2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
வேளச்சேரியில் ஜெய் வீடு மதிய சாப்பாடு முடித்து, ஞாயிறின் சோம்பலான மாலைப்பொழுதில் குடும்பமே அயர்ந்து கிடந்தது.
கிர்ர்ர்…காலிங் பெல் அடிக்க …ஷைலு வெளியே எட்டிப் பார்க்க கொரியர் ..ஜெய் பெயருக்கு கொரியர் வந்திருந்தது …
“டேய் அண்ணா.. சீக்கிரமா வா.. உனக்கு ஏதோ ஒரு பார்சல் வந்திருக்கு .. ” தங்கையின் குரல் அவனை எழுப்பியது.
“ஏண்டி ! ஞாயிற்றுக்கிழமை மதியம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டீர்களா?” என்று அலுத்துக் கொண்டே எழுந்து வந்தவன், வெளியே வந்து கையெழுத்துப் போட்டு பார்சலை வாங்கினான்.
” அண்ணா பிரிச்சு பாரு ..யாரு அனுப்பியிருக்கான்னு…”
அவனுக்கு சந்தேகமாக இருந்தது. இந்த நேரத்தில் யார் என்ன அனுப்பி இருப்பாங்க… என்று யோசித்தவன் தங்கையிடம்,
“ஏதாவது புக்ஸ் இருக்கும்.. நான் ஜெபாகிட்ட அவனுடைய பழைய புக்ஸ் அனுப்பச் சொல்லியிருந்தேன்.அவன் அனுப்பி இருப்பான்..”என்று சொல்லிக்கொண்டே பார்சலுடன் தன் அறையை நோக்கி நடந்தான் .
கதவை அடைத்துக்கொண்டு பார்சலை பிரித்தான். உள்ளே புத்தம்புது அழகிய டிரஸ் ..அழகான ஒரு குர்த்தாவும் அதற்கு மேட்சாக ஒரு பேண்டும்…பார்த்தாலே விலை மிக அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. கீழே ஒரு சீட்டில் “என் அன்புக்குரியவனுக்கு, அன்புடன் காவ்யா…”என்றிருந்தது.
ஒரு கணம் அந்த டிரஸ்ஸை அப்படியே எடுத்து அணைத்துக் கொண்டான் ..காவ்யா என் காவ்யா.. எவ்வளவு யோசனையோடு.. தன்னிடம் ஒரு நல்ல டிரஸ் இல்லை என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்த பரிசை அனுப்பி இருக்கிறாள். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் தனக்காக எவ்வளவு யோசிக்கிறாள். மனம் முழுக்க அவள் நினைவு சந்தோஷத்தை நிரப்பியது.
ராதிகா போன் பண்ணினாள் ..”ஜெய்…பார்ட்டி 7 மணிக்கு நாம ஆறு மணிக்கு கிளம்பினா சரியாயிருக்கும்…நாங்க சிக்ஸ்க்கு உன் வீட்டுக்கு வந்திடுறோம்… நீ ரெடியா இரு… நாம கொஞ்சம் சீக்கிரம் போனா காவ்யாவை பார்க்கலாம்.. டைம் ஸ்பென்ட் பண்ணலாம்.. லேட்டாயிடுச்சுன்னா கெஸ்டுகள் வந்துருவாங்க ..”
“ஓகே ராதிகா.. நான் ரெடியா இருக்கேன்.”
“நம்ம பிரண்ட்ஸ் சார்பில் ஒரு பொக்கே வாங்கிட்டு வந்துடறோம்… ஒரு பெரிய பர்த்டே கார்டும் வாங்கி நம்ம எல்லார் பேரையும் எழுதிட்டோம்.”
6 மணிக்கு ராதிகா மற்றும் பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து 20 பேர் ஜெய் வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்து கிளம்பி காவ்யா வீட்டை அடைந்தபோது மணி ஆறரை ஆகியிருந்தது ..
பங்களா முழுக்க விளக்கொளியில் ஜொலித்தது. லானில் நிறைய லைட்டுகள் போடப்பட்டு மயன் மாளிகையாய் மின்னியது. நடுவில் பெரிய வட்ட வடிவ மேஜையில் ..கேக் ரெடியாக வைக்கப்பட்டிருந்தது.
உள்ளே நுழைந்த ஜெய்யின் கண்கள் காவ்யாவை தேடின.. அப்போது அங்கே மாலினி தேவி வர, எல்லோரும்,” வணக்கம் ஆன்ட்டி ..”என்று விஷ் பண்ண..” காவ்யா எங்க ஆன்ட்டி இன்னும் ரெடியாகலையா …?”
“ரெடியாயிட்டா இப்ப கீழ வந்துடுவா” என்று கூறி முடிக்கும் முன் தேவதையாய் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் காவ்யா. அழகான ரோஜா நிற வண்ணமும், இளம் பச்சை கலந்த வேலைப்பாடு மிக்க அழகான உடையில், தேவதையாய் காட்சியளித்தாள் ..அந்த உடையும் அதற்கேற்ற அவளுடைய மிதமான நகைகளும், அவளைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது.
ஜெய் ஸ்தம்பித்துப் போய் அவளைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். ..நகுல் லேசாக அவனை இடித்தவன், ” பார்வையாலேயே அவளை முழுங்கிடாத.. அவ அப்பா அம்மா எல்லாரும் நம்மளத்தான் பாத்துட்டு இருக்காங்க .”.ஹேய் காவ்யா” என்று கத்தியவர்கள்… “ஓ” வென்று சத்தமிட “ஹாப்பி பர்த்டே டூ யூ டியர்” என்று அவளை கையைப்பிடித்து சுற்ற, காவ்யாவின் அப்பாவும்,அம்மாவும் முகத்தைச் சுழித்தார்கள்.
காவ்யாவின் கண்களும் குறிப்பாக ஜெய்யை பார்க்க, அவன் அவள் கொடுத்த பரிசு …அந்த குர்தா, பேண்டில் ராஜாவாய் கம்பீரமாக இருந்ததை பார்த்து புருவத்தை உயர்த்தி நன்றாக இருக்கிறது என்று சமிக்ஞை செய்தாள் .. .பேச எத்தனையோ விஷயங்கள் இருக்க.. இருவர் மனதும் துடிக்க..சுற்றுப்புற சூழலை எண்ணி இரண்டு பேரும் கண்ணால் மட்டுமே பேசிக் கொண்டார்கள் …
“ஹாய் காவ்யா.. யூ லுக் சோ பியூட்டிஃபுல் ..இந்த டிரஸ் உனக்கு அவ்ளோ பியூட்டிஃபுல்லா சூட் ஆகுது…”
அம்மாவின் வற்புறுத்தலுக்காக அவள் போட்டிருந்த வைர நெக்லஸ்..பிரேஸ்லெட்…ஜிமிக்கி கூட இன்னும் அவள் அழகை எடுப்பாக காட்டியது. அந்த மின் விளக்குகளின் வெளிச்சத்தில் அவை டாலடித்து முற்றிலுமாக அவளை அழகு தேவதையாக காட்டியது.
வாயடைத்துப் போனான் ஜெய். அவளுடைய வீடு இல்லை பங்களாவை முதல் முறையாக பார்க்கிறான் ..அவள் பின்னால் இருந்த அந்த பங்களா ..பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பலவகை உயர் ரக கார்கள் எல்லாம் அவளுடைய ஸ்டேட்டஸ் என்ன என்பதை அவனுக்கு நிர்தாட்சண்யமாக உணர்த்தியது .எப்பேர்பட்ட பெரிய இடத்துப் பெண் இவள்..அந்தஸ்தைப் பற்றி கவலைப்படாமல் என் மேல் எவ்வளவு அன்பாக இருக்கிறாள். எதற்காக என் அன்பில் இப்படி விழுந்து கிடக்கிறாள் என்று முதல்முறையாக தோன்றியது.
கண்களில் துளிர்த்த கண்ணீர் மறைக்க, அவன் தலையை குனிந்து கொண்டான் ..ஓரக்கண்ணால் அவன் உணர்வுகளை கவனித்த காவ்யா மெதுவாக நகர்ந்து, ராதிகாவின் அருகில் நின்றவாறு அவளிடம் பேசிக்கொண்டே ஜெய்யின் கையைப் பிடித்து அழுத்தினாள்.அவனை அணைத்து சமாதானப்படுத்த மனம் துடித்தது ..
அதற்குள் அவள் அப்பா ராம்சந்தர் ” காவ்யா! உன் பிரெண்ட்ஸ் எல்லாரையும் போய் உட்காரச் சொல்லு .மினிஸ்டர் வந்திருக்காரு.. நிறைய பிசினஸ் பீப்பிள் வந்திருக்காங்க. நீ என்கூட வா.. உன்னை இன்டர்டியூஸ் பண்ணுறேன்.. அவங்க எல்லாம் உனக்காக காத்துகிட்டிருக்காங்க..” என்றார் எரிச்சலோடு.
அவர் காவ்யாவின் நண்பர் கூட்டத்தை ஒரு ஏளனப் பார்வை பார்க்க.. அவர்கள்..
” காவ்யா நீ போ.. நாங்க எல்லாரும் அங்க உக்காந்திருக்கோம் கேக் கட் பண்ணும் போது வர்றோம்” என்று சொல்லிவிட்டு பின் வரிசையில் இருந்த மேஜை நாற்காலியில் போய் அமர்ந்தார்கள் ..
முன் வரிசையில் எத்தனையோ பெரிய பெரிய ஆட்கள் ஜட்ஜ், காவல்துறை அதிகாரிகள், பிசினஸ் பீபிள், வக்கீல்கள், என பிரபலங்கள் நிறைய பேர் இருக்க, தாங்கள் அங்கு இருப்பது சரி கிடையாது என்று ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்தார்கள். காவ்யாவின் கண்கள் ஏக்கத்தோடு நண்பர் கூட்டத்தைப் பார்த்தது ..
ஜெய் மனசு குழப்பத்தில் ஆழ்ந்தது. தான் அவளை விரும்புவது சரியா? காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. அதனால்தான் இவ்வளவு பெரிய பங்களாவும் இவ்வளவு கார்களும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை.. காவ்யாவும் அவளுடைய எதிர்பார்ப்பில்லாத உண்மையான அன்பு மட்டுமே தெரிந்தது. மனதுக்குள் ஒரு வேதனை புரண்டது.
அவனுடைய முகமாறுதல்களை கவனித்த திலீப்..
” என்ன பாஸ்! இவங்க அலப்பறைகளை பார்த்து பயந்துட்டீங்களா? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க! காவ்யா நம்ம பக்கத்துல இருக்கிற வரைக்கும் இவங்க எல்லாரையும் நாம சமாளிச்சுடலாம்..” என்றான் ஆறுதலாக.
அவர்கள் பின்னே அமர்ந்திருந்த ஒரு கூட்டம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் ..”ராம்சந்த்தோட பொண்ணு காவ்யா படிச்சு முடிக்கப் போறா..கடைசி வருஷப் படிப்பு பாக்கி இருக்கிறதா கேள்வி. ..இருந்தாலும் அவர் பொண்ணுக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணிட்டாரு போல தெரியுது. அனேகமா இன்னைக்கு பிறந்தநாள் விழாவில் கூட மாப்பிள்ளை யாருனு அறிவிக்கலாம்.. அதுக்காக தான் முக்கியமான விஐபி நிறைய பேருக்கு அழைப்பு போல தெரியுது…”
“மாப்பிள்ளை யாராயிருக்கும்…கண்டிப்பா ஒரு பெரிய பிசினஸ்மேனுடைய பையனாத் தான் இருப்பான்… இல்ல வெளிநாட்டில் படிச்சிட்டு வந்தவனாயிருப்பான் ..எப்படியும் ராம்சந்த் சொல்லுவார்.. அப்ப கேட்டுக்குவோம்” என்றார் இன்னொருத்தர்..
நொறுங்கிப் போனான் ஜெய். . ..
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings