத்திருந்தனர். அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் இலையை மூடினேன்.
கை கழுவும் இடத்தில் ஐஸ்கிரீம், பழங்கள் மற்றும் காபி இருந்தன. பழங்கள் வாங்கி உண்டேன். ஆதி சாப்பிட வாங்கிய ஐஸ்கிரீமில் ஒரு வாய் எடுத்துக்கொண்டேன். அது என்னவோ வேண்டாம் என்று ஒரு மனம் சொல்ல வேண்டும் என்று இன்னொரு மனம் அடம் பிடிக்கிறது.
மறுபடியும் வந்து இரண்டு பாடல்கள் கேட்டேன். அப்பொழுது அத்தையின் சொந்தகாரர் ஒருவர் என்னருகே வந்தார்.
“இதான் மருமகளா.. ஏதாவது விஷேசமா”
“ஆமாங்க.. மூணு மாசம்” முதல்முறையாக என் அத்தை வெளி நபர் ஒருத்தரிடம் இதை கூறினார்.
“அப்படியா வாழ்த்துக்கள்” என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார்.
“நானும் கொஞ்ச நாள் கழிச்சி இதெல்லாம் சொல்லிக்கலாம்னு தான் நினைச்சேன் கண்ணு.. அவளே கேக்கற வயித்துல புள்ளைய வெச்சிட்டு எப்படி இல்லன்னு சொல்றது.. அதான் சொல்லிட்டேன்” அவர் சென்றபின் அத்தை என்னிடம் கூறினார்.
“பரவாலைங்க அத்தை”
“இதுக்கு தான்மா அவளும் ஆசை பட்ற.. அதுக்குத்தான் கல்யாணத்துக்கு வந்துருக்கா” கிண்டலாக கூறினார் ஆதி.
அத்தையோடு சேர்ந்து நானும் சிரித்தேன்.
“நல்லா சிரி.. மண்டே செக்அப் இருக்கு.. பிளட் டெஸ்ட் எடுக்கணும்”
“பிளட் டெஸ்ட்டா!”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings