2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
சூரியன் இன்னும் மேலே எழும்பாத முன்விடியல் பொழுது. மணி ஐந்தரை இருக்கும்.. ஜாக்கிங் போக ரெடியாக ஆதர்ஷ் கிளம்பி கீழே வந்தான்..
கீழே கிச்சனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாருவிடம் “இன்னைக்கு காபி வேண்டாம் லெமன் டீ கொடு” என்றான் .
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சூடாக லெமன் டீ யை எடுத்து வந்தாள் பார்வதி.. “அம்மா இன்னும் எந்திரிக்கலையா பாரு?”
“இல்லைங்க ஐயா! இப்பவெல்லாம் அம்மா கொஞ்சம் லேட்டா தான் எழுந்திருக்கிறாங்க.. கால் வலினால நைட்டு தூக்கம் வர கஷ்டப்படுது..லேட்டா தான் தூங்குறேன்னு சொன்னாங்க”
ஆதர்ஷுக்கு அம்மா இரவு சரியாக தூங்குவதில்லை என்று கொஞ்ச நாளாக தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் கால் வலியா அல்லது மனதில் உள்ள குழப்பமா.. ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து அம்மா மனதை வருத்தப்படுத்திக் கொள்கிறாள்.. ஏதோ ஒன்று அவளை மனதளவில் தொந்தரவு பண்ணுகிறது..அம்மாவிடம் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
“சரி பாரு..கதவை தாள் போட்டுக்கோ..நான் ஜாகிங் போறேன்” என்று கிளம்பினான் ..ஒரு மணி நேரம் ஜாகிங், எக்சர்சைஸ், எல்லாவற்றையும் முடித்துவிட்டு! வேர்க்க விறுவிறுக்க உள்ளே வந்தவன், டவலை தேடினான் ..டவலை எடுத்துக் கொண்டு குளிக்க கிளம்பும்போது பரமேஸ்வரன் அங்கே வந்தார்.
“ஆதர்ஷ் !உன்கிட்ட கொஞ்சம் பேசனும் …”
“அவசரமாப்பா ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுத்தீங்கன்னா குளிச்சிட்டு வந்துடுவேன். ஒரே பிசுபிசுன்னு இருக்குது. குளிச்சுட்டு வந்தா பிரஷ்ஷா இருக்கும்.”
“அவசரம் ஒன்னும் இல்லப்பா.. குளிச்சிட்டு வா… நான் வெயிட் பண்றேன் ..”
குளித்துவிட்டு, பிரஷ்ஷாக டிராக்ஸ் பேண்ட், டீ சர்ட்டில் வந்து அப்பாவின் முன் அமர்ந்தான்.
” ருக்மணி இங்கே வா நீயும்.. இங்க வந்து உட்காரு ..அப்புறம் உன்கிட்ட ஒரு தடவ எல்லா விஷயத்தையும் விளக்கி சொல்லி கிட்டிருக்கனும் ..” ருக்மணி மனதிற்குள் திக்கென்றது இவர் என்ன பேசப் போகிறார் ..இவருடைய பீடிகையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது ..கவலை தோய்ந்த முகத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா கம்பெனி விஷயமா?” என்று ஆரம்பித்தான் ஆதர்ஷ்.
“கம்பெனி விஷயம் பேசுறதுக்கு ஒன்னும் இல்லப்பா.. நீ தான் அப்பப்ப அப்டேட் கொடுக்கிற ..இரண்டாவது திறமையாகவும் கம்பெனியை நடத்திகிட்டு போற.. அதனால கம்பெனியை பொருத்த அளவுக்கு எனக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லை ..கம்பெனி ப்ராஃபிட்ல தான் போய்கிட்டிருக்கு.”
“நான் இப்ப பேச போறது உன்னுடைய கல்யாண விஷயம் ..”
“கல்யாண விஷயமா? இப்போ அதுக்கு என்னப்பா அவசரம்? நான் இதை எதிர்பார்க்கல. இப்பதான் பிசினஸ் கத்துக்கிட்டு, ஆக்டிவா இருக்கேன். இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பண்ணச் சொல்றீங்க ..பிஸினஸ் கான்சன்ட்ரேஷன் போயிடும்”
பரமேஸ்வரன் சற்று கடுமையான குரலில், “கொஞ்ச நேரம் நான் சொல்றத முழுசா கேளு. நீங்க அம்மாவும், மகனும் நடுப்பற பேசாதீங்க.. நான் என்னுடைய விஷயத்தை சொல்லி முடிச்ச பிறகு உங்க கருத்தை நீங்க சொல்லலாம்”
“உன்னுடைய கல்யாணம்.. நான் கொஞ்ச நாளா யோசிச்சிட்டிருக்கிற ஒரு விஷயம் தான். தள்ளிப் போடுறது சரி கிடையாது. ரெண்டாவது இது ஏற்கனவே நானும் என்னுடைய பார்ட்னர் ராம்சந்த்தும் முடிவு பண்ணின ஒரு விஷயம் தான். அவரை உனக்கு தெரிந்திருக்கும்”
.’ராம்சந்த் எக்ஸ்போர்ட்ஸ்’ கம்பெனி ஓனர் ராம்சந்த் மிகப் பெரிய பணக்காரர். அவங்க கம்பெனி தமிழ்நாட்டுல நம்பர் டூ வா இருக்குது. நம்மள விட பெரிய லெவல் பிசினஸ் அவருக்கு இருக்கிறது .அவருக்கு ஒரே பொண்ணு.. பேரு காவ்யா ..அவர் உன்னை பத்தி கேள்விப்பட்டிருக்காரு. ரொம்ப நல்ல விதமாக நீ பிஸினஸை ஹேண்டில் பண்றது அவர ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு.”
” நீ தான் ,தனக்கு மாப்பிள்ளையாக வரணும்னு நினைக்கிறாரு. அதனால அவரே பிரியப்பட்டு என்னிடம் கேட்டார். எனக்கும் ரொம்ப சந்தோஷம் ..அந்தப் பொண்ணு காவ்யாவும் அழகா இருப்பா, உனக்கு பொருத்தமா இருப்பா.. நல்ல படிச்சிருக்கா.. முக்கியமா அவ்வளவு சொத்துக்கும் அவ ஒரே வாரிசு. “
“நானும், ராமச்சந்த்ம், நேத்து சாயங்காலம் பேசிகிட்டிருந்தோம் . அப்ப அவரும் அவருடைய பொண்ணு கல்யாணத்தை சீக்கிரமே முடிகிறதுங்கறதில தீர்மானமாய் இருக்காரு. நமக்கு சம்மதம்ன்னா . இன்னொரு 15 நாள்ல உங்களுடைய கல்யாண அறிவிப்பை அவர் வெளியிட நினைக்கிறாரு. அப்பதான் அதற்கப்புறம் நிச்சயதார்த்தம், கல்யாணம்னு, பிரம்மாண்டமா ஏற்பாடுகளை பண்றதுக்கு வசதியா இருக்கும்ன்னு சொன்னாரு
முன்னாடியே முடிவு பண்ணாத்தான் நிறைய விஐபிகளை இன்வைட் பண்ண வசதியா இருக்கும். நிறைய மினிஸ்டர்ஸ் கூப்பிட போறாரு..சி.எம் கூட கலந்துக்குவாருன்னு சொன்னாரு. அதனால ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கு .. பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணனும்… இப்பவே தேதியை முடிவு பண்ணினாத்தான் சரியா இருக்கும்னு சொன்னாரு. நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசிட்டு தேதியை சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.”
அதிர்ந்து போனான் ஆதர்ஷ்….
“அப்பா கொஞ்சம் கூட என்னால இத ஜீரணிக்க முடியல.. என்னுடைய கல்யாணத்தை பத்தி நீங்க பேசுறீங்கப்பா.. எனக்கே தெரியாம என்கிட்ட கலந்துக்காம, நீங்களே பேசி முடிவு பண்ணி ஒரு பெண்ணையும் ஏற்பாடு பண்ணிட்டு, சாவகாசமா ஏதோ ஒரு சாதாரண பிஸினஸ் முடிவ எங்க கிட்ட சொல்ற மாதிரி சொல்றீங்க …”
“ஆதர்ஷ் ..இந்தா இருக்கற உங்கம்மா, இவளை என்கிட்ட கேட்டுகிட்டா எங்கப்பா கல்யாணம் பண்ணி வச்சாரு.. கட்டுடா தாலியைன்னு சொன்னாரு.. கட்டினேன் .சம்மதத்தை கேக்குறது அவசியமில்லைன்னு எனக்கு தோணுச்சு.”
“அம்மாவை நீங்க கல்யாணம் பண்ணினது அந்தக்காலம்.. இப்போ என்னுடைய முடிவு, என்னுடைய சம்மதம், அவசியம். என் மனசுல என்ன இருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? என்னுடைய விருப்பம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா …?”
“இதைவிட அருமையான, உனக்கு பொருத்தமான பெண்ணை.. உன்னால கூட தேடி கண்டுபிடிக்க முடியாது. என்னுடைய செலக்ஷன்.. நீ என்ன குற்றம் கண்டுபிடிச்சிட்ட? நீ அந்த பொண்ணா பார்த்திருக்கியா ..? இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தால், நம்ம ரெண்டு கம்பெனியும் சேர்ந்து நம்பர் 1 இடத்துக்கு எக்ஸ்போர்ட்ல வந்திடுவோம். நீ எக்ஸ்போர்ட் கம்பெனில முடிசூடா ராஜாவா இருப்ப ..மேலும் இந்த சின்ன வயசுல எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிகள் சங்க தலைவராக ஆக உண்டான வாய்ப்பு கூட உனக்கு நிறைய இருக்கு ..ரெண்டு கம்பெனி சப்போர்ட்டர்ஸ் உனக்குத்தான் ஓட்டு போடுவாங்க”
“சோ.. நீங்க எனக்கு கல்யாணம், குடும்பம் நடத்துவதற்கு, பொண்ணு பார்க்கல.. உங்க பிசினஸ் நம்பர் 1 ஆக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை பார்க்கிறீங்க. அதுல ஒரு பகடைக்காயாக என்ன யூஸ் பண்ணுறீங்க.. அப்படித்தானேப்பா “
அதுவரை பொறுமையாக பேசிய பரமேஸ்வரன் பொறுமை இழந்தார்.
“அப்படித்தாண்டா.. வச்சுக்கோ.. அப்படித்தான்… இப்ப நான் சொல்றேன் நீ இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுற…இது கண்டிப்பா நடக்கும் .இது நடக்கலைன்னா யாரையும் உயிரோட விட மாட்டேன் ..அப்படி உனக்கு எவளையும் புடிச்சிருந்தா அவளை வப்பாட்டியா வச்சுக்கோ ..ஒன்னு இல்ல எத்தனை வேணாலும்.. அதை நானே ஏன்னு கேக்க மாட்டேன். ஆனா உனக்கு பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு மருமகள்ங்கற அந்தஸ்தில் வர்றவ அந்த பொண்ணா மட்டுமாத்தான் இருக்கனும்… இருக்க முடியும். என்ன பத்தி உனக்கு அதிகம் தெரியாது. இந்த விஷயத்துல நான் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்க அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ என்ன பத்தி ..அடுத்த பதினைந்து நாள்ல உனக்கும் காவ்யாவுக்கும் நிச்சயதார்த்தம் …ரெண்டு மாசத்துல ராமச்சந்த் குறிக்கிற தேதியில உங்க கல்யாணம் நடக்கும். இதுக்கு மனச தயார் பண்ணிக்கோ” என்றவர் விறுவிறுவென்று கீழே இறங்கினார் ..போகும் முன் …
“வர்ற வெள்ளிக்கிழமை நீயும், உங்கம்மாவும், சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியா இருங்க.. நாம ராம்சந்த் வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறோம் .”
அதிர்ந்து போய் நின்றார்கள் அம்மாவும் மகனும் …
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings