2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
“ஆதி.. இன்னிக்கு நான் என்ன பண்ணேன் தெரியுமா”
“என்ன கவி”
“நான் வாமிட் பண்ணிட்டேன்”
“கொமட்ற மாதிரி இருக்குனு சொல்லுவியே.. அதுவா”
“இல்லை.. பாவக்காய் கொழம்பு சாப்பிட்டேன்.. சாப்பிட சாப்பிட குமட்டல் தாங்கவே முடில.. அப்புறம் வாந்தியே வந்துடுச்சு.. சாப்பிட்டதெல்லாம் எடுத்துட்டேன்”
“பரவால்ல.. எனக்கு ஏன் இன்னும் வாமிட் வரலன்னு கேட்டுட்டே இருந்த.. இப்போ சந்தோசமா”
“ரொம்ப சந்தோசம்”
“இப்போலாம் சந்தோசமா தான் இருக்கும்.. எதுமே சாப்பிட முடியுமா.. வாய்கிட்ட எது கொண்டு போனாலும் கொமட்டும். உடம்பே சோர்வாயிடும் அப்போ தான்டி தெரியும் உனக்கு” பின்னாலிருந்து அம்மா கூறினார்.
“அதெல்லாம் பாத்துக்கலாம் மா”
“இந்த வாரம் நல்ல மழை இருக்காம்.. பாத்து போய்ட்டு வா” அலைபேசியில் இணைப்பில் இருந்த ஆதி கூறினார்.
“ஆமா.. இங்கயும் தூறல்.. டிசம்பர்னா இப்படி மழை வரணும்ல..”
“நீ நினையாம போ.. காலை ஊனி வை.. பாத்து நடை..”
“பத்திரமா இருக்கேன் ஆதி”
அடுத்த நாள் கனமழை பெய்தது.
காலையில் கிளம்பும் பொழுது தூறல் தான் இருந்தது.
என் குழந்தையோடு நனையும் முதல் மழை. மகிழ்ச்சியோடு மழையை ரசித்துக் கொண்டே கிளம்பினேன். மண் வாசனை. தொடர்ந்து தூறல் தூறியதில் காற்றில் ஒரு குளுமை.
அலுவலகத்திலும் வேலையே ஓடவில்லை. மந்தமான சூழல் நிரம்பி இருந்தது. வானத்தின் கருமை அத்தனை மின் விளக்கு வெளிச்சத்தையும் தாண்டி சுற்றுப்புறத்தை மங்கச் செய்து இருந்தது.
சாயுங்கலாம் ஐந்து மணி. வேலை முடிந்து ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினார்கள். வெளியில் வந்து பார்த்தேன். இன்னும் தூறல் இருந்தது. காலையில் பெய்த அளவை விட சற்று அதிகமாக இருந்தது. தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
அரைமணி நேர வேலை இருந்தது. சரி தூறல் குறையும் என்ற நம்பிக்கையில் நானும் வேலைகளைத் தொடர்ந்தேன்.
அப்பாவை இந்த மழையில் எப்படி வரச் சொல்வது அவரும் நனைந்து கொண்டே வர வேண்டுமே. இல்லை நானே சென்று விடவா.. அதற்கும் அனுமதிக்க மாட்டார்களே.
சிந்தித்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தேன்.
திறன்பேசி சிணுங்கியது.
“மணி ஆறுக்கு மேல ஆச்சு.. வேலை இருக்கா.. கூப்பிட வரவா” அப்பா அழைத்தார்.
அப்பொழுது தான் நானும் மணி பார்த்தேன். வேலையின் ஈடுபாட்டில் மணி பார்ப்பதை மறந்து இருந்தேன். நேரம் 6.15.
ஜன்னல் வழியே மழையின் வேகத்தை சரிபார்த்தேன்.
“மழை நல்லா வருதேப்பா.. இருங்க நான் டேக்ஸி கூட புக் பண்ணி வந்தட்றேன்”
“நான் வரதுன்னா கூட வரேன் மா”
“இல்லப்பா வேணாம்.. நான் பாக்கறேன் இருங்க”
இணைப்பைத் துண்டித்துவிட்டு டேக்ஸிக்கு அழைத்தேன்.
யாரும் பதில் அளிக்கவில்லை. இணையத்தில் பதிவு செய்ய முயற்சித்தேன். இடத்தை கூறியதும் இங்கே மழையின் காரணமாக சேவை இல்லை என்றனர்.
காலையில் ரசித்த மழை மீது இப்பொழுது கோவம் வந்தது. அலுவக்கத்தில் யாரிடமும் இன்னும் என் கர்ப்பத்தை கூறவில்லை. அதனால் பிறரிடம் உதவி கேட்கவும் தயக்கமாக இருந்தது.
என்னுடைய சீனியர் ஒருவரிடம் டேக்ஸி பற்றி மட்டும் விசாரித்தேன்.
“மழை வந்தா இங்க டேக்ஸி வரதில்லை.. பேசாம ஆட்டோல போய்டு. வெளிலயே ஆட்டோ ஸ்டேண்ட்.. இங்க இருந்து பத்து நிமிஷத்துல வீட்ல விட்ருவாங்க..”
‘இந்த நிலைமைல ஆட்டோல போலாமான்னு தெரிலயே’ மனதிற்குள் குழம்பினேன்.
“ம்மா.. மழை வேகமா வருது.. பேசாம நான் ஆட்டோல வந்தட்றேன்மா”
“ஆட்டோ ரொம்ப குலுங்குமே.. எப்படி வருவ”
“பொறுமையா வர சொல்றேன்மா.. கொஞ்ச தூரம் தான”
“பாத்து வந்துடுவியா.. பொறுமையா ஓட்டச் சொல்லு”
“சரிம்மா”
அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன். பத்து பதினைந்தடி மழையில் நனைந்து ஆட்டோ நிற்கும் இடத்திற்கு வந்தேன்.
என்னைப் பார்த்ததும் ஒருவர் ஆட்டோ வேண்டுமா என்றார் நானும் இறங்கும் இடத்தை கூறிவிட்டு ஏறிக்கொண்டேன்.
“அண்ணா.. பொறுமையா போங்கண்ணா” என்றேன் அவர் தலையை அசைத்து விட்டு வண்டியை எடுத்தார்.
கொஞ்சம் வேகமாக செல்வது போல் தோன்றியது. குண்டும் குளியுமாக இருந்த சாலையில் இன்னும் வேறு மழை நீர் தேங்கி நிற்க வண்டி ஆடிக்கொண்டே சென்றது.
நான் இருக்கையின் நடுவில் அமர்ந்து கம்பிகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.
காற்று வேகமாக வீசியது. இருள் சூழ்ந்திருந்தது. சாலையைப் பார்க்கவே பயமாகத்தான் இருந்தது.
திடீரென வேகமான சத்தத்துடன் குலுங்கியது ஆட்டோ. உடலில் அதிர்வு ஏற்பட்டது. மேலே ஏறி இறங்கியது போல் இருந்தது. அடி வயிற்றில் ஒரு வலி வந்து போனது. கண்கள் கலங்க ஆரம்பித்தன.
“அண்ணா.. பொறுமையா போங்கன்னு சொன்னேன்ல” அழுகையை அடக்கிக் கொண்டு கோவமாக கேட்டேன்.
“ஸ்பீட் பிரேக்கர் இருந்துருக்கு மா.. தண்ணில ஒன்னும் தெரில.. இனிமே பொறுமையா போறேன்” என்றார்.
என் கண்ணில் தண்ணீர் கொட்டியது. மிகவும் வேகமான குலுங்கல். என் வயிற்றில் சிறு வலி ஏற்பட்டது. எதனால் ஏற்பட்டிருக்கும். குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா!
தாங்க முடியாத பாரம் மற்றும் பயம் என்னை சூழ்ந்தது.
வீட்டின் வாசலிலேயே அம்மாவும் தங்கையும் நின்று கொண்டிருந்தனர்.
“வந்துட்டியா.. எனக்கும் அம்மாக்கும் உன் நினைப்பு தான்.. மழை ஒரு பக்கம்.. காத்து வேகமா வீசுது.. அம்மா உள்ளேயே வரல.. இங்கயே நின்னுட்டு இருக்கு” என்றால் அமுதினி
குடையுடன் நின்று கொண்டிருந்த அம்மா என்னை நனையாமல் உள்ளே கூட்டிச் சென்றார்.
“தலை முடிய அவுத்து விடு.. நல்ல தலை துவட்டு.. வேற துணி மாத்து.. சளி பிடிச்சிக்க போகுது.. இரும்பல் வந்தா ரொம்ப கஷ்டம்” அம்மா துண்டில் என்னைத் துடைத்துக் கொண்டே கூறினார்.
அம்மாவை கட்டிக் கொண்டு நடந்ததை கூறினேன்.
“எதுக்கு பயப்பட்றா கவி.. ஒரு டைம் குலுங்குனா ஒன்னும் ஆகாது.. கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காதா” அம்மா எனக்கு தைரியம் சொன்னார். ஆனால் அவர் முகமும் சற்று வாடியதை நான் கவனிக்கத் தவறவில்லை.
“எவன் அவன் அப்படி ஓட்டுனது.. பொறுமையா போ சொல்ல மாட்டியா.. நானே கூப்பிட வந்துருப்பேன்” அப்பாவும் கொதித்தார்.
“ஒன்னும் இல்லப்பா விடுங்க” அப்பாவைத் தேற்றி விட்டு உள்ளே சென்றேன்.
என் மனதில் இருந்த படபடப்பும் பயமுவும் நீங்க வில்லை.
கழிவறைக்குச் சென்று எதுவும் தவறாக நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் போல் இருந்தது.
கழிவறைக்குள் சென்றேன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings